திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -35-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்கு உகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து ————35-

————————————————————————————–

அவதாரிகை –

இதில்
அப்ராக்ருத விபூதியில்
அசாதாராண ஆகாரத்தைக் காட்ட
அனுபவித்து ஹ்ருஷ்டராகிற படியைப் பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
வல்வினை தீர்க்கும் கண்ணனான சர்வேஸ்வரன்
சத்ருச சம்பந்த வஸ்துக்களையும் அவனாகவே
அனுசந்திக்கும்படி பிறந்த
இவருடைய பித்து சவாசனமாகத் தீரும்படி
சர்வ தேவ நமஸ்காரம் கேசவனுக்கு செல்லுமே -மழை நீர் அருவிகள் கடலுக்கு போவது போலே -சாதாராண ஆகாரம் சர்வாத்மகம்
அசாதாராண வடிவம் -சத்வாரகமாக அன்றி நேராக கூராழி வெண் சங்கு எனது வாராய் –
விலஷண ஸ்வரூப குண விக்ரஹ விபூஷண ஆயுத பத்னீ பரிசான
விசிஷ்டனாய்க் கொண்டு
பரமபதத்திலே வ்யாவ்ருத்தி தோன்ற இருக்கிற மேன்மையையும்
லீலா விபூதியில் உள்ளார் எல்லாரையும்
ச்ருஷ்ட்ய அனுபிரவேசாதிகளால் ரஷிக்கிற அளவன்றிக்கே
மனுஷ்யாதி ரூபேண வந்து அவதரித்து
ரஷித்துக் கொண்டு போருகிற படியையும் இவருக்குக் காட்டிக் கொடுத்து
சர்வேஸ்வரன் இவரோடு வந்து பூர்ண சம்ச்லேஷம் பண்ணி அருள
அத்தைக் கண்டு
சூழ் விசும்பு அணி முகிலுக்கு மேலே அங்கே சென்றால்
பண்ணுகிற மங்களா சாசனத்தை
இங்கேயே இருந்து
அவனுடைய உபய விபூதி ஐஸ்வர்யத்துக்கும் மங்களா சாசனம் பண்ணி
க்ருத்க்ருத்யராய்
உபய விபூதியிலும் என்னோடு ஒப்பார் இல்லை -என்று
ஹ்ருஷ்டர் ஆகிற -வீற்று இருந்து ஏழ் உலகின் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார் -வீற்று இருக்கும் மால் விண்ணில் -இத்யாதியாலே -என்கை –

———————————————————————————

வியாக்யானம்–

வீற்று இருக்கும் மால் -விண்ணில்
விண்ணில்-வீற்று இருக்கும் மால்-
ஆசீன காஞ்சநே திவ்யேச ச சிம்ஹாச நே பிரபு -என்றும்
ராமம் ரத்ன மயே பீடே சஹ ஸீதம் ந்யவேசயத் -என்றும்
பரிவார்யா மஹாத்மானம் மந்த்ரினஸ் சமூபசிரே -என்றும்
சொல்லுகிறபடியே
வானக் கோனாய்
விண்ணோர் பெருமானாய்
மைய கண்ணாள் மலர் மேல் உறை மார்பனாய்
வீற்று இருந்து ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல
எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் –

மிக்க மயல் தன்னை –
ஆழ்வார் உடைய அத்யந்த
வ்யாமோஹத்தை-
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே -என்று
பெற்றவர்களும் பேசிக் கை விடும்படியான
மிக்க மயல் தன்னை

ஆற்றுதற்காத் –
கைபிடித்த தான் ‘இத்தை ஆற்றுதற்க்காக-

தன் பெருமையானது எல்லாம் -தோற்ற வந்து –
கீழில் ப்ரமம் எல்லாம் ஆறும்படி –
பூவின் மிசை நங்கைக்கு இன்பன் –
தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான் தன்னை –
என்று
பிராட்டியாரோடும்
நித்ய சித்தரோடும்
கூடி இருக்கிற இருப்பையும்
ஞாலத்தார் தமக்கும் வானவர்க்கும் பெருமானை -என்றும்
உபய விபூதி ஐஸ்வர்ய உக்தனாய் இருக்கிற படியையும்
வீவில் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை -என்றபடி
குண விக்ரஹாதி வைலஷண்யம் முதலான
வைபவம் எல்லாம் பிரகாசிக்க
இங்கே வந்து –

நன்று கலக்கப் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -என்னலாம்படி
இவருடன் சம்ச்லேஷிக்க –

போற்றி நன்கு உகந்து –
சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை கண்டு –
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
மங்களா சாசனம் பண்ணி
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்நதன் மேவியே –
என்று மிகவும் ஹ்ருஷ்டராய் –

அந்த ப்ரீதி உத்ததியாலே
வீறு உரைத்தான் –
வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுண்டே -என்றும்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -என்றும்
தாம் உபய விபூதியிலும் வ்யாவர்த்தரான படியைப் பேசினார்

சென்ற துயர் மாறன் தீர்ந்து –
நிவ்ருத்த துக்கரான ஆழ்வார்
விஸ்லேஷ வ்யசனம் -என்னுதல்
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீயவே -என்றும்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே -என்றும்
சொல்லுமவை யாதல் –

சென்ற துயர் -தீர்ந்து – மாறன் -நன்கு -உகந்து -வீறு -உரைத்தான் –
நடந்து சென்ற துக்கம் தீர்ந்து
ஆழ்வார் அத்யந்த ப்ரீதராய்
ப்ரீதி பிரகர்ஷத்தாலே
தம்முடைய பெருமையை
தாமே பேசினார் -ஆயிற்று-

——————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: