திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -67-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து ———–67-

——————————————————————-

அவதாரிகை –

இதில்
அவனுடைய உத்தம அங்கத்தில் அழகு
ஒரு முகமாய் நலிகிறபடியைப் பேசுகிற
ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மல்கு நீலச் சுடர் தழைப்ப -என்று கீழே பிரஸ்துதமான
எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே
ஊற்று இருந்து
அத்தையே இடைவிடாமல் பாவித்து
பாவனா பிரகர்ஷத்தாலே
அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி
தனித் தனியாகவும்
திரளாகவும்
ஒரு முகம் செய்து நலிய
தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி
பாசுரத்தால் அருளிச் செய்கிற
ஏழையர் ஆவியில் அர்த்தத்தை
ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை –

—————————————————————————————–

வியாக்யானம்–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு –
சபலைகளான
அபலைகள் யுடைய மனசை
த்ரவிப்பிக்கும் சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன
சௌந்தர்யம் –

சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க –
எங்கும் சூழ்ந்து
ஸ்ம்ருதி விஷயமாய்
பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –
அதாவது
வ்ருஷே வ்ருஷே ஹி பஸ்யாமி–பாச ஹஸ்த மிவாந்தகம்-என்னும்படி
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்கிற
முதல் பாட்டின் அடி ஒத்தின படி-
ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த-
வெண்ணெய் யுண்டான் திரு மூக்கென தாவியுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் -என்றும்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் -என்றும்
கண்ண பிரான் புருவம் அவையே என்னுயிர் மேலென
வாயடுகின்றன வென்று நின்றே -என்றும்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் என தாவி யாடும் -என்றும்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டல காதுகளே
கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -என்றும்
பெருமான் திரு நுதலே கோள் மன்னி ஆவி ஆடும் -என்றும்
இப்படித் தனித் தனியும் –

கோளிழைத் தாமரையும் -இத்யாதிப்படியே ஒரு முகமாயும்

அதுக்குமேலே
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போலே
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்றும்
லலாட பர்யந்த விளம்பிதாலகம் -என்றும் சொல்லும்படியாய்
மாயன் குழல் விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரை கள்கின்றவாறு-என்றும்
அருளிச் செய்த இவை என்கை –

இப்படி துக்க மக்னமான மனஸ் உடனே
அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –
நிரவதிக
போக்யமான
அந்த உத்தம அங்கத்திலே
சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி
இருக்குமவர்களுடைய
பிரபல ப்ரதிபந்தகம்
நசித்து நிச் சேஷமாகப் போம் –

தீ வினை -துஷ்கர்மம்
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து
என்ற பாடம் ஆனபோது
ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை
மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள்
பிரதிபந்தகம்
நிச்சேஷமாகப் போம் -என்றபடி –

————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: