திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -56-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—————–56-

தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –

——————————————————————————–
அவதாரிகை –
இதில்
தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ச்லேஷம் மானச சம்ச்லேஷ மாத்ரமாய்
பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்கிறபடி
மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் தாம் விடப் பார்த்த
ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும்
தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை
திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை
பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை
மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————————————–

வியாக்யானம்–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று
உஜ்ஜீவியாமல்
கீழ்
அடிமை செய்வார் திருமாலுக்கு -என்றார் இறே
அத்தை அடி ஒற்றின படி

சால நைந்து –
மிகவும் அவசன்னராய் –
தம் தசை தாம்பேச மாட்டாதே
திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து –

தன்னுடைமை தானடையக் -கோலியே தான் இகழ வேண்டாமல் –
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத
ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம்
உத்யோகிக்க வேண்டினால் போல் அன்றிக்கே

தன்னை விடல் சொல் மாறன் –
தன்னடையே அவை முற்கோலித்து
தம்மை
கட்டடங்க விட்டகலும் படியை
அருளிச் செய்த ஆழ்வார் –
அதாவது –
உத்தரீயம் தயாத்யக்தம் ஸூபாந் யாபரணான் யபி -என்னும் படி
ஏலக் குழலி இழந்தது சங்கே -என்றும்
என் மங்கை இழந்தது மாமை நிறமே -என்றும்
என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே -என்றும்
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே -என்றும்
என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்றும்
என் விற்புருவக் கொடி தோற்றது மெய்யே -என்றும்
என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே -என்றும்
என் வாசக் குழலி இழந்தது மாண்பே -என்றும்
என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்றும்
அருளிச் செய்தவை என்கை –

தன்னை விடல் சொல் மாறன் –
கட்டெழில் தென் குருகூர் சடகோபன் சொல் -என்று
அருளிச் செய்த ஆழ்வார் உடைய –

ஊனமறு சீர் நெஞ்சே உண் –
சீருக்கு ஊனம் ஆவது
ஸ்வாரத்தமாய் இருக்கை-
அப்படி அன்றிக்கே
பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –

ஓவாத் தொழில் சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே
ஒவாத ஊணாக உண் -என்று
ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஆழ்வார் உடைய
பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

———————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: