திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -24-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

புகழ் ஓன்றும்மால் எப்பொருள்களும் தானே
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க -மகிழ் மாறன்
எங்கும் அடிமை செய்ய இச்சித்து வாசிகமாய்
அங்கு அடிமை செய்தான் மொய்ம்பால் ———24-

———————————————————————————

அவதாரிகை –

கீழ் பாரித்த கைங்கர்யத்துக்கு அனுகுணமாக
அவன் சர்வாத்மபாவத்தைக் காட்ட
அத்தைப் பேசி அடிமை செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ்
இவர் அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தபடியே
சர்வாத்ம பாவத்தைக் காட்டி அடிமை கொள்வதாக
ஒருப்பட்ட சர்வேஸ்வரனுக்கு
உத்யோக மாத்ரத்திலே வயிறு நிறையும் அவன் பிரக்ருதிக்கும்
வாசிகத்துக்கும் மேற்பட அடிமை செய்ய மாட்டாத தம் பிரக்ருதிக்கும்
சேர வாசிகமாக அடிமை செய்து தலைக் கட்டுகிற
புகழு நல ஒருவனில் -அர்த்தத்தை
புகழ் ஒன்றும் மால் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

————————————————————————————–

வியாக்யானம்–

புகழ் ஓன்றும் மால் –
கீழ்
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனாய் –
புகழு நல ஒருவன் –
என்று சர்வைஸ் ஸ்துதியனாமது சத்ருசமாய் சேரும்படியான
சர்வேஸ்வரன்
பொழில் ஏழும் காவல் பூண்ட படியாலே புகழும் பொருந்தி இருக்கும் இறே
அன்றிக்கே
இவரை அடிமை கொள்ளுகையால் வந்த
அந்தமில் புகழ் பொருந்தின -என்றுமாம் —

எப் பொருள்களும் தானே நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க –
சமஸ்த வஸ்துக்களும் தான் என்னும்படி
சர்வ சப்த வாச்யனாய் வர்த்திக்கிற
பிரகார பிரகாரி பாவத்தை பிரகாசிப்பித்துக் கொண்டு
இவருக்கு ஞான சாஷாத்காரம் ஆம்படி நிற்க –
அதாவது
பொருவில் சீர் பூமி என்கோ -என்று துடங்கி அருளிச் செய்த பூதங்கள்
குன்றங்கள் அனைத்தும் என்கோ மேவு சீர் மாரி என்கோ -என்றது துடக்கமான பௌதிகங்கள்
சாதி மாணிக்கம் என்கோ -இத்யாதியில் உஜ்ஜ்வலமான மாணிக்யாதிகள்
அச்சுதன் –அச்சுவைக் கட்டி என்கோ -இத்யாதியில் ரசத்வ பதார்த்தங்கள்
நான்கு வேதப் பயன் என்கோ சமய நீதி நூல் என்கோ
நுடங்கு கேள்வி இசை என்கோ -என்று
காநாதி சப்த ராசிகள் –
வானவராதி -இத்யாதியில் மோஷாதி புருஷார்த்தங்கள்
ஒளி மணி வண்ணன் -இத்யாதியில் ஜகத் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகள்
இவற்றுக்கு அடைய காரணமான -யாவையும் யாவரும் தானே -என்கிற பிரகிருதி புருஷர்கள்
இவற்றை அடைய விபூதியாக யுடையனாய்
இவற்றிலே அந்தர்யாமியாக வியாபித்து
தோய்விலன் -என்று தத்கத தோஷ ரஹிதனாய் சம்ப்ருஷ்டனாய் இருக்கிறபடி –
சர்வம் சரீரம் தே ச்தைர்யன் தேவ ஸூ தாசலம்
அக்னி கோப பிரசாதாஸ் தேசோமஸ் ஸ்ரீ வத்ச லஷண -என்னும் படியே
இப்படி
புகழு நல ஒருவன் என்கோ பொருவில் சீர் பூமி என்கோ என்று துடங்கி
நான்முகக் கடவுள் என்கோ -என்னும் அளவும்
சகல வஸ்துக்களும் தான் என்னும் படி பிரகாரமாக
வர்த்திக்கிற பிரகாரியை காட்டிக் கொண்டு நிற்க –

மகிழ் மாறன் –
வகுள தரரான ஆழ்வார் –

எங்கும் அடிமை செய்ய இச்சித்து-
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்
திரு வேங்கட முடையான் திருவடிகளிலே
அடிமை செய்ய இச்சித்து –
வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்-
அப்படி ஆசைப்பட்ட அவ் விஷயத்திலே
என்கோ என்கோ -என்று வாசிகமாக அடிமை செய்தார் –

மொய்ம்பால் –
ய ஆத்மதாபலதா –
வலந்தரும்-
நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடுயிரே –
என்று அவன் தந்த ஆத்மபலத்தாலே சத்தை உண்டானால் இறே
சம்ருதியை அபேஷிப்பது-
மொய்ம்பு -மிடுக்கு
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும்
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
கண்ணா ஏழ் உலகுக்கும் உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை -என்றும்
தாய் தந்தை உயிர் ஆகின்றாய் –தொல் புகழ் உலகுக்கும் நாதனே-என்றும்
பரமா தண் வேங்கடம் மேகின்றாய் -என்றும்-
திரு வேங்கடத்தானுக்கு என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கு -என்றும்
அம்பரம் -இத்யாதியாலும்
அவனுடைய
உபய விபூதி நிர்வாஹகத்வத்தையும்
அந்தர் வ்யாப்தியையும்
சர்வ கால வர்த்தித்வத்தையும்
அருளிச் செய்கையாலே
வ்யாப்த அனுசந்தான ரூப வாச கைங்கர்யம் –
திரு வேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமானுக்கே இறே ஏற்றி இருப்பது
அத்தைப் பற்றி இறே
அங்கே அடிமை செய்தான் -என்று இவர் அருளிச் செய்தது –

——————————————————————————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: