திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -32-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பாலரைப் போல் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த -சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ —————32-

—————————————————————————
அவதாரிகை –

இதில்
தேச கால விப்ரக்ருஷ்டமான அவன் படிகளை
தம் தாம் தேச கால விசிஷ்டமாம் படி
அனுபவிக்க வேண்டும் என்று ஆதரித்த
பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
மூன்று களையும் பறித்து சங்காயுமும் வாரின பயிர்
சதசாகமாகப் பணைக்குமா போலே –
வீடுமின் முற்றவும்
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் –
என்ற மூன்று திருவாய் மொழிகளிலே
சம்சாரிகளைக் குறித்து உபதேசித்த இடத்தில்
அவ் உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே
தமக்கு
ரசாந்தரங்களாலே அபி பூதனாய்க் கிடந்த
முடியானேயில் விடாய்க்கு உத்தம்பகமாய்
பக்தி சத சாகமாகப் பணைக்க
அத்தாலே தேச கால விபக்ரஷ்டமான அவன் படிகளை
இப்போதே கண்டு அனுபவிக்க வேண்டும் என்னும் அபேஷை பிறந்து
அபேஷித்த படியே அனுபவிக்கப் பெறாமையாலே
தாம் நோவு பட்டு சொல்லுகிற படியை
அந்யாப தேசத்தாலே அருளிச் செய்த
பாலனாய் ஏழு உலகின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார்
பாலரைப் போலே -இத்யாதியாலே -என்கை –

———————————————————————
வியாக்யானம்–

பாலரைப் போல் சீழ்கிப் –
பிராப்த அப்ராப்த விவேகம்
பண்ண அறியாத பாலர்
தேசத்தாலே விப்ரக்ருஷ்டமான அம்புலி யம்மானையும்
காலத்தாலே கை கழிந்து போன பலாதி வஸ்துக்களையும்
அப்போதே கொடு வந்து தர வேணும் -என்று
பாலச்ய ருதி தம்பலம் -என்னும்படி ரோதனத்தை முன்னிட்டு
அபேஷிக்குமா போலே
இவரும் தேச கால விப்ரக்ருஷ்டமான
பர அவஸ்தய தத் அனுபவங்களை
அப்போதே பெற வேணும் என்று
அழுவன் தொழுவன் -என்னும்படி
பாலர் செய்யுமத்தைச் செய்து
அபீ தாநீம் ச காலச்யாத் வநாத்பிரத்யா கதம்புன -என்று இறே
ஆசை யுடையார் பவிஷ்ய காலத்தை சம காலமாக அபேஷித்து இருப்பது
அப்படியே இறே இவர் பூத காலத்தில் படிகளை அபேஷிக்கிறார் –

பரனளவில் வேட்கையால் –
சர்வ ஸ்மாத் பரன் இடத்தில்
பர பக்தியாலே –

பரன் -காலத்தால் தேசத்தால் கை கழிந்த –
பாதங்கள் மேல் அணி பைம் பொற்றுழாய் என்றே யோதுமால் எய்தினாள் -என்றத்தை நினைக்கிறது
தேச விபக்ருஷ்டமான பர வ்யூஹங்களும்
கால விபக்ருஷ்டமான விபவமும்
பர விஷய பக்தி ஏகதேசமாய்
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் தாளினை மேல்
தண்ணம் துழாய் என்றே மாலுமால் -என்று துடங்கி
கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியும்-என்று
விபவ பிராவண்யம் இறே விஞ்சி அருளிச் செய்தது –
அவை ஆவன
குரவை பிணைந்தவர் நல்லடி -என்றும்
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி -என்றும்
குடக் கூத்தனார் தாளிணை -என்றும்
அகலிடம் கீண்டவர் பாதங்கள் -என்றும்
திருமாதினைத் தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாள் -என்றும்
இலங்கை நகரம் பரி யுய்தவர் தாளிணை -என்றும்
கண்ணன் கழல் -என்றும்
இப்படி விபவத்தை அடி விடாமல் இருக்கிற படி -என்கை
ந்யக்ரோத சாயியையும் -ஆலிலை / பீயூஷ ஹாரியையும்–பீயூஷ -அமுதில் வரும் -பெண்ணமுதம்
நாயக்ரோத சாயீ பகவான் பீயூஷா ஹரணச்ததா -என்று
விபவங்களோடே இறே சஹபடித்தது-
இங்கேயும்
மடந்தையை வண் கமலத் திரு மாதினை தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் -என்றும்
விண்ணவர் அமுது உண்ண அமுதினில் வரும் பெண் அமுதை
ஸ்வீகரித்த படி சொல்லிற்று –

சால அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான் –
இப்படி
தேச காலங்களால் கை கழிந்து இருக்கிறது
தத் கால வர்திகளுக்கும் தத்ரஸ்தராய் ஆனவர்களுக்குமே இறே அனுபாவ்யமாய் இருப்பது
என்று அறியாமல் –
அபி நிவேச அதிசயம் மாறுபாடுருவும்படி யாவகாடமாய்-அவகாடம் -ஆழ்ந்து அனுபவம் –
அத்தை அப்போதே பெறாமையாலே
சிதிலர் ஆனால் –

இதுக்கடி
குருகூரில் வந்துதித்த கோ –
ஆகையாலே
திரு அயோத்தியில் பிறப்பு ராம பக்தியை ஜனிப்பிக்குமா போலே
திரு நகரியில் பிறப்பும் பராபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் இறே

கோ
ராஜா
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் ராஜா என்றபடி –
இவ்விடம் அராஜாகமாய் ஆகாமைக்கு ஆயிற்று
ஆழ்வார் அங்கு நின்றும் போந்து ஆவிர்பவித்தது –

————————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: