திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -38-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஏறு திருவுடையை ஈசன் உகப்புக்கு
வேறுபடில் என்னுடைமை மிக்க வுயிர் -தேறுங்கால்
என் தனக்கும் வேண்டா வெனு மாறன் தாளை நெஞ்சே
நம் தமக்குப் பேறாக நண்ணு ——————38-

ஏறு திருவுடையை ஈசன்-தன் திரு மார்பில் ஏறப் பெற்ற
பெரிய பிராட்டியாரை உடையனான சர்வேஸ்வரன்

————————————————————————————–

அவதாரிகை –

இதில் இவ் வாற்றாமைக்கு உதவாமையாலே
அவனுக்கு உறுப்பு அல்லாத
ஆத்மா ஆத்மீயங்களில் தாம் நசை அற்ற
படியைப் பேசின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் –
கீழ்
சீலமில்லாச் சிறியனில் ஓலம் இட்டு அழைத்த இடத்திலும்
வந்து முகம் காட்டக் காணாமையாலே
பிராப்தனாய்
சீலவானாய்
விரோதி நிரசன சமர்த்தனாய்
இருக்கிற சர்வேஸ்வரன் இத்தசையில் முகம் காட்டாமைக்கு அடி
இத்தலையை வேண்டாது ஒழிகை இறே –
அவனுக்கு வேண்டாத
என் ஆத்மா ஆத்மதீயங்களால் எனக்கு ஒரு கார்யம் இல்லை -என்று
அவற்றில் நசை அற்ற படியை அன்யாபதேசத்தால் அருளிச் செய்து-
திருவருள் செய்பவன் போல் –உருவமும் ஆர் உயிரும் உடனே வேண்டான் -விருப்பட்ட வரிசைக்கிரமத்தில் இவர் அருளிச் செய்கிறார்
ஏறாளும் இறையோனில் அர்த்தத்தை
ஏறு திரு உடைய ஈசன் உகப்புக்கு -என்று துடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————————————————————————-

வியாக்யானம்–
ஏறு திருவுடையை ஈசன் –
பிராட்டி ஏகாநை யாகையாலே
நஹிமே ஜீவிதேன– இத்யாதியாலே
அத்தலைக்கு உறுப்பு அல்லாத ஆத்மா ஆத்மீயங்களில்
நசை அற்ற படியைச் சொன்னாள்
இவர் மிதுநாயனர் ஆகையாலே –
திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்றும்
மலர் மாதர் உறை மார்பன் -என்றும்
பட நாகத்தணைக் கிடந்த பரு வரைத் தோள் பரம் புருடன் -என்றும்
இப்படி ஸ்ரீ யபதியாய் இருக்கிற சர்வேஸ்வரன் உடைய உகப்புக்கு
புறத்தியான மாமை முதலான
உடைமையோடு
உயிரோடு
வாசி அற வேண்டா -என்கிறார் –

ஏறு திரு உடைய ஈசன் -என்று
ஸ்ரீயபதித்வத்தால் வந்த சர்வேஸ்வரத்வம் சொல்லுகிறது

ஏறு திரு –
யவௌ வஷஸ் ஸ்தலம் ஹரே –என்று ஆரூட ஸ்ரீசன் இறே

ஏவம் விதனானவன் உடைய
உகப்புக்கு -வேறுபடில் –
அதாவது
சந்தன
குஸூம
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹ்யமாய் இருக்கை அன்றிக்கே

ஸ்வார்த்தைக்கு உறுப்பாக இருக்குமாகில் அத்தை ஆயிற்று
தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் -என்றது –

என்னுடைமை –
அதாவது
மணிமாமை
மட நெஞ்சால்
நிறைவினால்
தளிர் நிறத்தால்
அறிவினால்
கிளர் ஒளியால்
வரி வளையால்
மேகலையால்
உடம்பினால் -என்று
ஆத்மாத்மீயங்களாய் உள்ளவை-

மிக்க உயிர்-
இவற்றில் விலஷணமாய்
ஞானானந்த ஸ்வரூபமாய்
பகவத் சேஷமாய்
ஸ்ரீ ஸ்தனம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே எம்பெருமானுக்கு அத்யந்த போக்யமாய்
இருப்பதொரு ஆத்மா ஸ்வரூபம் என்று-

தேறும் கால் –
பர ப்ரீதி விஷயமாகவே இருக்கிற ஆகாரத்தை
நன்றாகத் தெளியுங்கால் –
நாரணன் தன வாடா மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்றது -என்றும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் -என்றும்
இப்படி தெளிய ஆராய்ந்தால் அத்தலைக்கு உறுப்பாகவே இருக்க வேணும் –

இப்படி அன்றிக்கே
வேருபட்டதாகில்
ஸ்வார்த்தைக்கு உருப்பாகில்
என் தனக்கும் வேண்டா –
பரதந்த்ரனான எனக்கும் தான் வேண்டா –

எனும் மாறன் தாளை- நெஞ்சே -நமக்கு பேறாக நண்ணு –
என்று இப்படி அருளிச் செய்யும் ஆழ்வார் திருவடிகளை
நெஞ்சே
நமக்கு பிராப்யமாம்படி
அடை
நமக்கு இந்த நிர்பந்தங்கள் ஒன்றும் வேண்டா
ஆழ்வார் திருவடிகளே பிராப்யம் என்று பிராபி-

———————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: