திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -87-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்————87-

—————————————————————————-

அவதாரிகை –

இதில்
வடிவு அழகு பற்றாசாக
தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில்
பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து
அவனுடைய சௌந்தர்யத்தாலே
அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று
கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை
அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

—————————————————————————

வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி –
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது –

மால் ஏய்ந்த வடிவு அழகு என்று –
சர்வேஸ்வரன் உடைய
ஸ்வரூப அனுபந்தியாய்
அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –

அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் –
அத்தசையில்
அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக –
அவ்விடத்தில்
அவன் விஷயமாக
திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன்-
யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்னும்படி
சர்வ திக்குகளிலும் உண்டான
பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக
தூத பரேஷணம் பண்ணும் ஆழ்வார் –

அதாவது –
செங்கால மட நாராய் -என்று தொடங்கி –
என் குடக் கூத்தர்க்கு என் தூதாய் -என்றும்
அமர் காதல் குருகினங்காள் -என்று தொடங்கி

தமரோடு அங்கு உறைவாருக்கு தக்கிலமே கேளீரே -என்றும் –
தக்கிலமே கேளீர்கள் -என்று தொடங்கி-கொக்கினங்காள் குருகினங்காள் செக்கமலத் தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய்
அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கு -என்றும் –
திருமேனி யடிகளுக்கு என்று தொடங்கி -மாதரைத் தன மார்பகத்தே வைத்தார்க்கு -என்றும்
திரு மூழிக் களத்து உறையும் பங்கயச் சுடர் பவள வாயனைக் கண்டு -என்றும்
புனம் கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கு -என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -என்றும்
என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கு -என்றும்
இப்படி
பூம் துழாய் முடியார்க்கு-என்னும் அளவும்
வடிவு அழகு பற்றாசாக
பல பஷிகளைத் தூது விட்டார் -என்கை-

நம் பிழையும்
சிறந்த செல்வமும்
படைத்த பரப்பும்
தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா
தீஷா
ஸாரஸ்ய
சௌந்தர்யங்களை
யுணர்த்தும்
வ்யூஹ
விபவ
பரத்வத்வய
அர்ச்சைகள்
தூது நாலுக்கும்
விஷயம் -என்று இறே-ஆச்சார்ய ஹிருதயத்தில்
நாயனாரும் அருளிச் செய்தது –

அபராத சஹத்வாச்ச விபோஸ் சம்பந்த வைபவாத்
ஐகரச்யாச்ச சௌந்தர்யாத் கடக அனயாதசே முனி -என்று இறே
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்தது

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-
ஆழ்வார் திருவடிகள் ஆனவை
தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை
தானே சேதித்துப் போகடும் –
துடர் அறு சுடர் அடி -போலே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: