திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -19-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —————19-

—————————————————————————————–
அவதாரிகை –

இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று
ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்
சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம்
எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும்
என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை –
எம்மா வீடும் வேண்டா –என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————————

வியாக்யானம்–

எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையேஅம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் வி லஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு
யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர
நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –

வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது -எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –

நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டித் தான் இருப்பது –
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது
அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –

நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஆழ்வார்
ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி -தனியேன் வாழ் முதலே -என்கிற ஈச்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஆழ்வாராய் இருக்கும் –

மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே
செவ்விப் பூ சூடுவாரைப்போலே
பூ போன்ற அடி இணையைச் சூடி –
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று
ஆழ்வார் சேவையாலே
சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –

—————————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: