திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -74-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—————74-

————————————————————–

அவதாரிகை –

இதில்
பயம் மறுவல் இடாதபடி தன் சௌர்ய வீர்யாதிகளையும்
சாபா நுக்ரஹ சமர்த்தர்
சஹவாசத்தையும் காட்டக்
கண்ட படி-பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து
ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி
அரண் உடைத்தான திருச் செங்குன்றூரிலே
ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான
மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க
அவர்களும் குழைச் சரக்காம் படி
பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று
சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே
தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை
சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு
அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து
ஹ்ருஷ்டர் ஆகிற
வார்கடாவருயில் அர்த்தத்தை வாராமல் அச்சம் இனி -என்று
தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————————————–

வியாக்யானம்–

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் –
வார்கடா வருவி -என்று தொடங்கி —
கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன சக்தி யோகத்தையும் –

சீரார் பரிவருடன் சேர்த்தியையும் –
அத்தாலே
அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன மிடுக்கையையும் –
நல்ல நான்மறையோர் -என்றும்
மனக் கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தான் ஒப்பார் வாழ -என்றும்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதியவனி தேவர் வாழ்வமர்ந்த மாயோனை என்றும்
ஜ்ஞானாதி குண பரிபூர்ணராய் இருக்கிற மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிய இருக்கிற
இருப்பையும் தர்சியும் என -தர்சித்து –
தேம பணை புடை சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும் –
நல்ல நீண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கூரிய இச்சையோடு ஒழுக்கம் நடைப் பலி இயற்கைத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே என்றும்
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து
நிர்ப்பயராய்
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -அதனுள் கண்டவத் திருவடி -என்று தொடங்கி
திகழ என் சிந்தை  உளானே -என்னும்படி வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து

ஹ்ருஷ்டராய்
தேனை நன்பாலை கன்னலை அமுதை -என்று
அவன் ரச்யதையும் அனுபவித்து

தானுகந்த மாறன் –
நின் கோலம் கார் எழில் காணல் உற்று ஆழும் -என்று
அழகிலே கலங்கினவர்
இப்போது அவ் அழகை அனுபவித்து
ஹ்ருஷ்டரான
ஆழ்வார் –

தாள் சார் நெஞ்சே –
ஆழ்வார் திருவடிகளை
அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-
நெஞ்சே –

சாராயேல் –
ஆஸ்ரயியாது இருப்புதி யாகில் –

மானிடவரைச் சார்ந்து மாய் –
பிரகிருதி வச்யரான மனுஷ்யரை
ஆஸ்ரயித்து
நசித்துப் போ –

ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம்
உஜ்ஜீவன ஹேது
தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது
என்றது ஆயிற்று –

———————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: