தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை -61-76–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -61-

அவதாரிகை –

கீழே ஆத்ம ஸ்வரூப வைலஷ்ண்யத்தை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அதில்
அசித் விலஷணதவம்
அஜடத்வம்
ஆனந்த ரூபத்வம்
அவயவகத்வம்
அசிந்த்யத்வம்
நிர்வவயத்வம்
நிர் விகாரத்வம்
ஞான ஆஸ்ரயத்வம்-
ஆகிற இவை ஜீவ ஈஸ்வர சாராணத்வம்-
நியாமயத்வாதிகள் மூன்றும் சித் அசித் சாதாரணம் –
நித்யத்வம் தத்வ த்ரய சாதாரணம் –
அணுத்வமும் அசித் பரமாணு ஜீவ சாதாரண்யம் –
இவை இத்தனையும் சேரக் கூடி ஆத்ம ஸ்வரூபத்துக்கு
அசித் ஈஸ்வர வ்யாவ்ருதியை சித்திப்பைக்கையாலே
இவற்றை லஷணம் என்னக் குறை இல்லை – –
அப்படி அன்றிக்கே –
ஸூக்ரஹமமாக
ஒரு லஷணம் அருளிச் செய்கிறார் –

இப்போது
இவர்களுக்கு லஷணம்
சேஷத்வத்தோடே கூடின
ஜ்ஞாத்ருத்வம் –

இவர்கள் -என்கிறது த்ரிவித சேதனரையும்-
லஷணம் எனபது அசாதாராண தர்மம் இறே
ஆகையால்
சேஷத்வம் மாத்ரத்தைச் சொல்லில் அசித் வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
ஜ்ஞாத்ருத்வ மாதரத்தை சொல்லில் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
சேஷத்வே சதி ஜ்ஞாத்ருத்வமே லஷணம் என்கிறார் —

———————————————————————————————-

சூர்ணிகை -62-

இப்படி ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய
ஜ்ஞானதுக்கும்
ஸ்வரூபதுக்கும்
யுண்டான
சாதர்ம்ய வைதர்ம்யங்களை அருளிச் செய்கிறார் மேல் –

இவர்கள் யுடைய
ஜ்ஞானம் தான்
ஸ்வரூபம் போலே
நித்ய
வ்யமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய்
இருக்கும் –

இத்தால்
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்வ
ஆனந்தரூபத்வங்கள்
ஸ்வரூபத்தோபாதி ஜ்ஞானத்துக்கும் யுண்டு என்றபடி

————————————————————————————————

சூர்ணிகை -63-

அவதாரிகை-

நித்யத்வாதிகளை உபபாதித்து வைதர்ம்யத்தை சொல்லும் அளவில்
அநேக கிரந்த வயவஹிதமாம் என்று நினைத்து
சாதர்ம்யம் சொன்ன அனந்தரம்
வைதர்ம்யத்தையும் சொல்லுவதாக
தஜ் ஜிஜ்ஞாஸூ பிர்சனத்தை உதஷேபிக்கிறார் –

ஆனால்
ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
வாசி என்
என்னில்-

———————————————————————————————

சூர்ணிகை -64-

வைதர்ம்யம் தன்னை அருளிச் செய்கிறார் –

ஸ்வரூபம் தர்மியாய்
சங்கோச விகாசங்களுக்கு
அயோக்யமாய்
தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய்
அணுவாய்
இருக்கும்
ஜ்ஞானம் தர்மியாய்
சங்கோச விகாசங்களுக்கு
யோக்யமாய் ‘
தன்னை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே
ஆத்மாவுக்கு பிரகாசிக்கக் கடவதாய்-விபுவாய்
இருக்கும்

அதாவது
தர்மித்வம்
சங்கோச விகாச அயோக்யத்வம்
ஸ்வ வ்யதிரிக்தார்த்த அபிரகாசத்வம்
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வம்
அணுத்வம்
இவை ஸ்வரூபத்துக்கு விசேஷம்

தர்மத்வம்
சங்கோச விகாச யோக்யத்வம்
ஸ்வ வ்யதிரிக்தார்த்த பிரகாசத்வம்
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாச ரஹித்தத்வம்
ச்வாஸ்ரைய ஸ்வயம் பிரகாசத்வம்
விபுத்வம்
இவை ஜ்ஞானதுக்கு விசேஷம் என்றபடி –

விபுவாய் இருக்கும் என்று ஜ்ஞானத்தின் உடைய ஸ்வாபாவிக வேஷத்தை அருளிச் செய்தார் இத்தனை இ றே –

———————————————————————————-

சூர்ணிகை –65-

அவதாரிகை –
சகல சேதனருடைய ஜ்ஞானமும் இப்படி இராது ஒழிவான் என்
என்கிற சங்கையிலே
சங்கோச அசங்கோச நிபந்தனமான தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் –

அதில் சிலருடைய ஜ்ஞானம்
எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும்
அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம்
ஒருக்கால் விபுவாய்
ஒருக்கால் அவிபுவாய்
இருக்கும் –

அதாவது
அயர்வறும் அமரர்கள் -என்கிறபடியே பகவத் ஜ்ஞானதுக்கு ஒரு நாளும்
சங்கோசம் இன்றிக்கே
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சதா அனுபவம் பண்ணுகிற
நித்ய சூரிகளினுடைய ஜ்ஞானம் எப்போதும் விபுவாய் இருக்கும்
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பாய் இருக்கிற
பத்தர்கள் யுடைய ஜ்ஞானம் கர்ம அனுகுணமாக
சங்கோச விகாசங்களோடு கூடிக் கொண்டு எப்போதும் அவிபுவாய் இருக்கும் –
கரைகண்டோர் -என்கிறபடியே பகவத் பிரசாதத்தாலே சம்சார சாகரத்தைக் கடந்து
அக்கரைப்பட்ட முக்தருடைய ஜ்ஞானம்
பூர்வ அவஸ்தையிலே அவிபுவாய்
உத்தர அவஸ்தையிலே-சர்வம் ஹ பசய பச்யதி -என்கிறபடியே
விபுவாய் இருக்கும் என்கை —

—————————————————————————————-

சூர்ணிகை -66

இனிமேல் ஜ்ஞானதுக்கு சொன்ன நித்யத்வாதிகளை
உபபாதிக்கிறார் –
அதில் பிரதமத்திலே
எனக்கு இப்போது ஜ்ஞானம் பிறந்தது
எனக்கு இப்போது ஜ்ஞானம் நசித்தது
என்று உத்பத்தி வினாசவத்தாகச் சொல்லப் படுகிற
ஜ்ஞானத்துக்குன் நித்யத்வம் கூடும்படி எங்கனே என்கிற
சங்கையை பரிஹரிக்கைக்காக தஜ்ஜிஞர ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –

ஜ்ஞானம் நித்யமாகில்
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது
நசித்தது
என்கிறபடி என்
என்னில்-

——————————————————————————————-

சூர்ணிகை -67-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

இந்த்ரியத் த்வாரா
பிரசரித்து
மீளுவது ஆகையாலே
அப்படிச் சொல்லக்
குறை இல்லை –

அதாவது
சர்வம் ஹ பசய பச்யதி -என்றும்
ச ஸ ஆனந்தாய கல்ப்பதே -என்றும்
முக்த தசையில் சர்வ விஷயமாகச் சொல்லுகையாலே
சர்வத்தையும் சாஷாத் கரிக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தேயும்
யா ஷேத்திர ஜ்ஞ் சக்தி சச வேஷ்டிதா ந்ரூப சாவகா -என்கிறபடியே கர்மத்தாலே சங்குசிதமாய்
தயா திரோஹித தத வாசாச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா
சர்வ பூதேஷு பூபால தார தமயேன வர்த்ததே அபராணி மத்ஸூ ஸ்வல்ப ச ஸ்தாவரேஷூ ததோதிகா -என்கிறபடியே
கர்ம அனுகுணமாக தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு
இந்த்ரியாணாம் ஹி சர்வேஷாம் யத்யேகம ஷரத் இந்த்ரியம் தேநாசய ஷரதி பிரஜ்ஞ்ஞா த்ருதே பாதாதி வோதகம -என்கிறபடியே
இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிப்பது மீளுவது ஆகையாலே
தாத்ருசமான விகாசத்தாலும் சங்கோச த்தாலும் வந்த
பிரகாச அப்ரகாசங்களைக் கொண்டு
பிறந்தது நசித்தது என்னக் குறை இல்லை -என்கை –

—————————————————————————————-

சூர்ணிகை -68

அவதாரிகை –

இப்படி இந்த்ரிய த்வாரா பிரசரிக்கிற ஜ்ஞானம் ஏகமாய் இருக்கச் செய்தே
விஷய க்ரஹண வேளையிலே பிரகாசிக்கும் போது
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதத்தை யுடைத்தாய்க் கொண்டு
அநேகத்வேன பிரகாசிக்கிற படி எங்கனே -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இது தான்
ஏகமாய் இருக்கச் செய்தே
நாநாவாய்த் தோற்றுகிறது
ப்ரசரண பேதத்தாலே –

அதாவது
ஏகமுகமாக பரசரிக்கை அன்றிக்கே
சஷூஸ் ச்ரோத்ரா தய அநேக இந்த்ரிய த்வார பிரசரித்து
ரூப சப்த தயா அநேக விஷயங்களை கிரஹிக்கிற விதுக்கு
தர்சன சரவணாதி சமஜ்ஞ்ஞா பேதேன தோற்றுகிற நாநாத்வம் பிரசரன பேத நிபந்தனம் என்கை –

இத்தால்–நித்தியமான ஜ்ஞானத்துக்கு உத்பத்தி விநாச வ்யவஹார ஹேது
இன்னது என்று சொன்ன அனந்தரத்திலே
ப்ராசாங்கிகமாக அதனுடைய நாநாதவேன பரசரன ஹேதுவும் சொல்லப் பட்டது ஆயிற்று –

ஆத்மாவினுடைய தர்ம பூத ஜ்ஞான நித்யத்வம்
ந ஹி விஜ்ஞ்ஞாது விஜ்ஞ்ஞாதோ விபரிலோபோ விதயதே
ந ஹி த்ருஷ்டோ விபரிலோபோ விதயதே -என்றும்
ஜ்ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் தாமசச மனுஜேச்வர
ஆத்மனோ ப்ரஹ்ம பூதச்ய நித்யமேதத சதுஷ்டயம் யதோதபான கரணாத கரியதே ந ஜலாம்பரமம் சதேவ நீயதே
வயகதி மசதச சம்பவ குத ததா ஹேய குணதவ மசா தவபோதா தையோ குணா
பிரகாசயனதே ந ஜனயந்தே நித்யா ஏவாத மநோ ஹி தே-
என்று சுருதி ஸ்ம்ருதி யாதிகளில் சொல்லப் பட்டது இ றே – –

———————————————————————————————-

சூர்ணிகை -69-

இப்படி இருந்துள்ள ஞான நித்யத்வத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
இனி இதனுடைய த்ரவ்யத்தை உபபாதிப்பதாக தஜ் ஜிஜ்ஞா ஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

த்ரவ்யமான
படி என்
என்னில் –

———————————————————————————————————————————————–

சூர்ணிகை -70-

தத் ஹேதுக்களை அருளிச் செய்து த்ரவ்யத்தை
சாதிக்கிறார் –

க்ரியா குணங்களுக்கு
ஆச்ரயமாய்
அஜடமாய்
இருக்கையாலே
த்ரவ்யமாகக்
கடவது –

அதாவது
கிரியை ஆவது -சங்கோச விகாசங்கள்
குணமாவது -சம்யோக வியோகங்கள்
அஜடத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்
க்ரியாஸ்ர்யம் த்ரவ்யம் குனாஸ்ரையோ த்ரவ்யம் -என்று த்ரவ்ய லஷணம் சொல்லப் படுகையாலே
கிரியாஸ்ர்யத்வமும் குனாஸ்ரயத்வமும் ஓர் ஒன்றே த்ரவ்யத்வ சாதகம்
இவற்றோடு அஜடத்வத்தையும் சொல்லுகையாலே அதுவும் த்ரவ்யத்வ சாதகம் என்று இவருக்கு கருத்து
எங்கனே என்னில்
ஜட வஸ்துக்களிலே த்ரவ்யாத்ரவ்யங்கள் இரண்டும் உண்டு –
அஜட வஸ்துக்களிலே அத்ர்வ்யமாய் இருப்பது ஓன்று இல்லை இ றே
ஆகையால் ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடதவாத யதஜடம் தத் த்ரவ்யம் யாத ஆதமாதி -என்று
அஜடத்வம் தன்னைக் கொண்டு த்ரவ்யத்வம் சாதிக்கலாம் இ றே

ஆகை இ றே-இது தான் அஜடமுமாய் சங்கோச விகாசங்களுக்கும்
சமயோக வியோகாதிகளுக்கும் ஆச்ரயமுமாய் இருக்கையாலே த்ரவ்யம் என்று
தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

இப்படி த்ரவ்யமாய் இருக்குமாகில் இதுக்கு ஆத்ம குணத்வம் கூடும்படி என் -என்னில்
நித்ய தத் ஆச்ரயத்வத்தாலே கூடும்
ஆச்ரயா தனயதோ வருததே ராசரயயேண சமநவயாத த்ரவ்யத்வம்
ச குணத்வம் ச ஜ்ஞான சயைவோ பபதயதே -என்று இ றே ஆளவந்தார் அருளிச் செய்தது
ஆசரயா தனயதோ வ்ருதித்வம் க்ரியாசரயத்வம் சொன்ன போதே சொல்லிற்று ஆயிற்று

இது தான் ஜ்ஞானதுக்கே அன்று இ றே
தீபாதி தேஜபதார்த்த பிரபைகளுக்கும் ஒக்கும் இ றே
ஆகையால் த்ரவயதய குணத்வங்கள் இரண்டும் ஜ்ஞானதுக்கு உபபன்னம் –

—————————————————————————————————–

சூர்ணிகை -71-

கீழே ஜ்ஞானதுக்கு தாம் அருளிச் செய்த அஜடத்வ
விஷயமான ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை
அனுவதிக்கிறார் –

அஜடம் ஆகில்
ஸூ ஷுப்தி
மூர்ச்சாதிகளில்
தோற்ற வேண்டாவோ
என்னில்

அதாவது
ஞானம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
எப்போதும் பிரகாசிக்க வேண்டாவோ
ஸூ ஷூப்தையா அவஸ்தைகளில் பிரகாசியாது ஒழிவான் என் -என்கை

——————————————————————————————–
சூர்ணிகை -72-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

ப்ர ஸ்மரணம்
இல்லாமையாலே
தோற்றாது –

அதாவது
ஜ்ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் ஏவ பிரகாசிப்பது தான்
விஷய கிரஹண வேளையிலே இ றே
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தமோ குணா தயபிபவத்தாலே
சங்குசிதமாய்
திரோஹிதங்களான மணி பிரகாசாதிகளைப் போலே
ப்ரசரணம் இல்லாமையாலே பிரகாசியாது என்கை –

—————————————————————————————————

சூர்ணிகை –73-

இனிமேல் இதனுடைய ஆனந்த ரூபத்தை
உபபாதிக்கிறார் –

ஆனந்த ரூபம்
ஆகையாவது
ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது
அனுகூலமாய் இருக்கை –

அதாவது
ஞானம் பிரகாசிக்கும் போது ஆவது –
ஸ்வ ஆச்ரயதுக்கு விஷயங்களை தர்சிப்பிக்கும் போது –
அப்போது இ றே இது தான் பிரகாசிப்பது -அவ்வஸ்தையிலே அனுகூலமாய் இருக்கை யாவது
அவ்வோ விஷயங்கள் எல்லாம் அனுகூலமாய்த் தோற்றுகையாலே
அவற்றை விஷயீ கரித்த இந்த ஞானம் ஸ்வ ஆச்ரயத்துக்கு ஸூ க ரூபமாய் இருக்கை –

————————————————————————————————-

சூர்ணிகை -74-

ஆனால் விஷ சசதராதிகளை தர்சிக்கும் போது
அவற்றை விஷயீகரித்த ஞானம் பிரதிகூலமாய் இருப்பான் என் -என்கிற சங்கையை
உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

விஷ சஸ்ராதிகளை
காட்டும் போது
பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி
தேஹாத்மா ப்ரமாதிகள்-

அதாவது
அவற்றைத் தர்சிப்பிக்கும் போது அவற்றை விஷயீ கரித்த ஞானம்
துக்க ரூபமாய் இருக்கைக்கு காரணம்
அவற்றில் பாதகத்வ புத்திக்கு மூலமான
தேஹாத்மா ப்ரமமும்
கர்மமும்
ஈஸ்வராதமகத்வ ஜ்ஞான ராஹித்யவமும்-

————————————————————————————————

சூர்ணிகை -75-

இவை தனக்கு ஸ்வா பாவிக வேஷம் ஏது
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வராத்மகம்
ஆகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
ப்ராதிகூல்யம் வந்தேறி –

அதாவது
ஜகத் சர்வம் சரீரமதே -என்றும்
தானி சர்வாணி ததவபு -என்றும்
ததஸா வம வை ஹரே சத்னு -என்றும்
சகல பதார்த்தங்களும் பகவத் சரீரம் என்று சாஸ்த்ரன்களிலே சொல்லப் படா நின்றது இ றே –
அப்படி பகவதாதமகமாக காணும் போது சகலமும்
அனுகூலமாய்க் கொண்டு தோற்றுகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
இவற்றில் தோற்றுகிற பிராதிகூல்யம்
தேஹாத்மா பிரமாதி மூலம் ஆகையாலே
வந்தேறி -என்கை-

——————————————————————————————–

சூர்ணிகை -76-

அவதாரிகை –
இப்படி ஈச்வராத்மகம் ஆகையாலே சகல பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் என்பான் என்
சந்தன குஸூமாதிகளில் உண்டான ஆனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்றோ
என்கிற சங்கையின் மேலே அருளிச் செய்கிறார் –

மற்றைய அனுகூல்யம்
ஸ்வா பாவிகம் ஆகில்
ஒருவனுக்கு ஒருக்கால் ஓர் இடத்திலே
அனுகூலங்களான சந்தன குசஸூ மாதிகள்
தேசாந்தரே
காலாந்தரே
இவன் தனக்கும்
அத்தேசத்திலே அக்காலத்திலே
வேறே ஒருவனுக்கும்
பிரதிகூலங்களாகக் கூடாது

மற்றைய அனுகூல்யம் -என்கிறது தாம் அருளிச் செய்த
பகவதாத்மகத்தாலே வந்து ஆனுகூல்யத்தை ஒழிய
சந்தன கு ஸூ மாதி பதார்த்தங்களில் தோற்றுகிற ஆனுகூல்யத்தை
அது அவற்றுக்கு ஸ்வா பாவிகம் ஆகில் போக்தவாய் இருப்பவனுக்கு ஒரு காலத்திலே ஒரு தேசத்திலே
அனுகூலங்களாக இருந்தவை
காலாந்த்ரத்திலே ஆதல் தேசாந்தரத்திலே ஆதல்
இவன் தனக்கே பிராதிகூல்யங்கள் ஆவது
இவனுக்கு அனுகூல்யங்களாய் இருக்கிற தேச காலங்கள் தன்னிலே வேறே ஒருவனுக்கு
பிரதிகூலங்கள் ஆவதாகை கூடாது
இப்படி பிரதிகூலங்களாக தோற்றக் காணா நின்றோம் இ றே

ஆகையால் பகவதாத்மகத்வ நிபந்தனமான ஆனுகூல்யமே ஸ்வா பாவிகம்
மற்றவை அனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்று என்கை-

வசதே வேக மேவ து காய ஸூ காயோமஷ மாகாயா ச கோபாய ச யதசதசமாத வஸ்து
வஸ்தவா தமகமகுத ததேவ பரீதயே பூதவா புநா து காயா ஜாயதே ததேவ கோபாய யத பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத்
து காத மகம நாசதிந ச கிஞ்சிச ஸூ கதாமகம் -என்று இவ்வாதம் வியாச பகவானாலே விசதமாகச் சொல்லப் பட்டது இறே
இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில்
விஷசராதிகள் பிரதிகூலங்களாயும்
சந்தன குஸூமாதிகள் அனுகூலங்களாயும் தோற்றுகிறது
தேஹாத்மா பிரமாதிகளாலே ஈச்வரதாமகமாகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ஆகையாலே
அவ்வாகாரத்தாலே காணும் போது
சர்வ விஷய பிரகாசன தசையிலும் ஆனந்த ரூபமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

——————————————————————————————–

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
சித் என்கிறது ஆத்மாவை -என்று முதலிலே சித் சப்த வாச்யமான ஆத்மாவை உத்தேசித்து
அநந்தரம்
தேஹாதி விலஷணமாய் -என்று தொடங்கி
சேஷமாய் இருக்கும் -என்னும் அளவாக
உகத லஷணத்தை பரீஷித்து
அநந்தரம்
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
த்ரி பரிகாரமாய் இருக்கிற படியையும்
ப்க்தாத்மாக்களுக்கு அவித்யாதிகள் யுண்டாகைக்கு ஹேதுவையும்
தந் நிவ்ருத்தி க்ரமத்தையும்
த்ரிவித வர்க்கமும் தனித்தனியே அனந்தமாய் இருக்கும் படியையும் சொல்லி –
அந்த ஜீவா நனதய பிரதி படமான ஏக ஆத்மா வாதத்தை யுக்தி சாஸ்த்ரங்களாலே நிரசித்து
ஆத்மா பேதத்தை சாதித்து
முன்பு விஸ்தரேண சொன்ன படி அன்றிக்கே ஸூக்ரமமாக
த்ரிவித ஆத்மாக்களுக்கும் யுண்டான
லஷணத்தை தர்சிப்பித்து
அநந்தரம்
ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் யுண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்களை சொல்லி
ஜ்ஞான விபுத்வ பிரசங்கத்திலே த்ரிவித சேதனருடைய ஞானத்துக்கும் யுண்டான விசேஷத்தை சொல்லி
முன்பு ஞானத்துக்கு சொன்ன
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்த்வ
ஆனந்த
ரூபவத்தங்களை
அடைவே உபபாதித்து
இப்படி சித் தத்தவத்தின் யுடைய வேஷத்தை அருளிச் செய்து
தலைக் கட்டினார் –

சித் பிரகரணம் முற்றிற்று

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: