திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -95-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்——————-95-

——————————————————————————-

அவதாரிகை –

இதில்
பக்திமான்கள் பரிமாற்றத்தை
சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
ஈஸ்வரன் தம்மை பரம பதத்திலே
கொடுபோகையிலே
த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது
என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும்
இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று
பாசுரப் பரப்பு அறச்
சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை
சம்சாரிகளுக்கு உபதேசித்து
பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை
கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

கண்ணன் அடி இணையில்-
கிருஷ்ணன் திருவடிகளிலே

காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –

திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-

சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –

மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –

தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே
பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை
பரிசமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஆழ்வார் –
பகவத் பிரபாவம் சீதை சொல்லி நிகமிக்க பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்

ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்

தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-

கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி-
மாதவன் -என்று த்வயமாக்கி-கரணத்ரய பிரயோஜன வ்ருத்தி
சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: