திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -9-பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும் —————9-

ஆற்ற -சாத்மிக்க சாத்மிக்க

——————————————————-
அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய
சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்
தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான
நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்
அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும்
இவன் ஒருவனுடனே
சர்வ இந்த்ரியங்களாலும்
சர்வ காத்ரங்களாலும்
பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற
இவையும் அவை யில் அர்த்தத்தை
இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————————–

வியாக்யானம்–

இவை யறிந்தோர் தம்மளவில் –
இந்த ஆர்ஜவ குணத்தை அறிந்தவர்கள் விஷயத்தில்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று –
சர்வேஸ்வரன்
ஹ்ருஷ்டனாய்
சாத்மிக்க சாத்மிக்க
சர்வ அவயவங்களிலும்
சம்ச்லேஷிக்கும் ரசம் தன்னை பெற்று
பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்
செறிப்பு தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அதாவது
சரா மோவா நரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-என்னும்படி
என்னுடைச் சூழல் உளானே
அருகல் இலானே
ஒழிவிலன் என்னோடு உடனே –
கண்ணன் என் ஒக்கலையானே-
மாயன் என் நெஞ்சின் உளானே
என்னுடைத் தோள் இணையானே
என்னுடை நாவின் உளானே
கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே
என் நெற்றி உளானே
என் உச்சி உளானே –
என்று தலைக்கு மேலே ஏறின படியை அடி ஒற்றின படி –

அணையும் சுவை யாவது –
அருகலில் அறுசுவை-
பிராட்டி திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘
ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச –
இப்படிப் பெறாப் பேறு பெற்று
அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை
கேவலம் வாக்காலே வசிக்க

மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் யுடைய
ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –
பொரு -என்று ஒப்பாய்
அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

——————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: