திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -78-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து ——————78-

—————————————————————————

அவதாரிகை –

இதில்
ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை எம்பெருமான்
காட்டக் கண்டு
பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு
எதிர்தட்டான தம் சிறுமையை
அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து
நம்மை விட்டு அகலவும் கூடும்
அதுக்கு இடம் அறும்படி
ஜ்ஞானனந்த லஷணமாய்
நித்யமாய்
ஸ்ரீ ஸ்தனம் போலேயும்
ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
நமக்கு நித்ய போக்யமுமாய்
காணும் இவ்வாத்மஸ்வரூபம் இருப்பது -என்று
ஆத்மஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற
கண்கள் சிவந்தில் அர்த்தத்தை
கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————————————

வியாக்யானம்–

கண் நிறைய வந்து கலந்த மால்-
கண்ணும் வாயும் துவர்ந்த
இவருடைய கண் நிறையும் வந்து சம்ச்லேஷித்த
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் –

இக்கல்வி –
இருத்தும் வியந்தில்
இருந்த சம்ச்லேஷம் –

திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து —
திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக
வேணும் என்று எண்ணி –

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட –
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்து
போருகிற
ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –

ஆய்ந்து உரைத்தான் –
ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை
ஆராய்ந்து அருளிச் செய்தார் –
அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -உரைக்காமல்– ஆராய்ந்து உரைத்து –
பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –
அதாவது –
தாசஸ்து-என்றும்
தாசோஹம் -என்னும் படியும்
கண்கள் சிவந்து -என்று தொடங்கி -அடியேன் உள்ளான் -என்றும்
அடியேன் உள்ளான் -என்று தொடங்கி -உணர்வில் உம்பர் ஒருவனே -என்றும்
உணர்வில் உம்பர் ஒருவனே -என்று தொடங்கி -என் உணர்வினுள் இருத்தினேன் -என்று
இரண்டரைப் பாட்டாலும் தனக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே சேஷமாய் இருக்கிற படியையும்
உணர்வைப் பெற ஊர்ந்து -என்றும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து
என் உயிரினில் உணர்வினில் நின்ற
ஒன்றை யுனர்ந்தேனே -என்றும்
நன்றாய் ஞானம் கடந்தே -என்றும்
தெருளும் மருளும் மாய்த்தோமே -என்றும்
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வமும்
ஜ்ஞாத்ருத்வாதிகளும்
போக்யதையும்
ஜ்ஞானானந் தத்வமும்
முதலாக அருளிச் செய்தவை -என்கை –

அது காட்ட -வாய்ந்து உரைத்தான் -காரி மாறன் தன கருத்து –
ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை
எம்பெருமான் காட்ட
அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே –
என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து
அருளிச் செய்யும்படி யாயிற்று
ஆழ்வார் திரு உள்ளக் கருத்து –
என்னுதல் –
அப்போது -ஆய்ந்து உரைத்த காரிமாறன் தன் கருத்து -என்றாகக் கடவது –

—————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: