திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -73-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்———–73-

———————————————————————————-

அவதாரிகை –

இதில்
பரிவர் இல்லை என்று கலங்க
பரிவர் உளர் என்று தேற்றின பாசுரர்த்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே
அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே
பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக
பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்
எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட
நமக்கு
முமுஷூக்களும்
நித்தியரும்
முக்தரும்
உண்டு-
நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே
நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய
அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை
அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————————

வியாக்யானம்–

அங்கு அமரர் பேண –
ஆங்கு ஆராவாரம் அது -என்னுமா போலே
தேசம் -அது
தேசிகர்கள் -அவர்கள்
பரிவின் மிகுதி -அது
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு
அப்படி -பரமாத்துமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க

அவர் நடுவே வாழ் திரு மாற்கு
ஒருவரும் இல்லை என்று பயப்பட –
அதாவது –
அங்கும் இங்கும் -என்று தொடங்கி –
அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய்மகள் –சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே -என்றும்
கனலாழி யரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே —
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் -என்றும்
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே

பரிவர் இல்லை என்று அஞ்ச
ஐஸ்வர்யகாமரும்
ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -என்கிறது –

இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச –
அதாவது –
உன் கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கு -என்றும் –
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -என்றும்
கருமா மேனி அன்பன் என் காதல் கலக்கவே -என்றும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -என்றும்
தநுராதாய சகுணம்க நித்ரபிட காதர -என்றும்-ப்ருஷ்ட தஸ்துத நுஷ்பாணிர் லஷ்மணோ நுஜகாமாக -என்னும்படி
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும் உம்மோடு ஒரு பாடு உழல்வான் அடியானும் உளன் என்றே -என்றும்
என் திறம் சொல்லார் செய்வது என் -என்றும்
என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -என்றும்
மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
நினைப்பிட்டு அருளுவது என்று அவனைக் கேட்டும்
இப்படி கலக்கத்தாலே அஞ்ச-

எங்கும் பரிவர் உளர் என்னப் –
இங்கும்
அங்கும்
எங்கும்
நமக்கு பரிவர் உளர் என –
அதாவது –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்று தொடங்கி -என் செய்வது உரையீரே என்று இப்படி
நம்மை பரிகைக்கு
முமுஷூக்களும்
நித்தியரும் ‘
முக்தரும்
உண்டு –
நாம் தாம் தரத்தைக் கொண்டு ஷீர சிந்துவை ஷூபிதமாம் படி
கடைந்த மகா பாஹூகம் என்று தன மிடுக்கைக் காட்ட –

பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் –
ஆழ்வாரைப் போலே
பயமும்
பய நிவ்ருத்தியும் இன்றிக்கே
ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்
நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —

ஆழ்வார் இப்ப்பாசுரத்தாலே
பயம் தீர்க்கையாலே
இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

———————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: