திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -22-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

—————————————————————————–
அவதாரிகை —

இதில்
சௌந்தர்யாதிகள் முகந்து கொண்டு அனுபவிக்க ஒண்ணாமைக்கு
ஹேது -கரண சங்கோசம் -என்று கலங்க –
அந்த கலக்கத்தை அவன் தீர்த்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
கீழ்
அழகர் உடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப் புக்க இடத்தில்
விளாக் கொலை கொண்டு அனுபவிக்க ஒண்ணாது ஒழிய
அதுக்கு அடி விஷய பௌஷ்கல்யம்-என்று அறிய மாட்டாமல் கரண சங்கோசம் -என்று அனுசந்தித்து
இஸ் சங்கோசம் அற்று தன்னை அனுபவித்து
வாழுகைக்கு உடலாக
அவன் பண்ணின சிருஷ்டி அவதாராதிகள் தப்பி
அனர்த்தப் பட்ட நான்
இனி கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ
என்று சோக பரவசராய்க் கூப்பிட்ட முந்நீர் ஞாலத்தின் அர்த்தத்தை
முன்னம் அழகர் எழில் -என்று துடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————————————–

வியாக்யானம்–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் -குருகையர் கோன்
முந்துற முன்னம்
ஸ்வரூப குணாதிகளில் அகப்படாதே
அழகர் உடைய அழகிலே யாயிற்று அகப்பட்டது –

மூழ்குகை யாவது –
சௌந்தர்ய சாகரத்தில் ஆழம் கால் பட்டு அழுந்துகை –

இப்படி சௌந்தர்ய சாகரத்திலே மகனாரான ஆழ்வார் –

இன்ன வளவென்ன –
இவ்வளவு என்று
பரிச்சேதிக்க-

எனக்கு அரிதாய்த் -தென்ன –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
எனக்கு அரிதாயிற்று
என்று அருளிச் செய்ய
திரு மாலே கட்டுரையே -என்று
அவளோட்டைச் சேர்த்தியாலே
எல்லையில் ஞானத்தனாய்
ஸ்வதஸ் சர்வஞ்ஞனைக் கேட்கையாலே
தமக்குப் பரிச்சேதிக்க அரிது என்னும் இடம் தோற்றுகிறது-

கரணக் குறையின் கலக்கத்தை —
அவன் அனுபவ பரிகரமாகக் கொடுத்த
கரண சங்கோ சத்தால் வந்த காலுஷ்யத்தை –
அஜஞதையை-
அதாவது –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் –என்றும்
வினைகளை வேர் அறப்பாய்ந்து எந்நாள் நான் உன்னை இனி வந்து கூடுவன் -என்றும்
பன்மாயப் பல் பிறவியில் படுகின்ற யான் தொல் மா வல் வினைத் தொடர்களை
முதலரிந்து நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ-என்றும்
பொல்லா வாக்கையின் புனர் வினை அறுக்கல் ஆறு சொல்லாய்-என்றும்
உன்னை சார்வதோர் சூழ்ச்சியே -என்று
இத்யாதிகளில் அருளிச் செய்தவை –
லங்கா முன் மூலிதாம் க்ருத்வா கதாத்ரஷ்ய தி மாம்பதி -இறே
இப்படி கரண சங்கோசம் அடியாக வந்த கண் கலக்கத்தை

கண்ணன் ஒருமைப் படுத்தான் ஒழித்து –
மாசுசா -என்று ஆஸ்ரிதர் உடைய சோக நிவர்தகனான கிருஷ்ணன்
அந்த கரண சங்கோச நிபந்தனமாக வந்த துக்கத்தைப் போக்கிக் கொடுத்து
அக் கரணங்களைக் கொண்டு அனுபவிக்கும்படி
திரு உள்ளத்தை ஒரு தலைக்கும் படி பண்ணினான் –
கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப் பெற்று
என் நெஞ்சம் பெற்றது நீடுயிர் -என்றத்தை நினைத்து அருளிச் செய்தபடி –
கரண சங்கோசம் அடைய திர்யக்குகளும் பரிசர்யை பண்ணும்படி யான
பெரிய திருமலையில் நிலையைக் காட்டி சமாதானம் பண்ணினான் ஆயிற்று-

——————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: