திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -51-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் ——————-51-

——————————————————————————–

அவதாரிகை –

இதில்
ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்
நோற்ற நாலிலும்
அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற
பிரம்மாஸ்திரம் பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே
தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து
ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே
நம் ஆர்த்தியை அறிவிக்கவே தப்பாமல் நம் கார்யம் செய்யும்
திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து
நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற தசரதாத் மஜனுக்கு
தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல்
ஆற்றாமையாலே நாயகனைக் குறித்து
தூது விடுகிற நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை
வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————————————

வியாக்யானம்–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு –
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் விபவம் இறே
வ்யவசாயஞ்ஞர் ரஷணச்தைர்யம் பம்போத்தர தேசச்தம் –என்றார் இறே
திரு வண் வண்டூரிலே பிற்பட்டாரை ரஷிக்கைக்கு
சர்வ காலமும் நித்ய வாசம் பண்ணுகிற
சக்கரவர்த்தி திரு மகனுக்கு
ஜனக குல சுந்தரி ஜீவந்தீம் -என்று ஆள்விட்டதும்
பம்பா பரிசர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக் குறித்து ஆயிற்று –
ஸ்தைர்யம் ஹிமவான் போலே -ராமன் –
உத்தர -கிஷ்கந்தை -அங்கு சீதை ஆள்விட்டாள்
என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் –
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே
தாழாமல் சொல்லும் என
அதாவது –
குருகினங்காள் -வினையாட்டியேன் காதன்மையைக் கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே -என்றும்
திறந்களாகி எங்கும் செய்கலூடு ழல் புள்ளினங்காள் -அடியேன் இடரை
இறங்கி நீர் தொழுது பணியீர் -என்றும்
மட வன்னங்காள் உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே -என்றும்
உடன் மேயு மட வன்னங்காள் -அடியேனுக்கும் போற்றுமினே -என்றும்
புன்னை மேலுறை பூங்குயில்காள் மாற்றம் கொண்டு அருளி உரையீர்
மையல் தீர்வது ஒரு வண்ணமே -என்றும்
அடையாளம் திருந்தக் கண்டு எனக்கு ஓன்று யுரை ஒண் கிளியே -என்றும்
கரும் திண் மா முகில் போல் திருவடிகளை –திருந்தக் கண்டு
எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -என்றும்
அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள்
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே
என்றும் இப்புடைகளிலே அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை -என்கை –
கை கழிந்த காதலுடன் தூதுவிடும் –
என்னையும் உளன் என்மின்களே -என்று
தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது
என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் –
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே
நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

———————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: