திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -11-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வாயும் திரு மால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து ————11-

வாயும் -திரு மால் –
அடியார் அனுபவிக்கலாம்படி
அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய
ஸ்ரீ யபதி யானவன் –

ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்
தம்முடைய துக்கத்தை ஆராய
அறியாத வற்றை

செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை
த்ருடமாக
கடாஷித்து அருளுவார்-

—————————————————————

அவதாரிகை –

இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி
துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் -என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால்
ஷட் குண சாம்யத்தாலே
தாமான தன்மை குலைந்து
பிராட்டியான தன்மையைப் பஜித்து
தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய்
அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான
அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே
பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டு செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை
வாயும் திருமாலால் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் –

————————————————————————

வியாக்யானம்–

வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி
கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற
ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விச்லேஷித்து
அத்ருச்யனாய் நிற்க –
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே
நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன்
விச்லேஷிக்கையாலே –

ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி
விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூ ர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி
எம்மே போலே நீயும் -என்று
பல காலும் சொல்லும்படி மிக்க பிரலாபமாய் –

ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே
தம்முடைய துக்கத்தை
ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று
சம துக்கிகளாக அழுத ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஆழ்வார் –

செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்
அந்தரங்கமாக
ஆஸ்ரயிக்கும் அவர்களை
த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல்
பகவத் சம்ச்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி
கடாஷித்து அருளுவர் –

————————————————————————————

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: