திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -46-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை முன் காணாமல் நொந்தே
உடனா வனுகரிக்கலுற்று திடமாக
வாய்ந்து அவனாய்த்தான் பேசும் மாறன் உரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார் ———-46-

5-2- உறுதி இருந்தது -5-3/5-4/5-5–தளர்ந்து போனாரே -மீண்டும் அவனை அனுகரித்து -அதனால் பெற்ற
-கொஞ்சம் உறுதி -தானாக பேசாமல் -திருத் தாயார் பேச்சாக –

——————————————————————————-
அவதாரிகை-

இதில்
அனுகாரத்தாலே தரிக்கப் பார்க்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
எங்கனயோ -வில் பிரீதி அபரீதி சமமாய் சென்ற இடத்தில்
ப்ரீத்யம்சம் தலை எடுத்து தரிக்கைக்கு யோக்யதை உண்டாய் இருக்க
பாஹ்ய ஹானியாலே அப்ரீதியம்சமே தலை எடுத்து
பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படி
ஆற்றாமை கரை புரண்டு
கோபிமார் கிருஷ்ணனை அனுகரித்து தரித்தால் போலே
இவரும் உபய விபூதி நாதனை அனுகரித்து
தரிக்கப் பார்க்கிற படியைக் கண்டு
கண் கலங்கின பரிவர்
சந்நிஹிதர்க்கு விலஷணராய் சொல்லிச் செல்லுகிற க்ரமத்தை
நாயகனைப் பிரிந்த ஆற்றாமையாலே
தத் பிரகாரங்களை அனுகரித்து தரிக்கப் பார்க்கிற
தலைவி நிலையை வினவ வந்தவர்களுக்கு
திருத் தாயார் -சர்வேஸ்வரன் ஆவிஷ்டன் ஆனானோ -என்று
க்லேசத்தாலே சொல்லுகிற துறையிலே வைத்து
அருளிச் செய்கிற -கடல் ஞாலத்தில் அர்த்தத்தை
கடல் ஞாலத்து ஈசனை -என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

————————————————————————————–

வியாக்யானம்–

கடல் ஞாலத்து ஈசனை –
கடல் சூழ்ந்த பூமியில் உள்ளோர்க்கு நியந்தாவாய்
அத்தாலே
சர்வ நிர்வாஹகனான சர்வேஸ்வரனை

முன் காணாமல் நொந்தே –
பிரத்யஷ சாஷாத் காரம் பண்ணாமல் நொந்து –
அதாவது –
சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
அறிவரிய பிரானை -என்றும்
அருளிச் செய்த மானஸ சாஷாத்கார மாத்ரம் ஒழிய
பிரத்யஷ சாஷாத்காரம் இல்லை -என்றபடி –
அத்தாலே அவசன்னராய் –

உடனா வனுகரிக்கலுற்று –
அனந்தரமாக
கோபிமார் கிருஷ்ணனை அனுகரித்து
தரித்த படியை ஆராய்ந்து
தாமும் அனுகரித்து தரிப்பதாக
திரு உள்ளத்திலே உற்று –
திடமாக வாய்ந்து –
திருட அத்யாவச்ய யுக்தராய்
வாழ்ந்த வழுதி வள நாடன் -என்னும்படி
பாவ பந்தத்தோடு கிட்டி –

அவனாய்த்தான் பேசும் –
அதாவது –
கடல் ஞாலம் -என்றும்
கற்கும் கல்வி என்றும்
காண்கின்ற -என்றும்
செய்கின்ற -என்றும்
திறம்பாமல் -என்றும்
இனவேய்-என்றும்
உற்றார்கள் என்றும்
உறைக்கின்ற -என்றும்
கொடிய வினை -என்றும்
கொலங்கொள் -என்றும்
கூந்தல் -என்றும்
என்கிற இவை ஆதியாக -பத்தும் பத்தாக –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள்
சகல வித்யா வேதனமும்
வித்யா ப்ரவர்தகத்வாதிகளும்
காரணமான பூத பஞ்சகங்களும்
கால த்ரயத்தால் உண்டான க்ரியா ஜாதங்களும்
ஜகத் ரஷண பிரமுகமான சேஷ்டிதங்களும்
கோவர்த்தன உத்தரணம் முதலான கிருஷ்ண சேஷ்டிதங்களும்
எம்பெருமான் ஆஸ்ரித நாஸ்ரித விஷயங்களில் இருக்கும் இருப்பையும்
ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதி பிரகாரித்வமும்
அகர்ம வச்யத்வ பிரமுகமானவை ஸ்வர்க்க ப்ரமுகவானவையாய்
இப்படி உக்தங்கள் ஆனவை எல்லாம் நான் இட்ட வழக்கு என்று
யானே என்னை ஆய்ந்து ஏறப் பேசி –ஆச்சார்ய ஹிருதயம் –என்றபடி
அவனாகவே அனுகரித்த பிரகாரத்தை அருளிச் செய்யும்-
மாறன் உரையதனை –
ஆழ்வார் அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியானத்தை –

ஆய்ந்துரைப்பார் –
ஆய்ந்த தமிழ் மாலை யாயிரத்து இவையும் ஓர் பத்து என்று
இதன் வைபவத்தை ஆராய்ந்து அனுசந்திப்பார் –

ஆட்செய்ய நோற்றார் –
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்னும்படி
ஆழ்வாருக்கு அடிமை செய்ய நோற்றார் ஆவார்
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே-என்று இறே அவர் இருப்பது
அஹத்வா ராவணம் சங்க்யே ச புத்ரம் சஹ பாந்தவம்–
கொடியான் இலங்கை செற்றேனே -என்னக் கடவது இறே-

—————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: