திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -39-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

நண்ணாது மாலடியை நாநிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் -தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை யொன்று————–39-

தாபஹர தேச வாசித்வம் -கல்யாண குணம் –

————————————————————————————–

அவதாரிகை –

இதில்
சம்சாரிகள் உடைய அனர்த்தத்தைக் கண்டு
வெறுத்த பாசுரத்தை
அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழே
ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற இடத்திலும்
அவை போகக் காணாமையாலே
விரஹ வ்யசனம் அதிசயித்து
தம் இழவுக்கு கூட்டாவார் உண்டோ -என்று சம்சாரிகளைப் பார்த்த இடத்தில்
அவர்கள் பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு
இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களே
பேறும் இழவுமாய் நோவு படுகிற படியைக் கண்டு
அது பொறுக்க மாட்டாமல்
சர்வேஸ்வரனை பார்த்து -ரஷகனான நீ உளனாய் இருக்க
இவை நோவு படுகை போருமோ -பிரானே
என்று விஷண்ணராய்
இவர்கள் நோவைப் போக்குதல்
இது கண்டு பொறுக்க மாட்டாத என்னை முடித்தல்
செய்து அருள வேணும் -என்ன
இவர்களுக்கு இச்சை இல்லாமையாலே
உம்மோபாதி நாமும் நொந்து காணும் இருக்கிறது -என்ன
ஆனால் இவர்கள் நடுவில் நின்றும் என்னை வாங்க வேணும் -என்ன
இவர் கிலேசம் தீரும்படி
பிராட்டியும் தானுமாக திரு நாட்டில் இருக்கும் இருப்பை அவன் காட்டிக் கொடுக்க
அத்தைக் கண்டு அனுபவித்து க்ருதார்த்தர் ஆகிற
நண்ணாதார் முறுவலிப்ப -வில் அர்த்தத்தை
நண்ணாது மாலடியை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————————————————

வியாக்யானம்–

நண்ணாது மாலடியை –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாமல்-
ஆத்மாத்மீயங்களில் தாம் நசை அற்ற இடத்திலும் அவனைக் கிட்டப் பெறாமல்
சம்சாரிகளில் தம் இழவுக்கு கூட்டுவார் உண்டோ என்று பார்த்து

நாநிலத்தே வல்வினையால் -இத்யாதியாலே
வெறுத்து அருளிச் செய்கிறார்
என்கிறார் –

நாநிலத்தே –
நாலு வகைப் பட்ட பூமியிலே
அதாவது
குறிஞ்சி நிலமான திருமலைகளிலும்
முல்லை நிலமான திருக் கோட்டியூர் திரு மோஹூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
மருத நிலமான கோயில் பெருமாள் கோயில் தொடக்கமான ஸ்தலங்களிலும்
நெய்தல் நிலமான திரு வல்லிக் கேணி திருப் புல்லாணி திரு வல்லவாழ்
திரு வண் வண்டூர் தொடக்கமான ஸ்தலங்களிலும்
ஸூலபனாய் இறே அவன் இருப்பது
அந்த சுலப்யமே ஹேதுவாக
அவன் திருவடிகளை ஆஸ்ரயியாதே

நாநிலத்தே வல்வினையால் எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள் –
இப்படி விலஷணமான பூமியிலே
பகவத் ஆஸ்ரயணீயம் பண்ணி உஜ்ஜீவியாமல்

மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பது இது வன்றே மேலைத் தாம் செய்யும் வினை –
என்னும்படி பிரபல கர்மங்களாலே
அசங்க்யாதமான துக்கத்தை மிகவும் அடைந்து பொறுக்கிற
இவ்வாத்மாக்கள்
நந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் அஸ்தமிதே ரவௌ
ஆத்மா நோ நாவ புத்யந்தே மனுஷ்ய உஜ்ஜீவித ஷயம்-என்னும்படி

தண்ணிமையைக் கண்டிருக்க மாட்டாமல் –
இவர்கள் அனர்த்தத்தை கண்டு ஆற்ற மாட்டாமல் –
அதாவது
எண்ணாராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை –
ஏமாறி கிடந்தது அலற்றும் இவை என்ன உலகு இயற்கை –
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை –
தமமூடும் இவை என்ன உலகு இயற்கை –
ஈங்கு இதன் மேல் வெந்நரகம் இவை என்ன உலகு இயற்கை –
அறப் பொருளை அறிந்தோர் ஆர் இவை என்ன உலகு இயற்கை –
கொடு உலகம் காட்டேல் –
இத்யாதிகளாலே இவற்றின் கொடுமையை பல காலும் அருளிச் செய்து

கண் கலங்கும் மாறன் –
திருக் கண்களும்
திரு உள்ளமும்
கலங்கிப் போகும் ஆழ்வார்
அதாவது
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேல்
வாங்கு எனை
கூட்டரிய திருவடிகள் எஞ்ஞான்று கூட்டுதியே –
என்று கூப்பிட்ட பின்பு

எம்பெருமானாலே
கூட்டரிய திருவடிக் கண் கூட்டினை –
அடைந்தேன் உன் திருவடியை –
என்னும்படி சமாஹிதராய்
சம்சாரிகள் நோவுக்கு நொந்து
அருளிச் செய்த ஆழ்வார் –

அருள் உண்டு நமக்கு உற்ற துணை யொன்று –
இப்படி ஈஸ்வரனும் கூட கைவிட்ட
சம்சாரிகளையும் அகப்பட விட மாட்டாமல்
ஈச்வரனோடே மன்றாடும் ஆழ்வார் உடைய அருள்
அந்தரங்கமான ரஷையாக நமக்கு ஓன்று உண்டு –
வேறு ஒரு ரஷகாந்தரம் தேட வேண்டா –
தானே ரஷகமாய் இருக்கும்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்னக் கடவது இறே –

————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: