திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -83-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை—————83-

————————————————————————————-
அவதாரிகை –

இதில்
சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஆழ்வார் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –
நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான நாராயணத்வ பிரயுக்தமான
ரக்த ஸ்பர்சம் –
ஆனபின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும்
செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே
எனது சிறுமை பாராதே
இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று
அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை
ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை-

——————————————————————————————

வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் –
ஓரா -ஓர்ந்து
அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து –
நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம்
என்னுதல்
அன்றிக்கே
நீர் அர்த்திதவற்றை எல்லாம்
இன்னது உபகரிக்க வேணும்
இன்னது உபகரிக்க வேணும்
என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்
நாமே அர்த்திகளாய் செய்கிறோம் –

அதுக்கு உடலாக –
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக் காட்ட-
ராமோ நாராயண ஸ்ரீ மான் -என்னும்படி
சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று
அத்தாலே
பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட -அத்தை –
ஓர் ஆயிரம் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன்
நாராயணன் நாங்கள் பிரான் அவனே –என்று அனுசந்தித்து –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் –
அதாவது –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்றும்
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -என்றும்
விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே -என்றும்
இனமேதுமிலானை அடைவதுமே-என்றும்
என் மனம் உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே -என்றும்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்றும்
நின்ற வேங்கடம் நீண் நிலத்து உள்ளது -என்றும்
தொழுது எழுதும் என்னுமிது மிகை -என்றும்
தாள தாமரையான் -என்று தொடங்கி-நாளும் என் புகழ் கோ சீலமே -என்றும்
சீலம் எல்லை இலான் -என்றும்
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலேஆழம் கால் பட்டு
அருளிச் செய்த ஆழ்வார் அருள் உண்டு –
கிருபை –

அந்த கிருபை –
மாட்டி விடும் நம்மனத்து மை –
நம்முடைய அஞ்ஞானத்தை
நிச்சேஷமாகப் போக்கும் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று
பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே
சேஷியாதபடி
நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

——————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: