திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -45-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்———–45-

————————————————————————–

அவதாரிகை –
இதில்
உரு வெளிப்பாட்டாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -என்று
ரஷகனுடைய குண ஞானத்தாலே
மீளவும் தெளிவு குடி புகுந்து
நம்பியைத் தென்குருங்குடி நின்ற -1-10–என்று
முன்பு அனுபூதமான நம்பி உடைய வடிவு அழகு
நெஞ்சிலே ஒருபடிப்பட பிரகாசிப்பிக்கையாலும்
யதா மநோ ரதம் அவ் வடிவு அழகைக் கண்ணால் கண்டு
அனுபவிக்கப் பெறாமையாலும்
ப்ரீத்ய அப்ரீத்ய சமமாய் செலுகிற தம் தசையை
நாயகனோடு கலந்து
பிரிந்து
உரு வெளிப்பாட்டாலே
உருவ நோவுபட்டு செல்லுகிற
பிராட்டி பேச்சாலே அருளிச் செய்கிற
எங்கனயோ – வில் அர்த்தத்தை
எங்கனே நீர் முனிவது -என்று தொடக்கி அருளிச் செய்கிறார் -என்கை —
அது ஆண் தன்மையான அனுபவம் -இது பெண் தன்மையான அனுபவம் -உரு வெளிப்பாடு –
முன்பு அனுபூத அனுபவம் இருக்க ரசாந்த்ரம் தேடுவது அன்றோ –

——————————————————————————–

வியாக்யானம்–

எங்கனே நீர் முனிவது என்னை –
இவ் வாற்றாமைக்கு ஊற்றுவாயான நீங்கள்
இவ் வபிநிவேசம் உடைய என்னை பொடிவது எங்கனே –
எங்கனயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்
என்றத்தை பின் சென்றபடி –

இனி -எங்கனே நீர் முனிவது –
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் –
இனி முனியக் கூடுமோ –
அதுக்கு முன்னே அன்றோ முனிய வேண்டுவது –
அதுக்கு மேலே
சந்திர காந்தாநனம் ராமம் அதிவ்ய பிரிய தர்சனம் -என்னும்படி
ருசி ஜனக லாவண்ய விபவமானது
அசௌ புருஷ ரிஷப ராம -என்னும் படி
உருவ வெளிப்பாடாய் –

நம்பி அழகு இங்கனே தோன்றுகின்றது என் முன்னே –
குண விக்ரஹ சௌந்தர்யாதிகளால் பூரணரான நம்பி யுடைய
ஆயுத
ஆபரண
அவயவ
சோபைகள் ஆனது
அது கண்டு உகக்கிற என் முன்னே
பிரத்யஷமாகத் தோன்றா நின்றது –
அதாவது –
சங்கினோடும் நேமியோடும் -என்றும்
மின்னு நூலும் குண்டலமும் -என்றும்
வென்றி வில்லும் தண்டும் வாளும் -என்றும்
பூம் தண் மாலை தண் துழாய் பொன் முடியும் வடிவும் -என்றும்
தொக்க சோதித் தொண்டை வாயும் -என்றும்
கோல நீள் கொடி மூக்கும் -என்றும்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியோடும் -என்றும்
செய்ய தாமரைக் கண்ணும் -என்றும்
சென்னி நீண் முடி யாதியாய உலப்பில் அணி கலத்தன் -என்றும்
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் -என்றும்
இப்படி அடி தொடங்கி முடி அளவும் அனுபவித்த பிரகாரத்தை
அங்கன் உரு வெளிப்பாடா வுரைத்த –
அப்படியே
உரு வெளிப்பாடு என்கிற துறையிலே
வைத்து அருளிச் செய்த –

தமிழ் மாறன் –
திராவிட ப்ரஹ்ம தர்சியான
ஆழ்வார் –
நம்பி விஷயமாக எங்கனயோ -அருளிச் செய்த
ஆழ்வார் -என்றபடி –

கருதும் அவர்க்கு இன்பக் கடல் –
அபிநிவேசத்துடன் அனுபவிப்பார்க்கு
ஆனந்த சிந்துவாய் இருப்பார் –
சென்னி நீண் முடி யாதியாய வுலப்பில் அணி கலத்தன்
கன்னல் பாலமுதாகி
வந்து என்நெஞ்சம் கழியான்-என்று
ஆழ்வார் தமக்கு அவ் வாகாரம் இனிதாய் இருக்குமா போலே
அவர் சம்பந்திகள் ஆனவர்களுக்கும் ஆழ்வார் அப்படியே இருப்பார் -என்றபடி –

—————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: