திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -71-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் ———————–71-

——————————————————————————————–

அவதாரிகை –
இதில்
அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும்
அதி சங்கித்த அதி சங்கியைப் போக்கின படியை
பேசின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இவர் மநோ ரதித்த படியே
அத் தேசத்திலே புக்கு
திருவாய் மொழி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் –
அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –
சர்வ நிர்வாஹகன்
என்று இருந்தோம்
இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்
அவன் குணத்திலும்
ஸ்வரூபத்திலும்
அதி சங்கை பண்ண
கீழ்
தம்மைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட
யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து
அவன் தம் அதி சங்கையைப் போக்க
அத்தை அனுசந்தித்து
அதி சங்கை தீருகிற
தேவிமாரில் -அர்த்தத்தை
தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————————————

வியாக்யானம்–

தேவனுறை பதியில் -சேரப் பெறாமையால்-
கீழே
தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான
தேவர்க்கும் தேவன் ஆனவன்
திவ்ய மஹிஷியோடு நித்ய வாசம் பண்ணுகிற
திரு வாறன் விளையிலே
புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி
என்று அவசன்னராய் -என்னுதல்-
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்து –
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய
பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும்
அதி சங்கை பண்ண –
அதாவது –
க்யாத ப்ராஜ்ஞ சங்கே மத்பாக்ய சங்ஷ்யாத் -என்னும்படி
உமருகந்த உருவம் நின்னுருவமாகி -என்று தொடங்கி
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இறந்ததும் நீயே -என்று தொடங்கி –
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இப்படி
ஸ்வரூபத்திலும்
குணத்திலும்
அதிசங்கை பண்ணின படியை அடி ஒற்றின படி -என்கை –
இப்படி
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்திலும்
சர்வ நிர்வாஹகத்வத்திலும்
பிறந்த இஸ் சங்கை நிவ்ருத்த மாம்படி
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி –
மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க
பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசி ப்பிக்க
அத்தை
தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி
என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து -என்கை-

தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் –
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற
மகா ப்ருதிவியில் உள்ளவர்களே
உங்களைப் போலே அன்றிக்கே
ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும்
நம்முடைய மனஸ்ஸூ —
உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு
ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும்
மனஸ்ஸூ —

——————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: