திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -92-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—————92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே -அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

———————————————————————————

இதில் –
பரமபதத்தில் செய்யும் அடிமையை
திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
குறைவறப்- பரம பதத்தினில் போனால்-
வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை
நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான்
எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான
திருவனந்த புரத்திலே
திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற
பரம பிராப்ய பூதரான
ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய்
அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை
கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————

வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே
நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான
ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க
ரஹிதமான
ஸ்ரீ வைகுண்டத்தை
என்னுதல்-
கிட்டினால் போல் –
அத்தை பிராபித்து
அடிமை செய்யப் பெற்றால் போலே
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே
ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்
படமுடை அரவில் பள்ளி பயின்ற
சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும்
கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –
படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான
பரம ஆகாசத்திலுள்ளராய்
கோயில் கொள் தெய்வங்களான
திருவடி
திருவனந்த ஆழ்வான்
ஸ்ரீ சேனாபதி ஆழ்வான்
தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் –
இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று
விஸ்மயப்ப்படும்படி
சேஷசாயியாய்
ஸ்ரீ யபதியான
சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஆழ்வார் –
இவரும் ஒருவரே -என்று
இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

———————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: