திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -33-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

கோவான வீசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத் துவாதிதனை -மேவிக்
கழித்தடையைக் காட்டிக் கலந்த குணம் மாறன்
வழுத்துதலால் வாழ்ந்துது இந்த மண் ————33

பட்டர் நிர்வாகம் -கால உபாதி நிரசன குணம் –

———————————————————————————-

அவதாரிகை –

இதில்
கால உபாதியைக் கழித்து அனுபவிப்பித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி தேச கால விப்ரக்ருஷ்டங்களானதன் படிகளை அனுபவிக்க வேணும் என்று ஆசைப் பட்ட இவர்க்கு
கால சக்கரத்தான் ஆகையாலே
கால உபாதியைக் கழித்து
வர்த்தமான காலம் போலே யாக்கிக் கொடுத்து
இவர் சத்தையே தனக்கு எல்லாமாக இருக்கிற தன்
பிரணயித்வ குணத்தையும்
அவன் அனுபவிப்பிக்கவே எல்லாம் பெற்றாராய்
இந்த பிரணயித்வ குணத்தையும் அனுபவித்து
அந்த ப்ரீதி பிரகர்ஷத்தாலே அத்தையே பேசிச் செல்லுகிற
கோவை வாயாளின் அர்த்தத்தை
சங்க்ரஹித்து அருளிச் செய்கிறார்
கோவான ஈசன் -இத்யாதியால் -என்கை –

———————————————————————–

வியாக்யானம்–

கோவான வீசன்-
ஆழ்வாரைத் தரிப்பிக்கவே
ஜகத்து உஜ்ஜீவிக்கும் என்று
சர்வ நிர்வாஹகனான
சர்வேஸ்வரன் –
ஆழ்வார் அழிந்தால் அவருக்குள் தானும் உளனே -மின்னு மா மழை தவழும் -ஆறு அங்கம் கூற
அவதரித்தவர்க்கு தன்னைக் காட்டி அருளினான்

குறை எல்லாம் தீரவே –
கீழில் திருவாய் மொழியில்
தேச காலாதித போக்ய வஸ்துவை அனுபவிக்கப் பெறாத
துக்கத்தால் வந்த சங்கோசம் எல்லாம்
நிவ்ருத்தமாம்படி
கால சக்கரத்தான் ஆகையாலே –

ஓவாத காலத் துவாதிதனை —
விச்சேதியாமல் நடந்து செல்லுகிற காலத்தில்
அதீதமான உபாதியை –

மேவிக் கழித்து –
அகால பலின -என்னும்படி
இவரோடு சேர்ந்து
அந்த கால உபாதியைக் கழித்து –

அடைய காட்டிக் –
கீழே அபேஷித்த அவதானங்களைக் காட்டி -என்னுதல்-
அன்றிக்கே
பூசும் சாந்து –
கண்ணி எனது உயிர் -இத்யாதிகளாலே –
கரணங்களும் கரணியான இவர் சத்தையும்
இவருக்கு அங்கராக ஆபரண அம்பராதிகள் ஆனபடியையும் காட்டினபடி-கீர்த்தி -ஆதி சப்தத்தில்
ஆகவுமாம் –
உன்னாகம் முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே -என்று
என் ஆவி நிர் துக்கமாயிற்று என்று அருளிச் செய்தபடி –

கலந்த குணம் –
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் என்ன வண்ணமே நின்றாய்
என்று உரைக்க வல்லனே -என்று இப்படி
ஏக தத்வம் என்னலாம்படி

கலந்த குணம் –
சம்ச்லேஷித பிரணயித்வ குணத்தை –

மாறன் வழுத்துதலால் –
ஆழ்வார் சத்தை பெற்று
யானும் எம்பிரானை ஏத்தினேன் யான் உய்வானே -என்று
இப்படி கீழ் வ்யசனம் தீர்ந்து
எம்பிரானை ஸ்தோத்ரம் பண்ணுகையால் –

வாழ்ந்துது இந்த மண் –
இந்த ஜகத்தில் உள்ளார் எல்லாரும் எல்லாம் சத்தை பெற்று
வாழ்ந்தார்கள் –
வையம் மன்னி வீற்று இருந்து –என்று இறே பல சுருதி –
அன்றிக்கே
விஸ்வம் பரா புண்யவதீ-என்று
ஆழ்வார் கால் தரித்து இருக்கையாலே
பூமி பாக்யவதியாகி
வாழ்ந்தது ஆகவுமாம்-

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: