திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -91-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்———————-91-

————————————————————-

அவதாரிகை –

இதில்
நாள் இடப் பெற்று
வழித் துணையோடு போக ஒருப்படுகிற
ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று
சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு
மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
அர்ச்சிராதி மார்க்கத்தாலே
பரமபதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான
யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே
குளிர வழிய வார்த்து
யமபடருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி
செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யமதர்சனத்தால் வந்த வெக்காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு
வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே
பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்
திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் –
முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான
அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற
தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

வியாக்யானம்–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காளமேகத்தைக் கதியாக்கி –
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு
தானே மார்க்க பந்துவாம் –
ஆதி வாஹிகர் கையிலும் காட்டிக் கொடாதே
துன்னு குழல் கரு நிறத்தன் என் துணையே -என்கிறபடியே
சுரி குழல் கமல கட்கனிவாய் காளமேகத்தை அன்றி
மற்று ஒன்றிலம் கதியே -என்ற-காளமேகம் தானே
நயாமியில் படியே -நடத்தும் –
தாள் அடைந்தோர் -என்கிற இதில் –
தாமும் அந்தர்பூதர் – இறே –

காளமேகத்தை கதியாக்கி –
சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி
சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான காளமேகத்தை
வழிக்கு ரஷகமான கதி ஆக்கி –
அதாவது –
அவன் நிழல் தடம் அன்றி அறியோமே -என்றும்
அண்ட மூ வுலகு அளந்தவன் -என்றும்
கூத்தன் கோவலன் திரு மோஹூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -என்றும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
மணித்தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள்
நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் -என்றும்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -என்றும் –
இப்படி வழிக்கு வேண்டும்-நிழல் தடங்கள் முதலானவை எல்லாம்-தானே யானவன் -என்கை –

அக்ரத ப்ரய யௌ ராம -என்று
அவர் முன்னே போக –
மன்னன் இராமன் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு
அவர் தோள் நிழலை அண்டை கொண்டு நடந்தால் போலே-நடக்கப் பாரிக்கிறார் இறே-
மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் –
குடி மன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்னும்படி
மீளுதல் ஆகிற தோஷம் இன்றிக்கே
நசபுனராவர்த்ததே -என்றும்
புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
மீளாப் பொருவரிய விண்ணாடு -என்றும்
மீட்சி இல்லா நாடு -என்றும் சொல்லப்படுகிற
பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
எழுந்து அருள மனனம் பண்ணுகிற
மோஷ லஷ்மியை உடைய
மாறன் -என
ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

கேதம் உள்ளது எல்லாம் கெடும் –
மனக்கேதம் சாரா -என்னும்படி
துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-

———————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: