திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -62-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்———-62-

அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க-

தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -சுவீகாரமும் உபாயம் இல்லை
-ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே

————————————————————————————–

அவதாரிகை –

இதில்
அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை
பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க
அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி
மோஹித்து
இவர் கிடக்க
பார்ஸ்வத்தரான பரிவர்
பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை
பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி
ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை
திருத்தாயார்
அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால்
அருளிச் செய்கிற
கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————————————–

வியாக்யானம்–

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்யசைவ -என்றும்
ராமம் ரக்தாந்தனய நம பச்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்
இத்யாதிப்படியே
திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –
இப்படி அரதி விஞ்சி
மோஹத்தை பிராப்தையாக-
அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில்
அத்தசையைக் கண்டு –

ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே
சிந்தித்துப் போருகிற
அத்விதீயரான
பெரிய பெருமாளைப் பார்த்து –

இங்கு இவள் பால் –
இத்தசையில்
இவள்
இடையாட்டமாக –
என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற தேவர்
ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ
ஒன்றும் தெரிகிறது இல்லை
எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
அத்தலையில் நினைவே இறே உபாயம்
இத்தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –

என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய
தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்
அத்தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த
ஆழ்வார் யுடைய-

அஞ்சொலுற –
அஞ்சொல் உற
அழகியதான
இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –

நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான
மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே
மனஸ் ஸூத்தி பிறக்கும் –

கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக
ஓர் அரங்கரைப் பார்த்து
ஒருகிற அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று
நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
அரங்கநகர் மேய அப்பனாய்
மந்தி பாய் -இத்யாதிப் படியே
பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் –
என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து
யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
அறலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-
தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்
அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -திருவரங்க பாசுரம் திருவேங்கட சரித்திரம் சொல்லி -துளங்கு நீண் முடி-என்று தொடங்கி
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
ஐக்யமாக அருளிச் செய்தது
சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –

இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
பாற்கடல் அரங்கம் போலே –

——————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: