திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -85-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—————–85

———————————————————————————

அவதாரிகை –

இதில் –
ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே
அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்டு
அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்
அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான
லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே
ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல்
இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை
இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————————————

வியாக்யானம்–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று –
கீழில் திருவாய் மொழியில்
நரசிங்கமதாய உருவே -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்றும்
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து -என்றும் அருளிச் செய்தவை –
மானஸ சாஷாத்காரம் மாத்ரமாய்
ப்ரத்யஷ சாஷாத்காரம் அல்லாமையாலே
இத்தசையில் எனக்குத் தாரகனான சர்வேஸ்வரன்
சாஷாத் கரித்தது
மானஸ ஞான விஷயம் என்று –
கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி
அது லபியாமையாலே
பும்ஸ்த்வம் குலைந்து
ஸ்த்ரீத்வபத்தியைப் பஜித்து-

பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் –
இப்படி
ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்
அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும்
ரூபவத்தையாலும்
ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே
விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான
பஷி சமூஹங்களாலும்
மேக சமூஹங்களாலும்-
தான் தளர்ந்த –
தான்யே வார மணீ யாநி -என்னும்படி-அசஹ்யமாய்
மிகவும் பாரவச்யத்தை அடைந்த –
அதாவது –
இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடை காள்-என்றும்
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் -என்றும்
எவம் சொல்லிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே -என்றும் –
மேற் கிளைக் கொள்ளேல் மின் நீரும் சேவலும் கோழி காள்-ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே -என்றும்
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ -என்றும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன்குரல்-நீ மிழற்றேல்-நின் பசும் சாம நிறத்தனன் கூட்டுண்டு நீங்கினான் -என்றும்
கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்காள்-காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலன் -என்றும்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் பண மிழற்றேன்மின்-புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன் குரல் -என்றும்
நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி -என்றும்
இப்படி
ரூப தர்சனத்தாலும்
நாம சங்கீர்த்தனத்தாலும்
பிரணய கூஜிதத்தாலும்
மிகவும் தளர்ந்து
ஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை –
இப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –
மாறன் அருள் –
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான
ஆழ்வார் கிருபையை –

உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்-
அனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —
இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்

மாறன் உரை உன்னும் அவர்க்கு –
என்ற பாடம் ஆனபோது
ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று
மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தைபின் சென்ற படி என்றாகவுமாம் –

————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: