திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -27-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு -இயல்வுடனே
ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா——–27-

———————————————————————-

அவதாரிகை –

இதில்
ததீயரை பத்தும் பத்தாக உத்தேச்யராக அனுசந்தித்த
பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
சௌலப்ய காஷ்டையை யுபதேசிக்க அத்தையும்
காற்கடை கொள்ளுகையான
சம்சாரிகளோட்டை சஹவாசத்தால் வந்த வெக்காயம் மாறாத படி –
தனக்கு பாத ரேகை போலே பரதந்த்ரரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
அவன் காட்டக் கண்ட அவர்கள் திருவடிகளிலே தலையை மடுத்து
அவர்கள் தான் அவன் படிகளிலே பல படியாக மண்டி இருக்கிற படியைக் கொண்டாடி
அவர்கள் எல்லை நிலத்திலே சென்று இனியராகிற
பயிலும் சுடர் ஒளி யின் தாத்பர்யத்தை
பயிலும் திருமால் -இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –
கச்சதா மாதுலகுலம் -இதிவத் –

—————————————————————————————-

வியாக்யானம்–

பயிலும் திருமால் –
ஆஸ்ரித சங்க ஸ்வபாவனான
ஸ்ரீ யபதியினுடைய திருவடிகளிலே
இத்தால் -திரு நாரணன் -என்றத்தை சொல்லுகிறது —

பயிலும் திரு என்று
எம்பெருமானோடே சர்வ காலமும் சம்ஸ்லிஷ்டையான ஸ்ரீ என்னவுமாம் –

பதம் தன்னில் நெஞ்சம் தயலுண்டு நிற்கும் ததியர்க்கு –
என்றது –
பாதம் பணிய வல்லாரை -என்றபடி –

நெஞ்சம் தயலுண்டு நிற்கையாவது –
திருவடிகளிலே போக்யதையை அனுசந்தித்து
ச்நேஹார்த்தரதா யுக்தா சித்தராய் தன நிஷ்டராய் இருக்கை-என்றபடி
உன் இணைத் தாமரை கட்கு அன்புற்று நிற்குமது -என்னக் கடவது இறே –

அன்றிக்கே
தயல் -என்று தையலாய்
திருவடிகளிலே பந்த பாவராய் இருக்குமவர்கள்
என்றாகவுமாம்
ததீயர் -என்று
தத் சம்பந்தமே நிரூபகமாய் உள்ளவர்களுக்கு -என்கிறது
பயிலும் திரு உடையார் -என்றும்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் -என்றும்
பாதம் பணிய வல்லார் -என்றும்
திரு நாரணன் தொண்டர் -என்றும்
இப்புடைகளிலே நிரூபகமாய் இருக்கை -என்கை –
பாகவதம் -பாகவத இதம் பாகவதம் போலே அவன் சம்பந்தமே நிரூபகம்

இயல்வுடனே ஆளானார்க்குக் ஆளாகும் மாறன் அடி –
வடிவு அழகிலும்
ஆயுத ஆபரணாதி ஒப்பனை அழகிலும்
தோற்று அடிமையாய் இருப்பவர்களுக்கு ஆளாகையே
ஸ்வரூபமாய்
இருக்கும் ஆழ்வார் திருவடிகளில் –

ஆளாகார் –
அடிமை ஆகாதார் –

சன்மம் முடியா –
சன்ம ஷயம் பிறவாது –
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினார் -என்னும்படி
ஆழ்வார் சம்பந்தம் உடையவர்களுக்கு இறே
சம்சார சம்பந்தம் அறுவது –
இவையுமோர் பத்து சொன்னால் இறே சன்மம் செய்யாமே
இலங்கு வான் யாவரும் ஏறுவது
அல்லாதாருக்கு சித்தியாது இறே –

ஆகையால்
ததீய சேஷத்வத்தின்
எல்லை நிலத்திலே
நிற்கிற ஆழ்வார் திருவடிகளை ஆஸ்ரயிக்கவே
ஜன்ம சம்சார பந்த நிவ்ருத்தி பூர்வகமாக
மோஷ சித்தியாம் –
என்றபடி –

———————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: