திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் -5–பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கூடுருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து—————-5-

ஊடுருவ  ஓர்ந்து -தீர்க்கமாக ஆராய்ந்து

————————————————————————————-
-அவதாரிகை –

இதில் சர்வ சமாஸ்ரயணத்துக்கு உறுப்பாக
சௌசீல்யத்தை பேசுகிற பாசுரத்தை
அனுவதித்து -அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
அஞ்சிறைய மட நாரையில் தூத பரேஷண வ்யாஜத்தாலே
தம் ஆற்றாமையை அவனுக்கு அறிவித்த
அநந்தரம்
அவன் வந்து சம்ச்லேஷித்து அருளக் கண்டு
அவன் பெருமையையும் தம் சிறுமையையும் நினைத்து
ஸூ ரி போக்யனானவனை அயோக்யனான நான் கிட்டி
தூஷிப்பதில் அகன்று போகை நன்று என்று தாம் அகலப் புக
ஆழ்வீர்-
உம்முடைய பொல்லாமையைப் பாராதே
நம்முடைய செல்லாமையைப் பாரீர் -என்று
ஆக்ரம்யா லோகன் -என்று
த்ரிவிக்ரம அபதான சித்தமான தன் சௌசீல்யத்தையும்
நவநீத சௌர்ய வ்ருத்தாந்த சித்தமான தன் செல்லாமையையும் காட்டி
தம்மை அவன் சேர்த்துக் கொள்ள
அத்தாலே தாம் அகலுகை தவிர்ந்து பொருந்தின படியை அருளிச் செய்கிற
வள வேழு உலகின் அர்த்தத்தை
வளம் மிக்க -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————————————————————–

வியாக்யானம்–

வளம் மிக்க மால் பெருமை -மன்னுயிரின் தண்மை –
அதாவது –
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரி நிர்வாகத்தால் வந்த
சர்வேஸ்வரன் உடைய பெருமையையும்
அசித் சம்ஸ்ருஷ்டம் ஆகையாலே ஹேய சம்சர்கார்ஹ்யமாய்
அணு பரிணாமமாய் இருக்கிற ஆத்மாவின் உடைய தண்மையையும்-என்கை
வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை
கள வேழ் வெண்ணெய் தொடு யுண்ட கள்வா என்பன்
அருவினையேன் -என்று அருளிச் செய்த படியை அடி ஒற்றின படி –

உளமுற்று –
எம்பெருமான் யுடையவும்
தம்முடையவும்
உத்கர்ஷ அபகர்ஷங்கள்
திரு உள்ளத்திலே பட்டு

அங்கூடுருவ ஓர்ந்து –
இப்படி திரு உள்ளத்தில் உற்ற தசையில்
நிரூபிக்கும் இடத்து முடிய விசாரித்து
அருவினையேன் -என்று துடங்கி
அடியேன் சிறிய ஞானத்தன் -என்னும் அளவும் ஆராய்ந்து
இப்படி தீர்க்க தர்சியாய் தர்சித்து –

தளர்வுற்று –
மிகவும் அவசன்னராய்
ந கல்வத்யைவ
யதி ப்ரீத்தி -இத்யாதிப் படியே
நீங்க நினை மாறனை –
அகன்று அத்தலைக்கு அதிசயத்தை
பண்ண எண்ணுகிற ஆழ்வாரை

நீங்குகை
ஸ்வ விநாசம் ஆனாலும்
ஸ்வாமிக்கு அதிசயம் -ஆவஹராய் விச்லேஷிக்க ஸ்மரிக்கிறவரை

மால் –
தன் செல்லாமையைக் காட்டி
ஆஸ்ரித வ்யாமுக்தனான சர்வேஸ்வரன் –
நெடுமாலே –
மாலே மாயப் பெருமானே -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி –
ஏவம் வித வ்யாமுக்தன் ஆனவன் –

நீடு இலகு சீலத்தால் –
நெடுகிப் போரும்தான
நித்ய விசதாக சீல குணத்தாலே
அதாவது திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்றும் –
உண்டாய் உலகு ஏழும் முன்னமே –என்று துடங்கி -நெய்யூண் மருந்தோ மாயோனே -என்றும்
இப்படி சௌசீல்யாதிகளாலே வசீகரித்த படி -என்கை-

பரிந்து பாங்குடனே சேர்த்தான் –
பரிந்து பாங்குடனே சேர்க்கையாவது-
இவனை ச்நிக்தநோபாதியாக ச்நேஹித்து மங்க விடாமல்
அலாப்ய லாபமாக ஹர்ஷதுடனே
சங்கதாராக பண்ணினான்
திருவாய் பாடியிலே வெண்ணெயோபாதி
இவரையும் சேர விரும்பினான் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து யுண்டான் பொய் கலவாது என் மெய் கலந்தானே -என்னக் கடவது இ றே-

————————————————————————————————————-

பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: