திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -65-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா ——————–65-

—————————————————————————

அவதாரிகை –

இதில்
விஜயங்களுக்கு அடியான
விபவங்களை இழப்பதே என்று வெறுத்த படியை
அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அதாவது
கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான
விபவ குணங்களை அனுசந்தித்து
படுக்கைக்கு கீழே தனம் கிடக்க
கால் வீங்கிச் சாவாரைப் போலே
இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து
அனர்த்தப் படுவதே
என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற
கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை
கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————————————-

வியாக்யானம்–

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து –
அதாவது –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் கற்ற
சக்கரவர்த்தி
ஸ்ரீ வசுதேவர்
ஸ்ரீ ஜாம்பவான்
மகா ராஜர்
திருவடி
முதலாய் உள்ள அவதார விஜய ஹர்ஷிகள் ஆனவர்கள்
ஆதரிக்கும் விஜயங்களுக்கு எல்லாம்
ஆஸ்ரமாய் உள்ள அவதாரமான
விபவ குண ஸ்வ பாவங்களை —
அவதாரம் தோறும்
தத் அனுகுணமாக குணங்களும் இறே பேதித்து இருப்பது –
அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே
அவற்றின் ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து
அவற்றின் படியை
மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அதாவது –
ராமோ ராமோ ராம இதி -என்றும்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
நடந்தமை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள்
அன்றி ஆவரோ -என்றும் –
தன்மை அறிவாரை அறிந்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ -என்றும்
தோற்றிய சூழல்கள் சிந்தித்து தன்மை அறிபவர் தாம் அவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கேழல் திரு உருவாய் ஆயிற்று கேட்டும் உணர்ந்தவர்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி ஆவரோ -என்றும்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கொண்டு அங்கு தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்தும் கண்டும் தெளிந்தும்
கற்றார் கன்னற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இரணியன் ஆகத்தை மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும் செல்ல உணர்ந்தவர்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ -என்றும்
நடந்த நல் வார்த்தை அறிந்தும் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று –மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இப்படி பத்தும் பத்தாக ஆராய்ந்து -என்கை-
மண்ணில் உள்ளோர் தம் இழவை –
அவன் குணம் இப்படி யாய் இருக்க
இத்தை இழப்பதே -என்று
பூமியில் உண்டானவர்கள் உடைய பகவத் குண அனுபவ அலாபத்தை –

வாய்ந்து உரைத்த மாறன் சொல் –
ஸூலபராய்க் கிட்டி நின்று
அந்தரங்கமாக
அருளிச் செய்த
ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-

பண்ணில் இனிதான தமிழ்ப் பா –
நட்ட ராகத்தோடு கூடி
திராவிட சப்த ரூபமான
சந்தஸ் ஸூ

இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே
என்று ஈடுபாடாய் இருக்கிறது-

——————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: