திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -31-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஒரு நாயகமாய் யுலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பம் -திறமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மாலடிமையே யினிதாம்
பன்னியிவை மாறன் உரைப்பால் ———31-

மாறன் உரைப்பால் போம் –உயற்பாலவே கிரியை வரவழைத்துக் கொள்ள வேண்டும் -அறியப்பட்டன என்றுமாம்
——————————————————————————
அவதாரிகை –

இதில்
ஐஸ்வர்யாதிகளின் அல்ப அஸ்திரத்வாதி தோஷங்களை
பேசின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
சீர் பரவப் பெற்ற நான் -என்று
கீழ்
பகவத் அனுபவத்தாலே ஹ்ருஷ்டரான ஆழ்வார்
அந்த ஹர்ஷத்தாலே
இவ் விஷயத்தை ஒழிய
ஐஸ்வர்யாதிகளிலே மண்டி இருக்கிறவர்களைக் குறித்து
மீளவும்
இவற்றின் யுடைய அல்ப அஸ்திரத்வாதிகளாகிற தோஷங்களை அறியாதே
இவற்றிலே மண்டி இருக்கிறார்கள் என்று
இவற்றின் தோஷங்களைப் பரக்க பேசா நின்று கொண்டு
பரம புருஷார்த்த பூதனான
ஸ்ரீயபதியின் திருவடிகளை ஆஸ்ரயுங்கோள் என்று
பிறருக்கு உபதேசித்துச் செல்லுகிற
ஒரு நாயகத்தின் அர்த்தத்தை சங்க்ரஹித்து
ஒரு நாயகமாய் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————————

வியாக்யானம்–

ஒரு நாயகமாய் -என்று துடங்கி
யுலகுக்கு -ஒரு நாயகமாய் –
யுய்க்கும் இன்பமும்
வானோர்
இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் –
திறமாகாது –
என்கிறார் –
ஒரு நாயகமாய் ஓட வுலகு உடன் ஆண்டவர் –
என்றத்தை நினைக்கிறது –
சார்வ பௌமராய்
பாண்டரச்யாதா பத்ரச்ய – என்று
ஏகாத பத்திரமாக நாட்டை நடத்துகிற வத்தால் வருகிற ஸூகமும்
எனைத்தோர் யுலகங்களும் இவ் வுலகாண்டு கழிந்தவர் –என்றும்
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பார் எனபது இல்லை -என்றும்
சொல்லுகையாலே
அஸ்த்ரமாய் இருக்கும் –

வானோர் இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது
தேவர்களுக்கு வாசஸ் ஸ்தானமாய்
ஐஹிக போக விலஷணமான ஸ்வர்க்காதி அனுபவம்
அதுவும் திறமாகாது-
புக்த்வாஸ் ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யே மர்த்த்ய லோகம் விசந்தி –
என்கிறபடியே அஸ்திரமாய் இருக்கும்
குடிமன்னு மின் ஸ்வர்க்கமும் எய்தியும் மீள்வர்கள் -என்றத்தைப் பின் சென்றபடி –

இரு நாட்டில் ஏறி யுய்க்கும் இன்பமும் -ஆவது-
ஸூக்ருத விசேஷத்தாலே ப்ராபித்தாலும்
ஸ்திரமாகாது
இது ஆ ப்ரஹ்மபவனம் புனராவ்ருத்தி-என்பதுக்கும் உப லஷணம்-

மன்னுயிர்ப் போகம் தீது-
இறுகல் இறப்பு -என்று
சங்கோச ரூப மோஷம் ஆகையாலே
அதுவும் தோஷ யுக்தமாய் இருக்கும் –

மன்னுயிர்ப் போகம்-என்கையாலே
நித்தியமான ஆத்மா அனுபவம்
கீழில் அவை போல் அஸ்தரம் போகம் ஆகை அன்றிக்கே
நித்ய போகமாய் இருந்ததே யாகிலும்
பர ப்ரஹ்ம அனுபவத்தைக் குறித்து
சிற்றின்பமாய் இருக்கும்
ஆகையாலே -தீது -என்றது –

மாலடிமையே யினிதாம் -பன்னியிவை மாறன் உரைப்பால் –
பன்னியிவை மாறன் உரைப்பால் -மாலடிமையே யினிதாம்-
இவற்றின் அல்ப அஸ்த்ர த்வாதி தோஷங்களை ஆராய்ந்து
ஆழ்வார் அருளிச் செய்கையாலே
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடைய தாச்யமே சரசமாய் இருக்கும்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ என்றும்
செம்மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ -என்றும்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ -என்றும்
பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ -என்றும்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ -என்றும்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ -என்றும்
பணம் கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ -என்றும்
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ -என்றும்
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடு அக்தே -என்றும்
அக்தே உய்யப் புகும் ஆறு -என்றும்
அருளிச் செய்தவை எல்லாவற்றையும் நினைத்து
மால் அடிமையே இனிதாம் -என்று அருளிச் செய்தது –

—————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: