திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -26-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றி வவற்றுள் -எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று—————-26-

———————————————————————————-
அவதாரிகை –

இதில்
அர்ச்சாவதார பர்யந்தமான சௌலப்யத்தை சம்சாரிகளைக் குறித்து
உபதேசிக்கிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தாமே விழுவாரைத் தடி கொண்டு அடிக்கை அன்றோ நாமும் கை விடுகை -என்று
தம்மாலே பொடியப் பட்டார் நாட்டார் இழவு பொறுக்க மாட்டாத
கிருபா அதிசயத்தாலே
மீண்டும் அவனுடைய சௌலப்யத்தை உபதேசிக்கைக்காக
பர வ்யூஹ விபவங்களை
அடைவே அருளிச் செய்து கொண்டு சென்று
நீங்கள் உகந்த படியே உகந்து எழுந்து அருளப் பண்ண
அத்தை அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தோடு
ஒக்க விரும்பும் சீலாதி அதிசயத்தாலே
உங்களோடு புரையறக் கலந்து
சர்வ அபேஷிதங்களையும் குறைவற உபகரிக்கும்
அர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரயிங்கோள் என்கிற
செய்ய தாமரைக் கண்ணனில் தாத்பர்யத்தை
அருளிச் செய்கிறார்
செய்ய பரத்துவமாய் -இத்யாதியாலே -என்கை-

——————————————————————————-

வியாக்யானம்–

செய்ய பரத்துவமாய்ச் –
பர பரானாம் பரம -என்று
இதர விலஷணமான
அழகிய பரத்வமாய் –

சீரார் வியூகமாய் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந-என்னும்படி இறே
வ்யூஹம் இருப்பது

சீர் –
என்று குணம் ஆதல்
ஐஸ்வர்யம் ஆதல் –

துய்ய விபவமாய்த் –
பிரத்யஷ அனுபவ யோக்யமான
தூய்மையை யுடைய விபவமாய் –
செய்ய தாமரைக் கண்ணன் -என்றும்
அமரர் குல முதல் -என்றும்
தடம் கடல் கிடந்தான் -என்றும்
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணல் -என்றும்
தயரதற்கு மகன் தன்னை -என்றும்
குரவை கோத்த குழகனை -மணி வண்ணனை குடக் கூத்தனை என்றும்
இறே பரத்வாதிகளை அருளிச் செய்தது

தோன்றி வற்றுள் –
இப்படி
தேச
கால
அதிகாரி
நியமங்களை யுடைத்தாய்
பிரமாணங்களாலேயாய் பிரத்யஷிக்கலாம் படியாய்
இருக்கிற இவற்றில் வைத்துக் கொண்டு –

எய்துமவர்க்கு இந்நிலத்தில் –
இவ் விபூதியில்
கிட்டி ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு –

அர்ச்சாவதாரம் எளிது என்றான் –
சுலத்தாலே அர்ச்சாவதாரம்
சமாஸ்ரயனத்துக்கு
சஷூர் விஷயமுமாய்
நித்ய சந்நிதியும் யுண்டாகையாலே அதி ஸூலபம் என்கிறார் –

நெஞ்சினால் நினைப்பான் எவனாகும் நீள் கடல் வண்ணன் -என்றத்தை நினைக்கிறது –
எளிவரும் இணைவனாம் -என்றவை பரத்வமாம் படி அவனாகும் சௌலப்ய காஷ்டையை காட்டி -என்றார் இறே
எளிவரும் இயல்பினான் -இணைவனாம் -அவருக்குள் இரண்டும் பரத்வமாம் படி -அவனாகும் சௌலப்யம் காஷ்டை -ஆச்சார்ய ஹிருதயம்
ஸ்ரீ மத்ய அயதனே விஷ்ணோஸ் சிஸ்யே நரவராத்மஜா -என்றும் –
நாரயாணம் உபாகமத் -என்றும்
விபவத்தாலே அர்ச்சயமான ஏற்றம் உண்டாய் இறே இருப்பது -பெருமாள் அர்ச்சித்த -ஏற்றம் -விசாலாட்சி
இப்படி அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தவர் தாம்
இன்னார் -என்கிறார் –
பன்னு தமிழ் மாறன் பயின்று-
அதாவது
சேதனரோடு செறிந்து ஆராயப் படுமதான
த்ரவிடத்தை நிரூபகமாக யுடையரான ஆழ்வார் –
பண்ணிய தமிழ் -என்னும்படி
பிரமாண சரமத்தை வெளி இட்டால் போலே
பிரமேய சரமமான அர்ச்சாவதாரம் எளிது என்று வெளி இட்டு அருளினார் -என்கை-

———————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: