திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -12-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் ——————12-

———————————————————————

அவதாரிகை –

ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே
அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்
இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்தை
இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை –
திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————

வியாக்யானம்-

திண்ணிதா மாறன் –
கீழே
மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் –
என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை
அருளிச் செய்த ஆழ்வார் -என்னுதல் –

திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை
நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –

நண்ணி யவதாரத்தே நன்குரைத்த –
திருமால் பரத்வத்தை
அவதாரத்தே நண்ணி
நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே
இதிஹாச புராண பிரக்ரியையாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே
பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம்படி நன்றாக அருளிச் செய்த
-அன்றிக்கே –
திருமால் பரத்வத்தை தாம் நண்ணி
அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-

நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகையாவது –
இப்படி அவதாரே பரத்வத்தை
ஸூஸ்பஷ்டமாம் படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து
அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி -புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர்
என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இ றே அருளிச் செய்தது –
ராமா கமலா பத்ராஷஸ் சர்வ சத்வ மநோஹரா-என்றும்
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி
பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து
பரத்வ ஸ்தாபகரான ஆழ்வார் இடத்திலே –

அற்றார்கள்யாவர் –
அற்றுத் தீர்ந்து
அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –

அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்
அவ்விடத்திலே அப்படியே
அவர்கள் விஷயத்தில் அந்தரங்கராய் கிட்டினவர்களை
மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-

———————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: