திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -59-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு————–59-

—————————————————————————–

அவதாரிகை –

இதில்
கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போகமாட்டாமல்
தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால்
சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி
முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை
நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————–

வியாக்யானம்–

நீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-
கேட்டவர்கள் நீராய் –
நெஞ்சு அழியும்படியாகவும்
அசேதனங்களோடு
சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு
வாசி அற
கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்
நெஞ்சு அழியும்படியாக –

பாவைகளோடு
பஷிகளோடு
ரஷகனோடு
வாசி அற
எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்
ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –

மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –
சர்வேஸ்வரனுக்கும்
அந்தாமமான பரமபதத்தில்
இருப்புப் பொருந்தாத படியாகவும்
விண் மீது இருப்பு அரிதாம் படி –
ஆராத காதலுடன் கூப்பிட்ட-
க்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி
சமியாத அபி நிவேசத்துடன்
ஆக்ரோசம் பண்ணின –
அதாவது –
வாராய் -என்றும்
நடவாய் -என்றும்
ஒரு நாள் காண வாராய் -என்றும்
ஒளிப்பாயோ -என்றும்
அருளாயே -என்றும்
இன்னம் கெடுப்பாயோ -என்றும்
தளர்வேனோ -என்றும்
திரிவேனோ -என்றும்
குறுகாதோ -என்றும்
சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்
ஆர்த்தியுடன் கூப்பிட்டவை என்கை –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –
அத்யபிநிவேசத்தாலே
ஆர்த்தியை தர்சிப்பித்த
அபிஜாதரான
ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-

ஒதிடவே யுய்யும் யுலகு –
இத்தை அப்யசிக்கவே
ஜகத்து உஜ்ஜீவிக்கும்
ஜகத்தில் யுண்டான
சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: