திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -49-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

மா நலத்தால் மாறன் திரு வல்ல வாழ் புகழ் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் -மேல் நலங்கித்
துன்புற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற————-49-

————————————————————————

அவதாரிகை –

இதில்
திரு வல்ல வாழ் ஏறச் செல்ல
புறச் சோலையில் போக்யதையால் நலிவு பட்டுப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
பெரிய ஆற்றாமையோடு திருக் குடந்தையிலே புக்க இடத்திலும்
தம்முடைய அபேஷிதம் கிடைக்கப் பெறாமையாலே
அங்கு நின்றும் புறப்பட்டு
திருவடிகளே உபாயம் –என்று துணிந்த துணிவு கை கொடுத்து நடத்த
திரு வல்ல வாழ் ஏறப் போய்
முட்டப் போக மாட்டாமல் மிகவும் தளர்ந்து
ஊரில் புறச் சோலையில் கிடந்தது
அங்கு உண்டான வாத்திய கோஷ
வைதிக கிரியா கோலாகலம் செவிப்பட
மது மல்லிகை தொடக்கமான போக்யதை அனுசந்திக்கையாலும்
உள்ளுப்புக்கு அனுபவிக்க பெறாமையலும்
தமக்கு உண்டான ஈடுபாட்டை
நாயகன் இருப்பிடத்தே செல்லுவதாக புபுறப்பட்டுப் போய்
கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே
நடுவே கிடந்தது நோவு பட்டு
அங்கே புக்கு அவனைக் கண்டு ஸ்தோத்ரம் பண்ண பெறுவது என்றோ நாம் -என்று
தன தளர்த்தியை பாங்கிமாருக்கு உரைக்கிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
மானேய் நோக்கில் அர்த்தத்தை
மா நலத்தால் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார்-என்கை –

——————————————————————————–

வியாக்யானம்–

மா நலத்தால் மாறன்-
பெரிய பிரேமத்தாலே ஆழ்வார் –

திரு வல்ல வாழ் புகழ் போய் –
பிரேம ப்ரேரிதராய் பிரவேசிக்கைக்காக போய் –

தான் இளைத்து வீழ்ந்து அவ் ஊர் தன்னருகில் —
அவ் ஊர் தன் அருகில் -தான் இளைத்து -வீழ்ந்து
உள்ளே புக்கு அனுபவிக்க பெறாமால்
ஊரின் புறச் சோலையிலே
பல ஹானியாலும்
அங்குத்தை போக்யதையாலும்
நகர சம்ப்ரமங்களாலும்
கால் நடை தாராமல்
தளர்ந்து வீழ்ந்து –
மேல் நலங்கித்-
அதுக்கு மேலே
தோழி மார் நிஷேத வசனங்களாலும் கலங்கி –

துன்புற்றுச் –
பகவத் அலாபத்தாலே
மாறுபாடு உருவின
துக்கத்தை யுடையராய் –

சொன்ன சொலவு –
அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்திகள்-
அதாவது
பத்ம சௌ கந்திகவஹம் -என்றும்
பத்ம கேசர சம்ஸ்ருஷ்ட -என்றும் -இத்யாதிப் படியே
வைகலும் வினையேன் மெலிய வானார் வண் கமுகும்
மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ் -என்றும்
பொன்றிதழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவித் தென்றல் மனம் கமழும் -என்றும்
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் -என்றும்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் -என்றும்
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் -என்றும்
மாடுறு பூம் தடம் -என்றும்
மழலை வரி வண்டுகள் இசை பாடும் -என்றும்
விஸ்லேஷ தசையில் அங்குத்தையில் பரிமளம் அசஹ்யமாய்
கால் கட்டுகிறபடியையும்
மற்றும் உண்டான போக்யதைகளும் அப்படியே யாகியும்
வினையேன் மெலியப் பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க என்றும்
மாடுயர்ந்த ஓமப் புகை கமழும் என்றும்
நல்ல அந்தணர் வேள்விப் புகை மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் -என்றும்
வேத வைத்திய க்ரியா கோலாஹலங்களுக்கும்
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம் -என்றும்
நரக சம்ப்ரமங்களும்
நாயகன் வேத பிரதிபாத்யன் ஆகையாலும் வைதிக கர்ம சாமாராத்யன் ஆகையாலும்
ச்மாரகத்வேன பாதகம் ஆயிற்று
நகர சம்ப்ரமம் தானும் சம்ப்ரமத்துடனே புகப் பெறாமையாலே பாதகம் ஆயிற்று

அதுக்கு மேலே
என்று கொல் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும்
நிச்சலும் தோழிமீர் காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ-என்றும் –
பிரிய பரைகள் ஹித பரைகளாய் நிஷேதிக்கை யாலும்
தனக்கு ஓடுகிற த்வரையாலே அதுவும் சைதில்ய ஜனகம் ஆயிற்று –
கோனாரை அடியேன் கூடுவது என்று கொலோ -என்றும்
நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவது என்று கொல் -என்றும்
நீடுறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே -என்றும்
நம்பிரானது நன்நலமே -என்றும் –
எந்நலம் கொல் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே -என்றும்
மாண் குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்று கொலோ -என்றும்
நிலம் தாவிய நீள் கழலை -நாடொறும் வீடின்றியே தொழக் கூடும் கொல் -என்றும்
யாம் கண்டு கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்கள்
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடும் கொல் -என்றும்
இப்படி திருவடிகளை தொழுகையும்
திரு நாமத்தாலே ஸ்துதிக்கையும்
பிரார்த்யம் ஆகையாலே சைதில்யம் மிக்கு இருக்கும் இறே-
இப்படி ஆகையாலே
மேல் நலங்கி
துன்பமுற்று சொன்ன சொல் இவை யாயிற்று –
இத்தசையிலும் -அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -என்று இறே
இவர் அத்யாவசியம் குலையாது இருக்கும் படி –

துன்பமுற்று சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு –
இப்படி விஸ்லேஷ வ்யசன உக்தராய்
அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தியான
இத் திருவாய் மொழியை
அப்யசிக்க வல்லாருக்கு –

பின் பிறக்க வேண்டா –
இதன் அப்யாச அநந்தரம்
ஜன்மம் பரிக்ரஹம் பண்ண வேண்டா
ஜென்மத்தை முடித்தே விடும்
பிற -என்று அவ்யயம்
அன்றிக்கே
திருவடிகளுக்கு அசலான ஜன்மம் எடுக்க வேண்டா -என்றாகவுமாம் –

பின்பு கற்க வேண்டா பிற -என்ற பாடம் ஆன போது
இத்தை ஒழிய
வேறு ஒன்றை
அப்யசிக்க வேண்டா
என்றபடி –

—————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: