திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -68-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று ———68-

மாயாமல் தன்னை வைத்த
தம்முடைய சேஷத்வ ஸ்வரூபம் மாயாமல் தம்மை வைத்த

——————————————————————-

இதில்
எம்பெருமான் காட்டின விசித்திர ஜகதாகாரதையை
அனுபவித்து
விஸ்மிதராய் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஏழையர் ஆவியில் உருவு வெளிப்பாட்டாலே நோவு படும்படி
ஆற்றாமை கரை புரண்டு இருக்கச் செய்தேயும்
தம்மை அறியாத படி வைத்து நோக்கிக் கொண்டு போருகிற
இவ் வாச்யர்த்தைக் கண்டு இவர் விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது என்று
தன்னுடைய ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுபவித்து விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது
என்று தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
மாயா வாமானனில் அர்த்தத்தை
மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————————————————————————————

வியாக்யானம்–

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே-
அதாவது
சரண்யனான யுனக்கு
அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே
சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு
ஆகிஞ்சன்ய
அனந்யகத்வம்
ஆர்த்தியும்
உண்டாகையாலே
அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை
வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு
ஹேது என் என்று –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி
மாயவனே அருளாய் -என்று அவன் தன்னைக் கேட்க
அவனும் அதுக்கு நிருத்தனாக
இது ஓன்று இருந்த படி என் –என்று
இவ் வாச்சர்யத்தில் இவர் விஸ்மிதர் ஆக
அவன் அவற்றைக் கண்டு வைத்து
இது ஓர் ஆச்சர்யமோ -என்று
தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட –

தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு-
மாயா வாமனனே -என்று தொடங்கி
இவை என்ன விசித்ரமே -என்றத்தை பின் சென்று அருளிச் செய்தபடி –
தீ யாதியாக பஞ்ச பூதங்களும்
ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இன்றிக்கே விவிதாகாரமாய்
சேதன வர்க்கங்களும் அப்படியே விவிதாகாரம் ஆகையாலே
விசித்திர மாயச் சேர்ந்த பதார்த்தங்களோடு –

ஆயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
அவற்றின் தோஷங்களை ஆராயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் –

ஓயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் -என்ற பாடமாம் போது
நிரந்தரமாகச் சேர்ந்து நிற்கும் -என்றாகவுமாம்–
பொருந்தி நிற்கும் ஆச்சர்ய சக்தி உக்தனான
சர்வேஸ்வரன்
மாயா -என்றத்தைப் பேசின படி –
வளமுரைத்த –
விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த –
அதாவது –
புரா பூத்வாம்ரு துர்த்தாந்த நகரோ தவசமாபன்ன -என்னும்படி –
அம் கண் மலர்த்த்ண் துழாய் முடியானே அச்சுதனே அருளாய் —
பின்னும் வெம் கண் வெம் கூற்றமுமாய் இவை என்ன விசித்ரமே -என்றும்
சித்திரத் தேர் வலவா–வித்தகத்தால் நிற்றி நீ -என்றும்
கள்ளவிழ் தாமரைக் கண்ணனே -உள்ளப் பல் யோகு செய்தி -என்றும்
பாசங்கள் நீக்கி என்னை –இவை என்ன மயக்குகளே -என்றும்
மாயக்கா வாமனனே –இவை என்ன துயரங்களே -என்றும்
துயரங்கள் செய்யும் கண்ணா -இவை என்ன சுண்டாயங்களே -என்றும்
என்ன சுண்டாயங்களால் எங்கனே நின்றிட்டாய்–இவை என்ன இயற்கைகளே -என்றும்
என்ன இயற்கைகளால் நின்றிட்டாய் –உலப்பில்லை நுணுக்கங்களே -என்றும்
இல்லை நுணுக்கங்களே அச்சுதனே –அதுவே உனக்காம் வண்ணமே -என்றும்
இப்படி அவன் விசித்திர விபூதி விஸ்தார உக்தனாய்
இருக்கிறபடியை அருளிச் செய்தவை-என்கை-

மாயன் வளம் உரைத்த மாறனை-
இப்படி விசித்திர
ஜகதாகாரனானவன் சம்பத்தை
அனுபவித்து
அருளிச் செய்த
ஆழ்வாரை –

நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று —
நாம் கிட்டி
அவர் திரு நாமங்களைச் சொல்லி
வாழும் காலம்
ஆகவற்றோ-
அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

———————————————————————————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: