திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -52-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு——————52-

———————————————————————————————–
அவதாரிகை –

இதில்
பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே
நோற்ற நாலிலும் சரணம் புக்கு
தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூக்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி
ரஷித்த நாம் -ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து
தம்முடன் கலப்பதாக பதறி
நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்
தம்மூடலைத் தீர்த்து
தம்முடன் கலந்த படியை –
கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே
அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்
ஊடலைத் தீர்த்து கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த
மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————————————————————

வியாக்யானம்–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த கிருஷ்ணன்
அங்குத்தையில்
அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘
மந்த கதியாய் வந்தான் என்று –
அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து
தங்கள் ஆற்றாமையாலே
அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-
அதாவது –
குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து
கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் –

தான் தள்ளி –
தங்கள் கழகம் இருக்கிற சங்கேத ஸ்தலத்திலே புகுருவதாக
அவன் அருகே வர
போகு நம்பி -என்றும்
குழலூது போய் இருந்தே -என்றும்
போய் இருந்து உன் புள்ளுவம் அறியாதவற்கு உரை நம்பி -என்றும்
எம்மை நீ கழரேலே -என்றும்
எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே -என்றும்
கழகம் ஏறேல் நம்பி -என்றும் –
கன்மம் அன்று எங்கையில் பாவை பறிப்பது -என்றும்
உனக்கேலும் பிழை பிழையே -என்றும்
அவனுக்கு அவகாசம் அறும்படி
ப்ரண யாச்சா பீமா நாச்சா பரிசிஷே பராகவம் -என்று ஊடும் படியையும்-

அவனும்
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய -என்றும்
நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் -என்றும்
வன்மையே சொல்லி எம்மை நீ விளையாடுதீ -என்றும்
உகவையால் நெஞ்சமுள் உருகி உன் தாமரத் தடம் கண் விழிகளில்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் -என்றும்
என்னும்படி
ஸ்மித
வீஷணங்களாலும்
பாவ கர்ப்பமான யுக்திகளாலும்
சேஷ்டிதங்களாலும்
‘ஊடலைத் தீர்த்து சேர விட்டு
கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே –

உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே
ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக்
கூடும்படியான பிரேமத்தை உடைய ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி
மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –

நல்குதல் -கொடுத்தல்
மன ஏவ – இறே –

——————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: