திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -23-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழு விலா வாட்செய்ய மாலுக்கு -எழு சிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே புகழ்———-23-

—————————————————————————

அவதாரிகை –

இதில்
கைங்கர்யத்தில் பெரிய பாரிப்பை பேசினபடியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இப்படி பிரகிருதி சம்பந்தத்தின் உடைய கொடுமையை அனுசந்தித்து-3-2-
சோகாவிஷ்டர் ஆன இவருடைய கிலேசத்தை
மாற்றுகைக்காக
தான் வடக்குத் திருமலையில் நிற்கும் நிலையைக் காட்டிக் கொடுக்க
நிலை பெற்றேன் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்று அவனைக் கிட்டி
தம்முடைய ஸ்வரூபம் பெற்றவாறே
ஸ்வரூப அனுரூபமாக அடிமை செய்து வாழ வேணும் -என்று
சீலாதிகனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே
வழு விலா வடிமை செய்து வாழப் பாரிக்கிற
ஒழிவில் காலத்தின் தாத்பர்யத்தை
ஒழிவிலாக் காலம் -என்று துடங்கி அருளிச் செய்கிறார்-

—————————————————————————–

வியாக்யானம்–

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி –
சர்வ தேச
சர்வ கால
சர்வ அவஸ்தைகளையும்
நினைக்கிறது –

வழு விலா வாட்செய்ய மாலுக்கு –
அடிமையில் ஒன்றும் நழுவுதல் இன்றிக்கே
சர்வ வித கைங்கர்யங்களையும்
சர்வேஸ்வரனுக்கு செய்ய வேணும் என்று –

எழு சிகர வேங்கடத்துப் பாரித்த –
எழுச்சியை யுதைத்தான சிகரங்களை யுடைய
திருமலையிலே பாரித்த —
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ் சதே-என்று
சித்ர கூடத்திலே
இருவருமான சேர்த்தியிலே
அனைத்து அடிமையும் செய்ய வேணும் என்று ஆசைப் பட்ட
இளைய பெருமாளைப் போலே
இவரும்-
அலர்மேல் மங்கை உறை மார்பனாய்-
ஓங்கு வேங்கடம் மேவி
தான் ஓங்கி நிற்கிற
சென்னி ஓங்கு தண் திரு வேங்கட முடையான்
திருவடிகளிலே
எப்பேர்ப்பட்ட அடிமைகளையும் செய்ய வேணும் என்று உத்சாஹித்த –

மிக்க நலம் சேர் மாறன் –
அனுரக்தஸ்ஸ பக்தஸ்ஸ-என்று
ஆராவன்பு இளையவனைப் போலே
ஆரா அன்பில் அடியேன் -என்னும்படி
நிரவதிக பக்தி உக்தரான ஆழ்வார் –

பூங்கழலை நெஞ்சே புகழ் –
அவர்
பூவார் கழல்களிலே அடிமை செய்தாப் போலே
மனசே
நீயும்
அபிராமமாய் புஷ்பம் போலே ம்ருதுளமாய் இருக்கிற
அவர் சரணங்களை ஸ்துத்திப் போரு-
மனசே நினை என்னாமல் ஸ்துதி – முடியானே காரணங்கள் போலே
அவர் விஷயத்திலே வாசகமான அடிமையைச் செய்யப் பார்
உத்தர வாக்யத்தில் பிரதிபாதிக்கிற
கைங்கர்யம் தான் ததீய பர்யந்தமாய் யாயிற்று இருப்பது-

இத்தால் –
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிற முதல் பாட்டின் அர்த்தத்தை
அருளிச் செய்த படி
மேல்
சிந்து பூ மகிழும் -என்று காயிக கைங்கர்யத்தையும்
தெண்ணிறைச் சுனை நீர் திருவேங்கடம் -என்று மானசமான அடிமையையும்
ஈசன் வானவர்க்கு என்று -வாசிகமான அடிமையையும் என்று சொல்லி
வேங்கடத்து உறைவார்க்கு நம -ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தி சொல்லி
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் -என்று
அத்தக் கைங்கர்யத்தை திருமலை ஆழ்வாரே தந்து அருளுவார் -என்றும்
திரு வேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே -என்று
அந்த கைங்கர்ய விரோதி நிவ்ருதியையும் திருமலை ஆழ்வாரே பண்ணி அருளுவர் என்றும்
இப்படி முதல் பாட்டின் அர்த்தத்தை விவரித்து அருளின இவைகளும்
இவர்க்கு விவஷிதம் –

—————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: