திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -42-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி -உலகில்
திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மனமாசு———–42-

—————————————————————————————–

அவதாரிகை –

ஒன்றும் தேவில் -தாம் திருத்த
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் பண்ணியும்
திருந்தாதவரைத் திருத்தியும் செல்லுகிற
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ்
ஒன்றும் தேவிலே தாம் பண்ணின
பகவத் பரத்வ உபதேசத்தைக் கேட்டு
சம்சார பரமபத விபாகம் அறும்படி
நாடாக திருந்தின பாகவத சம்ருத்தியைக் கண்டு ஹ்ருஷ்டராய்
தாம் திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா சாசனம் பண்ணியும்
திருந்துகைக்கு யோக்யதை யுடையாரை உபதேசித்துத் திருத்தியும்
திருந்தாதவரை உபேஷித்தும் செல்லுகிற
பொலிக பொலிக பொலிக – வில் அர்த்தத்தை
பொலிக பொலிக -என்று துடங்கி அருளிச் செய்கிறார் என்கை-

————————————————————————————

வியாக்யானம்–

பொலிக பொலிக வென்று பூ மகள் கோன் தொண்டர் மலிவு தானும் கண்டு உகந்து வாழ்த்தி –
ஜெயத்பதி பலோ ராமோ லஷ்மணஸ் ஸ மஹாபலா
ராஜா ஜயதி ஸூக்ரீவோ ராகவேணா பிபாலிதா -என்னும்படி
பூ மகள் கோன் தொண்டர்
மலிவு தன்னைக் கண்டு உகந்து
பொலிக பொலிக என்று வாழ்த்தி –

பூ மகள் கோன் தொண்டர் மலிவாவது –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து -என்றும்
மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடி -என்றும்
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து -என்றும்
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் -என்றும்
இவ்வுலகத்து வைகுந்தன் பூதங்களேயாய் -என்றும்
பகை பசி தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில் கடிவான்
நேமிப்பிரான் தமர் போந்தார் ஞாலம் பரந்தார் -என்றும்
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே -என்றும்
இப்படி நித்ய சித்தர்
ஸ்வேததீப வாசிகள்
முதலான திருமால் அடியார்கள் எங்கும் திரண்ட சம்ருத்தி –
நித்ய சித்தருக்கும்
ஸ்வேத தீப வாசிகளுக்கும் சாமானராய்த்
திருத்த திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள் -என்றுமாம்-

கண்டு –
தமர்கள் கூட்டம் நாளும் வாய்க்க நங்கட்கு -என்னும்படியாக
தம் கண்களாலே கண்டு

உகந்து –
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கு இனியன கண்டோம் -என்று ஹ்ருஷ்டராய் –

வாழ்த்தி –
அந்த சம்ருத்திக்கு பொலிக பொலிக பொலிக
என்று மங்களா சாசனம் பண்ணி
உலகில் திருந்தார் தம்மைத் திருத்திய மாறன் சொல் மருந்தாகப் போகும் மனமாசு-
ஒன்றும் தேவில் உபதேசத்தாலும் திருந்தாதே
ஒதுங்கி இருந்தவர்களைக் குறித்து
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை -என்றும்
எவ்வுலகும் தன மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே –என்றும்
ஒக்கத் தொழ கிற்றீர் ஆகில் கலி யுகம் ஒன்றும் இல்லையே -என்று
இப்படி பரத்வ உபதேசம் பண்ணி திருத்தியும்
அதிலும் திருந்தாதவர்களைக் குறித்து
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர்
உழி பேர்த்திடும் கொன்றே -என்று
தேடி தடவிப் பிடித்து
பிரத்யா புரச்சரமாய்த் திருத்தியும் சொல்லுகிற ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி
ஔஷதம் அடியாக மநோ மாலின்யம் நிவ்ருத்தமாம் –
ஸ்ரீ வைஷ்ணவ சஜாதீய புத்தியும்
தேவ தாந்த்ரங்கள் இடத்தில் பரதவ புத்தியும் இறே மநோ மாலின்யம் ஆவது
மனனகம் மலமறக் கழுவி -என்று இறே அருளிச் செய்தது –

விஷ வருஷ பலங்கள் கைக் கூடினவர்
அடிமை புக்காரையும்
ஆட்செய்வாரையும் காண
லோக தீபாந்தரங்களின் நின்றும் போந்த
தேவர் குழாம் களைக் கண்டு காப்பிட்டு
பிரஹ்லாத விபீஷண சொல் கேளாத
அரக்கர் போல்வாரைத் தடவிப் பிடித்து
தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்டவர்களை
மேவித் தொழுது உஜ்ஜீவியுங்கோள்-
நீங்கள் நிறுத்துபவர்களை தேவதைகளாக நிருத்தினவனை
மேவிப் பரவும் அவரோடு ஒக்கத் தொழில் யுக தோஷம் இல்லையாம்
என்று விஷ்ணு பக்தி பரராக்கி -என்று இறே ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-

விஷ வருஷ பலங்கள் கை கூடினவர் அடிமை புக்காரையும் -சம்சாரம் -விஷ வருஷம் -கேசவ பக்தியும் -பாகவத சமாப்தம்
அடிமை புக்காரையும் ஆட செய்வாரையும் காண
லோக த்வீ பாந்தரங்களில் நின்றும் போந்த தேவர் குலான்களைக் கண்டு காப்பிட்டு
ப்ரஹ்லாத விபீஷணர் சொற் கேளாத அரக்கர் அசுரர் போல்வாரைத் தடவிப் பிடித்து
தேச கால தோஷம் போக எங்கும் இடம் கொண்டவர்களை மேவித் தொழுது உஜஜீவியுங்கோள்
நீங்கள் நிறுத்துகிறவர்களை தேவதைகளாக நிறுத்தினவனை மேவிப் பரவும் அவரோடு ஒக்கத் தொழில்
யுக தோஷம் இல்லையாம் என்று விஷ்ணு பக்தி பரராக்கிக் கண்ணுக்கு இனியன காட்டலாம்படி யானார்
கண்ணில் நோக்கிக் காணும் பக்தி சித்தாஞ்சனத்தை இடுகிறார் அஞ்சாம் பத்தில்
என்று இறே ஆச்சார்ய ஹிருதயத்தில் நாயனாரும் அருளிச் செய்தது-

———————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: