திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -64-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்—————-64-

————————————————————————————–

அவதாரிகை –

இதில் –
விஜய பரம்பரைகளைப் பேசின படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு
பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று
பிரஸ்துதமான
அவதார சரிதமாய் யுள்ள
த்ரி விக்ரமணம் தொடங்கி
கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான
விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை
ஆழி வண்ணன் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————————-

வியாக்யானம்–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிந்து நிற்க –
அதாவது –
கீழ்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை -என்று
ஸ்ரமஹரமான வடிவை யுடைய சர்வேஸ்வரன்
தன் விஜய பரம்பரைகளான
சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே
ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி
அவ்வாகாரன்களைக் காட்டிக் கொடு நிற்க –

சிர நிர்வ்ருத்தம் அப்யே தத் ப்ரத்யஷம் இவ தர்சிதம் -என்னும்படியே
ஆழி எழ -என்று தொடங்கி
அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -என்று த்ரிவிக்ரமணத்தையும்-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-என்று தொடங்கி –
அப்பன் சாறு பட வமுதம் கொண்ட நான்றே -என்று அம்ருத மதன வைசித்ரதையும்
நான்றில வேழ் மண்ணும் -என்று தொடங்கி
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -என்று பூமி உத்தாரண சக்தியையும்-

நாளும் எழ -என்று தொடங்கி
அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊனே -என்று ஜகன் நிகரணத்தையும்
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி -என்று தொடங்கி –
அப்பன் காணுடைப் பாரதம் கையறப் போழ்தே -என்று-
பாரத சமர அத்புதத்தையும்
போழ்ந்து மெலிந்த புன் செக்கரில் -என்று தொடங்கி –
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே -என்று
ஹிரண்ய விதாரண க்ரமத்தையும்-
நேர் செரிந்தான் -என்று -தொடங்கி
அப்பன் நேர் சேரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே -என்று
பாண பாஹூ வனச் சேதன சேஷ்டிதத்தையும் –
அன்று மண் நீர் எரி கால் -என்று தொடங்கி
அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே -என்று
ஜகத் சமஷ்டி ஸ்ருஷ்டிதையும்
மேய நிரை கீழ் புக -என்று தொடங்கி
அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே -என்று
கோவர்த்தன உத்தரண சாமர்த்தியத்தையும்
கண்டு அனுபவித்து
குன்றம் எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -என்று
மகிழ்ந்து கால் தரித்து நின்றார் ஆயிற்று –

நந்தாமி பஸ்யன் நபிதர்ச நேன -என்னக் கடவது இறே –
ஊழிலவை தன்னை –
பழையதாய்
கழிந்த
அந்த அபதானங்களை-

யின்று போல் கண்டு-
பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –

தானுரைத்த மாறன் சொல் –
தாம் அனுபவத்துக்கு
போக்குவீட்டு அருளிச் செய்த
ஆழ்வார் திவ்ய ஸூக்தியை –

பன்னுவரே நல்லது கற்பார் –
ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —

தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

—————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: