திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -6–பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

——————————————————————————————–

அவதாரிகை –

இதில் ஆஸ்ரயணத்தில் அருமை இல்லாமையை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
சீலவானே யாகிலும்
ஸ்ரீ யபதியான பூர்ணனானவன் பெருமைக்கு ஈடாக
ஷூத்ரனாய்
ஷூத்ர உபகரணான இவனால்
பச்சை இட்டு ஆஸ்ரயிக்கப் போகுமோ –
ஸ்ரீ யபதித்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் அங்கீ கரிக்கும் நீர்மைக்கு உடலாகையாலும்
பரிபூர்ணத்வம் -இத்தலையில் குற்றம் பாராமல் பெற்றது கொண்டு சந்தோஷிக்கைக்கு உடலாகையாலும்
ஆஸ்ரியிப்பார்க்கு பத்ர புஷ்பாதிகளால் ஸ்வ ஆராதன் என்கிற
பரிவதில் ஈசனனில் அர்த்தத்தை -பரிவதில் ஈசன் படியை -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் –

——————————————————————————————

வியாக்யானம்–

பரிவதில் ஈசன் படியைப் –
ஹேய பிரத்ய நீக கல்யாணை
கதானான சர்வேஸ்வரன் யுடைய
ஸ்வ ஆராதன ஸ்வ பாவத்தை –

பண்புடனே பேசி –
பரிபூர்ணன் ஆகையாலே இட்டது கொண்டு த்ருப்தனாம்
ஸ்வ பாவத்துடனே அருளிச் செய்து –
பரிவதில் ஈசனை -என்று துடங்கி -புரிவதும் புகை பூவே –
என்றத்தை பின் சென்ற படி –
அன்றிக்கே
பண்புடனே பேசி இன்று -அவனுடைய ஸ்வ ஆராததையைச் சொல்லி அல்லது
நிற்க மாட்டாத தன் ஸ்வ பாவத்தாலே சொல்லி -என்றாகவுமாம்-

அரியனலன் ஆராதனைக்கு என்று –
இப்படி பத்ர புஷ்பாதிகளாலே –
ஸ்வ ஆராதனாகையாலே ஆஸ்ரயிக்கும் இடத்தில்
சபர்யா பூஜிதஸ் சமயக் -என்னும்படி
ஸபர்யைக்கு அருமை இல்லாதவன் என்றபடி –

உரிமையுடன் ஓதி யருள் மாறன் –
அந்தரங்கமான
சிநேகத்தோடு அருளிச் செய்த ஆழ்வார்
அதாவது –
எது ஏது என் பணி என்னாது அதுவே யாட் செய்யுமீடே -என்றும்
உள் கலந்தோர்க்கு ஓர் அமுதே -என்றும்
அமுதிலும் ஆற்ற இனியன் -என்றும்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே-என்றும்
அவனைத் தொழுதால் -என்றும்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -என்றும்
ஆஸ்ரயணாதி பல பர்யந்தமாக அருளிச் செய்தவை -என்கை –

ஒழிவித்தான் இவ்வுலகில் பேதையர்கள் தங்கள் பிறப்பு –
இப்படி உபதேசிக்கையாலே
இந்த லோகத்தில் அறிவிலிகள் ஆனவர்கள்
பிறவியை அகற்றுவித்தார் –
இஜ் ஜகத்தில் அஞ்ஞர் உடைய ஜன்ம சம்பந்தத்தை
ஸுவ ஸூக்தியாலே நிவர்த்திப்பித்தார் –
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே – என்றத்தை பின் சென்ற படி –

———————————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: