திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -66-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்————-66-

—————————————————————————————

அவதாரிகை –

இதில்
எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக்
கூப்பிட்ட
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் –
நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய
எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்
பிராபகத்வம்
விரோதி நிவர்த்தகம்
ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும்
என்று ஆசைப்பட்டு
கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது
உழலுகின்ற -உழைக்கின்ற -தழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை
பா மருவு வேதம் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————————————–

வியாக்யானம்–

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின
வேதப் பிரதிபாத்யமான
குணங்களோடு கோடி
நன்றான அழகு
மேன்மை
யானவற்றை –

-தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று
மானஸ சாஷாத் காரத்தாலே
கிட்டு அனுபவித்து –

அவனைக் காண-
கீழ் உகத குண விசிஷ்டன் ஆனவனை
பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று
இச்சித்து –

நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி
அந்த பிரேம அனுகூலமான
உருகலோடே
கூப்பிட்ட –

அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் மால் குணங்கள் ஆவன –
சர்வான் காமான் -என்கிற கல்யாண குணகங்கள் –
அவைதான் பிராப்யங்களாயும்
பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்
முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகதவம் ஆகிற
யுபகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி –
நின் திருப் பாதத்தை யான் -என்றும்
பிராப்யத்வத்தையும்
காத எம் கூத்தாவோ -என்று தொடங்கி
உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
எங்குத் தலைப் பெயவன் நான் என்று தொடங்கி
என்னுடைக் கோவலனே -என்றும்
என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி என் திரு மார்பனை -என்றும்
என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-

ஆளியைக் கான்பரியாய் -என்று தொடங்கி
அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி
அமரர் அரி ஏற்றினையே -என்றும் –

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –

இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்
பற்ப பாதாவோ தாமரைக் கண்ணாவோ தாமரைக் கையாவோ செய்ய திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்
காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும்
பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்
என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்
என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-

அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்
மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி
எல்லை நடந்து மீட்டியும்
அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று
புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று
சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த
வேண்டப்பாடு இவை என்கை –

தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத்
தூ மனத்தனனாய் என்கிற
பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து
ஏவம் வித்னனவனை
பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க்
கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்
இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட

அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்
தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-

இப்படி
ஸூலபராய்
பிராப்த சேஷியான
ஆழ்வாரை லபியாதே
இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –

————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: