திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -86-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு———-86-

என்னால் -என் நா என்றுமாம்

——————————————————————————————

அவதாரிகை –

இதில்
ஆழ்வார் உடைய
அப்ரீதிகர்ப்ப
குண அனுசந்தானவித்தராம்
ஸ்ரீ ஸூ க்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு
நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி
ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி –
ஹ்ருதயா ந்யாமமன் தேவ ஜனச்ய குணவத்தயா-என்னும்படி
உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து
என்னுடைய மனசானது
த்ரவ்யத்ரவ்யம் போல்
உருகா நின்றது –

பெருகுமால் வேட்கை எனப்பேசி –
அதுக்கு மேலே
அபி நிவேசமும் மிக்கு
வாரா நின்றது என்று
அருளிச் செய்து —

மருவுகின்ற இன்னாப்புடன் –
கீழே
ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு
அந்த அனுவ்ருதமான
வெறுப்போடு-

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் –
அவனுடைய
இருத்தும் வியந்திலே
அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை
திரு உள்ளத்திலே பொருந்த
அருளிச் செய்த-

அதாவது –
உருகுமால் நெஞ்சம் -உயிர் பாட்டாய்
அத்தைப் பின் சென்று
நினை தொறும்-என்று தொடங்கி –
நினைகிலேன் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே -என்றும்
நீர்மையால் கார் முகில் வண்ணன் தன் கலவம் அறிகிலேன் -என்றும்
அறிகிலேன் –சிறிய என் ஆர் உயிர் உண்ட திருவருளே -என்றும்
திருவருள் செய்பவன் போலே –கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே -என்றும்
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் –என் கண்ணன் என்றவன் காட்கரை யேத்துமே -என்றும்
என் ஆர் உயிர் கோள் உண்டே –காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் -என்றும்
கோள் உண்டான் அன்றி ஆளன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே -என்றும்
தெய்வ வாரிக்கு இங்கு எனது உயிர் பட்டது அங்கு ஆர் உயிர் பட்டது -என்றும்
வாரிக் கொண்டு பருகினான் -கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -என்றும்
இப்படி
அவன் தாழ நின்று பரிமாறின
சீலாதி குணங்களிலே
சிதில அந்த கரணராய் அருளிச் செய்த
ஸ்ரீ ஸூக்தி -என்கை –

இப்படி ஈடுபாட்டை யுடையராய்
அருளிச் செய்த இச் சொல்லை –
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு –
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –

எல்லா விடத்திலும்
நாவினால் நவிற்று –குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –

அன்றியே
என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்
ரசஞ்ஞனான என்னாலே
சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

———————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: