திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -75-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்—————75-

——————————————————————————

அவதாரிகை –

இதில்
அவனுடைய வடிவு அழகை அனுபவியாமல்
அழுத ஆழ்வார்
ஆர்த்தி அதிசய ஸூசக ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானச அனுபவ மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மிகவும் நோவு பட்டு
காட்டுத் தீ கதுவினால் போலே
பரிதப்த சித்த காத்ரராய்
அவயவ சோபை
ஆபரண சோபை
ஒப்பனை அழகு
இவற்றுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம்
இவற்றின் உடைய வைலஷண்யத்தை
பல படியாக வர்ணித்துக் கொண்டு
பெரும் கூப்பீடாக கூப்பிடுகிற மாயக் கூத்தனில் அர்த்தத்தை
மாயன் வடிவு அழகை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————————-

வியாக்யானம்–

மாயன் வடிவு அழகைக்-
சௌந்தர்ய
சீலாதிகளால்
ஆச்சர்யமான அவன்
விக்ரஹ சௌந்தர்யாதிகளை –
கர்மாபிதப்தா பர்ஜந்யம் ஹ்லாதயந்த மிவப்ரஜா -என்னும்படி அனுபவிக்க —

காணாத வல் விடாய்-
கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்றும்
மெய்க் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே -என்றும்
இப்படி பாரிப்பை யுடைய கண்களின் விடாய் தீரப் பருகப் பெறாமையாலே –
பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே
மிக்க விடாயை யுடையராய் –

யது அற விஞ்சி –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும்
துவர்ந்து
பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி
கடல் போலே
அது அபி விருத்தமாய் –

அத்தாலே
அழுதலுற்றும் –
அழுது
அலற்றும் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே
பாலரைப் போலே அழுது
அடைவு கெடக் கூப்பிடும் –
அதாவது –
வாசத் தடம் போல் வருவானை ஒரு நாள் காண வாராய் -என்றும்
கரு மா மாணிக்க நாள் நல் மலை போலே சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே
இரங்கி ஒரு நாள் நீ அந்தோ காண வாராய் -என்றும்
முடி சேர் சென்னி யம்மா -என்று தொடங்கி பெருமானே என்று என்று ஏங்கி அழுதக்கால்-
படி சேர் மகரக் குழைகளும் -என்று தொடங்கி -தூ நீர் முகில் போல் தோன்றாயே-என்றும்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும்
நல் தேர் தனிப் பாகா வாராய் இதுவோ பொருத்தம் -என்றும்
இருஞ்சிறைப் புள்ளதுவே கொடியா உயரத்தானே –உன்னை எங்கே காண்கேனே -என்றும்
இப்படி
கதா த்ரஷ்யாமி ராமஸ்ய வதனம் புஷ்கரேஷணம் -என்னும்படி

அழுது அலற்றி -தூய புகழ் உற்ற –
சௌந்தர்யாதிகளை
அனுபவிக்கப் பெறாமையாலே
அழுது
அலற்றும் புகழை யுடையராய் –

இதர விஷய அலாபத்தாலே கிலேசிக்கை அயசஸ்சாய்
பகவத் அலாபத்தால் கிலேசிக்கை ஸ்லாக்கியமான
யசஸாய் இறே இருப்பது –

தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் –
இப்படியான யசஸை யுடையரான
ஆழ்வாரை
நாம்
அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று
அனுபவிக்கும் காலம்
பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே

அற்ற பொழுதானது எல்லியாம்-
அவருடைய
அனுபவ
விச்சேத காலமானது
சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –

—————————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: