திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -70-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —————70-

———————————————————————————————–

அவதாரிகை –

இதில்
திருவாய் மொழி பாடி அடிமை செய்யப்
பாரித்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாம் பாடின திருவாய் மொழியைக் கேட்கைகாக
பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக
திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி
இருக்கிற படியை
அனுசந்தித்து
நாம் அங்கே சென்று
திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே
அவனும் அவளுமான சேர்த்தியிலே
திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து
திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –
என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை
இன்பக் கவி பாடுவித்தோனை -என்று
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————–

வியாக்யானம்–

இன்பக் கவி பாடுவித்தோனை –
இன்கவி பாடிய ஈசனை -என்றும் –
இன்கவி என் பித்து -என்றும் –
என் நா முதல் வந்து புகுந்து நல் ஈன் கவி -என்றும்
திருந்து நல் ஈன் கவி -என்றும்
வண் தீன் கவி -என்றும்
சீர் பெற இன்கவி -என்றும்
உறப் பல இன் கவி -என்றும்
பதவியவன் கவி பாடிய வப்பன் -என்றும்
நிரதிசய போக்யமான திருவாய் மொழியை
என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-

இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் –
பெரிய பிராட்டியாரோடு கூட
திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி
வாழ்ந்து கொடு போருகிற திரு வாறன் விளையில்

அன்றிக்கே
இந்திரையோடு அன்புற்று -என்று
பெரிய பிராட்டியார் இடத்தில் ச்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை
கடாஷித்து அருளிச் செய்த படி –
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-என்றும்
ராமஸ் சீதாம் -நுபிராப்ய ராஜ்ஜியம் புநரவாப்தவான் பிரஹருஷ்டம் உதித்தோ லோகே – -இறே-
திரு வாறன் விளையில் துன்பமறக் கண்டு –
ஏழையர் ஆவியில்
துக்கம் எல்லாம் தீரக் கண்டு –

அடிமை செய்யக் கருதிய –
கண்டால் செய்யும் கார்யமான
கைங்கர்யம் செய்கையிலே
மநோ ரதிக்கிற –
அதாவது –
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழ நாள்களும் ஆகும் கொலோ -என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்கும் கொள் நிச்சலுமே -என்றும்
வட மதுரைப் பிறந்த வாய்க்குல மணி நிறக் கண்ணபிரான் தன
மலரடிப் போதுகள் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற
வாய்க்கும் கொல் நிச்சலுமே -என்றும்
மதிள் திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட -என்றும்
திரு வாறன் விளை என்னும் நீண் நகரம் அதுவே -என்றும்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -என்றும்
திரு வாறன் விளை ஒன்றி வலம் செய்ய -என்றும்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றும்
திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின்
சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாததன்மை –என்றும்
இப்படி யாயிற்று அவருக்கு இவ் விஷயத்தில்
கைங்கர்ய மநோ ரதம் நடந்த படி -என்கை-

உபகார ச்ம்ருதியோடே
தன் சரிதை கேள்வி யாகாமல்
இன்பம் பயக்க விருந்த
நிலத் தேவர் குழுவிலே
பாட்டு கேட்பிப்பதாக
கான கோஷ்டியையும்
தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே
ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனார் அருளிச் செய்தது –
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு –
தர்சன அனுபவ கைங்கர்ய
அனுபவ மநோ ரதத்தை யுடைய ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –

ஆழ்வாரும் வேண்டா –
நமக்கு உத்தேச்யம் ஆழ்வார் திருவடிகளே -அமையும்

அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு
திருட அத்யாவசாய உக்தரான
மதுரகவி நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார்
எல்லாருக்கும்
குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –

—————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: