திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -48-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் ———–48-

ஆராவமுதன் -ஆழ்வார் ஆதரித்த -என்று பிரித்தும் பொருள் உரைப்பார் உண்டு

—————————————————————————-
அவதாரிகை –
அகிஞ்சனராய்
ஆர்த்தியோடே பிரபத்தி பண்ணி இருக்கச் செய்தேயும்
ஆராவமுதாழ்வார்
இவர் நம்மாழ்வார் -என்று அபிமானித்து அபேஷிதம் செய்யாமையாலே
அலமந்து ஆர்த்தராய் அருளிச் செய்த
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஸ்ரீவர மங்கை வாணன் திருவடிகளிலே சரண் புக்க விதத்திலும்
அங்கே தம் அபேஷிதம் கிடையாமையாலே
ஆஸ்ரித ரஷண தீஷிதனான சர்வேஸ்வரன் நம் கார்யம் செய்யாமை இல்லை –
எங்கே கார்யம் செய்ய நினைத்து இருக்கிறான் என்று தெரியாது
என்று திருக் குடந்தையிலே ஆராவமுதாழ்வார்
திருவடிகளிலே செல்லவே
நம் அபிமதம் சித்திக்கும் என்று மநோ ரதித்து சென்ற இடத்தில்
அவர் எழுந்து இருத்தல்
இருத்தல்
உலாவி அருளுதல்
இன் சொல்லுச் சொல்லுதல்
குளிர நோக்குதல்
அரவணைத்தல்
செய்து அருளக் காணாமையாலே
பிராட்டியும் அவனுமான சேர்த்தியும் யுண்டாய்
நமக்கு அபேஷையும் யுண்டாய் இருக்க
அபிமதம் பெறாது ஒழிவோமோ-என்று துடித்து
இவ்வளவிலும் திருவடிகளே உபாயம் என்னும் துணிவு
குலையாது ஒழியப் பெற்றோமே
என்று வருந்தி தரித்தாராய் தலைக் கட்டுகிற
ஆராவமுதத்தில் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
ஆராவமுதாழ்வார் -என்று தொடங்கி -என்கை –

———————————————————————————-

வியாக்யானம்–

ஆராவமுதாழ்வார் –
சஹபத்ன்யா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் -என்று ‘கூட்டித் தேடி அனுபவிக்கும் படி
நிரதிசய போக்யராய் –
ஸ்ரீ மான் ஸூக ஸூபத -என்னும்படி
ஏரார் கோலம் திகழக் கிடந்த ஆராவமுதாழ்வார் –

ஆதரித்த பேறுகளை -தாராமையாலே-
இவர் அபேஷித்த
புருஷார்த்தங்களை –
அதாவது –
கிடந்தாய் கண்டேன் -என்றும்
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே -என்றும்
காண வாராயே -என்றும்
அருளிச் செய்யும் இடங்களிலே
அபேஷிதம் ஆனததை-
குடந்தையுள் கிடந்த வாறு எழுந்து இருந்து -என்கிறபடியே
எழுந்து இருக்க வேணும் -என்றும்
குடந்தை திரு மாலான தேவர்
தாமரை மங்கையும் நீயும் -என்னும்படி
இருவரும் கூட இருந்து அருள வேணும் -என்றும்
தாமரைக் கண்களால் நோக்கி அருள வேணும் -என்றும்
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வர வேணும் -என்றும்
சில பரிமாற்றங்களை அபேஷிக்க
அப்போதே அது பெறாமையாலே –

தளர்ந்து மிக –
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன் -என்னும்படி
அத்யவசன்னராய்-
தீராத ஆசையுடன் –
அபி நிவேசம் போவது அனுபவத்தாலே ஆகையாலே
அனுபவம் பேராமல் முடியாத வபி நிவேசத்தோடே –

ஆற்றாமை பேசி யலமந்தான் –
அதாவது –
அடியேன் உடலம் நீராய் யலைந்து கரைய உருக்குகின்ற -என்றும்
என்னான் செய்கேன் -என்றும்
உன்னைக் காண்பான் நான் அலப்பாய் -என்றும்
தூராக்குழி தூரத்து எனை எத்தனை நாள் அகன்றிருப்பன் -என்றும்
தரியேன் இனி -என்றும்
உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -என்றும்
பேசினவை என்கை –
இத்தசையிலும்
உன்தாள் பிடித்தே செலக் காணே -என்றும்
களை கண் மற்றிலேன் -என்றும்
இவர்க்கு அடியில் இப்படி அத்யாவசியம் இருக்கும்படி இது வாயிற்று –
மாசறு சீர் மாறன் எம்மான் –
இவ்வளவான தசையிலும்
உபாயாந்தரங்களில் கண் வைக்கை யாகிற மாசு இன்றிக்கே இருக்கிற
அத்யாவச்ய
ஞானாதி குணங்களை யுடையரான
ஆழ்வார் தம்மை அடைந்து
பிரபன்ன ஜனமான நமக்கு ஸ்வாமி-

அன்றிக்கே
ஆற்றாமை பேசி அலமந்தான் -என்று க்ரியை-

—————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: