திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -47-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

நோற்ற நோன்பாதி யிலேன்  உன் தனை விட்டாற்ற கில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே -சாற்றுகின்றேன்
இங்கு என்னிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது——————47-

—————————————————————————
அவதாரிகை –

இதில்
வானமாமலை திருவடிகளிலே வணங்கி
பிரவணராய்
சரணம் புக்க படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அப்ரீதியாலே அனுகரித்து தரிக்க வேண்டும்படி அபிநிவேசம்
அதிசயித்து செல்லா நிற்கச் செய்தேயும்
ஸ்வஅபிமதம் பெறாமையாலே அவசன்னராய்
இப்படி அனுபவ ருசி ரூபமான
தம் அபிநிவேசத்தை சாதனமாகக் கருதி
அது முற்றினவாறே கார்யம் செகிறோம் என்று
ஈஸ்வரன் நினைத்து இருந்தானாகா கொண்டு
பேற்றுக்கு உறுப்பாக சாஸ்திர சித்தமான
கர்மாத் யுபாயங்களிலே
தமக்கு மறந்தும் அந்வயம் இல்லாமையை சொல்லிக் கொண்டு
அவன் அடியிலே காட்டின உபாயம் ஒழிய
வேறு ஒரு உபாயம் இல்லை -என்று
சம்சாரி சம்ரஷண அர்த்தமாக
பிராட்டிமாரோடும்
நித்ய பரிகரத்தோடும்
கூட ஸ்ரீவர மங்கையிலே வந்து எழுந்து அருளி இருக்கிற
வான மா மலை திருவடிகளிலே
வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிற
நோற்ற நோன்பில் – அர்த்தத்தை
அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பாதியிலேன்-என்று தொடங்கி -என்கை-

————————————————————————————————————————————————–

வியாக்யானம்–

நோற்ற நோன்பாதியிலேன் –
இத்தால்
மோஷ சாதனமாக
சாஸ்திர சித்தமான
கர்மாதி உபாயங்களில் எனக்கு அந்வயம் இல்லை —
ராவணோ நாம துர்வ்ருத்தோ ராஷஸோ ராஷசேஸ்வரா
தச்யாஹம் அனுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத -இத்யாதிகளாலே
முன்னிட்டு சரணம் அடைந்தால் போலே
நோற்ற நோன்பிலேன் -என்கிற
பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –

உன்தனை விட்டாற்ற கில்லேன் –
தாரகனுமாய்
போக்யனுமாய்
இருக்கிற உன்னை விட்டு
தரிக்க மாட்டு கிறிலேன்-
இவ் வாற்றாமை எனக்கு ஸ்வரூபம் இத்தனை —

ஆனால் பேற்றுக்கு சாதனம் என் என்னில் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே –
மோஷ உபாயம்
அரவின் அணை ஏறி வீற்று இருந்து -என்றும் –
சீவர மங்கை வாணனாய்-என்றும்
கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாடனாய்-
இப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற
தேவர்
அடியிலே அருளின நிர்ஹேதுக கிருபையே –
அதாவது –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி -என்றும்
தமியேனுக்கு அருளாய் -என்றும்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட -என்றும்
அருளாய் உய்யுமாறு -எனக்கு -என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -என்றும் –
அருளிச் செய்தவை-என்கை –
மற்றும் உண்டான பாட்டுக்கள் –
அருளுக்கு அடியான அவன் படிகளையும்
அதுக்கு உடலாகத் தம் படிகளையும்
அருளிச் செய்தவையாய் இருக்கும் –
பேற்றுக்கு உபாயம் உன் தன் பேர் அருளே சாற்றுகின்றேன் –
ஆகையாலே அவன் நிர்ஹேதுக கிருபையே சாதனம் –
என்னுமது எல்லாரும் அறியும்படி
பறை அறைந்து சாற்றுகின்றேன் -என்கிறார் –

இங்கு என்னிலை என்னும் –
இவ்விடத்தில்
இவ்வர்த்த விஷயத்தில் –
என்னுடைய நிஷ்டை இது என்னும்
அத்தலையில் பூர்த்தியாலே
இத்தலையில் ஆகிஞ்சன்யத்தை முன்னிடுகை இறே
பரதந்த்ரனான ஆத்மாவுக்கு
ஸ்வரூபம் என்னும் –

எழில் மாறன் -சொல் வல்லார்
சேஷத்வ
பாரதந்த்ர்யங்கள்
ஆகிற
ஆத்ம பூஷணத்தாலே
அபிராமராய் இருக்கிற ஆழ்வார் உடைய
வுபாய நிஷ்கர்ஷகமான இத் திருவாய் மொழியை
அப்யசிக்க வல்லார் –
அங்கு அமரர்க்கு ஆராவமுது –
அவ்விடத்தில்
அளப்பரிய ஆராமுதை அனுபவிக்கிற
நித்ய சூரிகளுக்கு நித்ய அபூர்வமான அம்ருதமாகப் பெறுவார்
சிரீவர மங்கை மேய பத்துடன் வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே -என்றத்தை
அருளிச் செய்தபடி –

————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: