Archive for August, 2014

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகம்-

August 26, 2014

ஸ்ரீ திருமலைக்கு நித்ய புஷ்ப கைங்கர்யம் செய்து
ஸ்ரீ அனந்தாண் பிள்ளை என்கிற விருதும் பெற்று
ஸ்ரீ எம்பெருமானார் உடைய விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல்
அருளிச் செய்த ஸ்லோகங்கள் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் ஆகிய
நான்கு திருப்பதிகளிலும் எம்பெருமானார் உடைய வெற்றிக்கு பல்லாண்டு பாடுவான இவை-

—————————————————————————————————————————————–

அநிசம் பஜதாம நன்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம்
விதரன் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமாநுஜ ரங்க தாம்நி நித்யம்–1-

ஹே ராமாநுஜ –
எம்பெருமானாரே
உமது

 அநிசம் பஜதாம நன்ய பாஜாம்-சரணாம் போருஹ மாதரேண
சரணாம் போருஹம் ஆதரேண அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம்
திருவடித் தாமரையை அன்போடு
எப்போதும்
ஆஸ்ரயித்து இருக்கின்ற
அநந்ய கதிகளான அடியார்களுக்கு –
தேவு மற்று அறியேன் -போல்வாருக்கு

பும்ஸாம் இஷ்டாம் விபூதிம் நியதம் விதரன் சந ரங்க தாம்நி நித்யம் ஜய –
எந்த விபூதி இஷ்டமோ
அந்த விபூதியை திண்ணமாக அளித்துக் கொண்டு
பொன் உலகம் ஆளீரோ-என்றாப் போலே
திருஷ்ட அத்ருஷ்டங்களில் எதை வேண்டினாலும்
அதை அளித்துக் கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே
எஞ்ஞான்றும் வாழக் கடவீர் –
தந்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்ஷீ –நயாச திலகம் -தேசிகன் படியே
ஸ்வாமி நியமனம் இருந்தால் ஒழிய எம்பெருமான் முக்தி அளிக்க வல்லன் அல்லனே-

—————————————————————————————————————————————-

புவி நோ விமதான் த்வதீய ஸூக்தி
குலசீ பூய குத்ருஷ்டிபிஸ் சமேதான்
சகலீ குருதே விபச்சி தீட்யா
ஜய ராமாநுஜ சேஷ சைலச்ருங்கே–2-

ஹே ராமா நுஜ –
எம்பெருமானாரே –

விபச்சித் ஈட்யா த்வதீய ஸூக்தி –
வித்வான்கள் போற்றத் தக்க தேவரீரது ஸ்ரீ ஸூக்தி யானது

குலிசீ பூய குத்ருஷ்டிபி சமேதான் ந விமதான் சகலீ குருதே –
வஜ்ராயுதம் போன்று இப் பூமியில் உள்ள
குத்ருஷ்டிகளுட்பட
நமது பிரதி பஷிகள் யாவரையும் பொடி படுத்துகின்றது
பாஹ்யா குத்ருஷ்த்யா இதி த்விதயேபி-ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
இருவகைப் பட்ட விபர்ஷர்களையும் தமது திவ்ய
ஸூக்தி களால் கண்டித்து ஒழித்து அருளா நின்ற ஸ்வாமி

சேஷ சைல ச்ருங்கே ஜய –
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ ஸூக்திகளை அருளிய தேவரீர்
திருவேங்கட மலை யுச்சியில் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக
பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து  அருள வேணும் –

—————————————————————————————————————————————–

ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ பிரமாண தந்த்வம்
க்ருபயா லோகய விசுத்ததயா ஹி புத்த்யா
அக்ருதாஸ் ச்வத ஏவ பாஷ்யரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்திதாம்நி நித்யம்–3-

ஹே ராமானுஜ –
எம்பெருமானாரே –

ஸ்வத ஏவ க்ருபயா –
நிர் ஹேதுக கிருபையினாலே –

விசுத்தயா புத்த்யா ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ -பிரமாண தத்தவம் ஆலோக்ய பாஷ்ய ரத்னம் அக்ருதா –
சுருதி ஸ்ம்ருதி பிரமாண
உண்மையை யாராய்ந்து
மாசற்ற மதியினால்
மிகச் சிறந்த ஸ்ரீ பாஷ்யத்தை
அனுக்ரஹித்து அருளிற்று –

நித்யம் ஹஸ்திதாம்நி ஜய –
இப்படிப் பட்ட தேவரீர் ஸ்ரீ ஹஸ்திகிரியில்
நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
தென் அத்தியூர் கழலிணைக் கீழ்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்கி அருள வேணும்
என்றார் ஆயிற்று-

—————————————————————————————————————————————–

ஜய மாயிம தாந்த காரபாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீக்ருசாநோ
ஜய சம்ச்ரித்த சிந்து சீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ச்ருங்கே –4-

மாயிமத அந்தகார பா நோ –
மாயா வாதிகளின் மாதங்கள் ஆகிற
இருளுக்கு இரவி போன்றவரே

பாஹ்ய பிரமுக அட்வீ க்ருசாநோ –
பாஹ்யர்கள் முதலானவர்கள் ஆகிற
காட்டுக்குத் தீ போன்றவரே –

ஸம்ச்ரித சிந்து சீத பாநோ –
அடியார்கள் ஆகிற கடலுக்கு
சந்தரன் போன்றவரே –
கடல் சந்த்ரனைக் கண்டு பொங்குவது போலே
அடியார்களும் ஸ்வாமியை சேவித்தவாறே
வருத்தம் எல்லாம் தீர்ந்து மகிழ்ந்திடுவார்கள்

ராமானுஜ –
எம்பெருமானாரே –

யாதவாத்ரி ச்ருங்கே ஜய ஜய ஜய ஜய –
தேவரீர் யாதவாத்ரியில்
நித்ய ஸ்ரீ யாக
நீடூழி விளங்க வேணும்-

—————————————————————————————————————————————–

ராமாநுஜ சதுச்ச்லோகீம் யா படேன் நியதஸ் சதா
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதி ராஜ பதாப் ஜயோ-

நித்ய அனுசந்தேயமாக நிருமிக்கப் பட்ட
இந்த ராமாநுஜ சதுச் ச்லோகியையை
நியமத்துடன் நித்ய அனுசந்தானம் பண்ணுவார்க்கு
எம்பெருமானாரது திருவடித் தாமரைகளிலே
பக்தி மிகுதியே
கை கண்ட பலனாம் என்று
பயன் உரைத்துத்
தலைக் கட்டினார் ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தாடி பஞ்சகம்-

August 26, 2014

ஸ்ரீ எம்பெருமானார் உடைய வெற்றிச் செல்வத்தை
பேசுகின்ற ஐந்து ஸ்லோகங்கள்
கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது என்பர் சிலர்-
ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலான ஐவர் அருளிச் செய்தவை என்பார் சிலர் –

————————————————————————————————————————-

பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா நச் சார்வாக சைலாச நி
பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர் ஜை நே பகண்டீரவ
மாயாவாதி புஜங்க பங்க கருடஸ் தரை வித்ய சூடா மணி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி–1-

1-பாஷண்ட த்ருமஷண்ட தாவதஹா ந-
பாஷண்டர்களாகிற வ்ருஷ சமூஹங்களுக்குக் காட்டுத் தீ போன்றவரும் –

2-சார்வாக சைலாச நி –
சார்வாக மதஸ்தர்களாகிற மலைகளுக்கு இடி போன்றவரும் –

3-பௌத்தத் வாந்த நிராச வாசரபதிர்-
பௌத்தர்கள் ஆகிற இருளுக்கு இரவி போன்றவரும் –

4-ஜைநே பகண்டீரவ –
ஜைனர்கள் ஆகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும் –

5-மாயாவாதி புஜங்க பங்க கருடஸ்-
மாயாவாதிகள் ஆகிற சர்ப்பங்களுக்கு கருடன் போன்றவரும்-

6-த்ரை வித்ய சூடா மணி –
பரம வைதிகர்களுக்கு சிரோமணி யானவரும் –

7-ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜோ விஜயதே ராமா நுஜோயம் முநி –
ஸ்ரீ ரெங்க நாதனுடைய சர்வாதிசயங்களையும் சேமித்து அருளினவருமான
இந்த ஸ்ரீ ராமா னுச முனிவர்
சர்வ உத்கர்ஷ சாலியாக
விளங்குகின்றார் –

ஏழு விசேஷணங்கள்-
அறுசமயச் செடியதனை யடி யறுத்தான் வாழியே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
சூனிய வாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே பொற் கற்பகம் யெம்மிராமானுச முநி போந்த பின்னே –

பரம நாஸ்திகர்கள் -பாஷண்டர்கள்
மேலே விசேஷித்து
சார்வாகர் ஜைனர் மாயாவாதிகள்
சார்வாகர் -கண்ணால் கண்டது ஒன்றே பிரமாணம் -என்பர்
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான் -என்றவாறே கனவிருள் அகன்றதே
ஸ்வாமி திருவவதரித்த பின்பு பௌத்த மதம் தொலைந்ததே
வலி மிக்க சீயம் -ஜைன மத யானைகளை மாய்த்து ஒழித்தார்

மாயாவாதி –
பிரபஞ்சம் எல்லாம் மாயா விலசிதம் –
த்ருச்யம் மித்தா திருஷ்டி கர்த்தாச மித்தா தோஷா மித்தா –
கருத்மான் நிழல் பட்டு அரவங்கள் மாய்ந்து போம் போலே –
பரம வைதிகர்கள் குலாவும் பெருமான் ராமானுஜர் -பரமை காந்திகளுக்கு சிரோ பூஷணம்
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் வுவந்திடு நாள்
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யை அனுதினம் அனுபத்ரவமாக சேமித்து அருளி
ஸ்ரீ ரெங்கேச ஜெயத்வஜம் என்று விருது சாற்றப் பெற்றவர் –
ஆக இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த
எம்பெருமானார்
பல்லாண்டு பல்லாண்டாக
வாழ்ந்து அருளா நின்றார் -என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா
ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா
வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா
ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா —-2-

1-பாஷண்ட சண்ட கிரி கண்டந வஜ்ர தண்டா –
பாஷண்டத் திரள்கள் ஆகிற
மலைகளைக் கண்டிப்பதில்
வஜ்ர தண்டம் போன்றவையும் –

2-ப்ரசன்ன பௌத்த மகராலய மந்த தண்டா –
வைதிக மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்கிற
ப்ரசன்ன பௌத்தர்களாகிற-
கடல்களை கலக்குவதற்கு உரிய-மந்தர மலை போன்ற –
மாத் தடிகள் போன்றவையும் –

3-வேதாந்த சார ஸூக தர்சந தீப தண்டா –
வேதாந்த சாரப் பொருள்களை
எளிதாகக் காட்டும் தீப தண்டங்கள் போன்றவையுமான –

4-ராமாநுஜச்ய வில ஸந்தி முநேஸ் த்ரிதண்டா –
எம்பெருமானாரது த்ரி தண்டங்கள்
அழகியவாய் விளங்குகின்றன –

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினார்
எம்பெருமானார் பக்கலிலே சொல்ல வேண்டிய
பெருமையையே
த்ரி தண்டத்தின் மேல் ஏற்றிச் சொல்லுகிறது –
சங்கர பாஸ்கர  யாதவ பாட்ட பிரபாக ராதிகள்
ப்ரசன்ன பௌத்தர்கள் எனப் படுகிறார்கள்
அவர்கள் பிரகாச பௌத்தர்கள்
இவர்கள் ப்ரசன்ன பௌத்தர்கள்
சங்கல்ப சூர்யோதத்தில் -யதி பாஸ்கர யாதவ ப்ரகாசௌ-என்று தொடங்கி-
சொன்ன ஸ்லோகம் இங்கே அனுசந்தேயம்
ஸ்வாமி இவர்களை எல்லாம் பாற்றி அருளினார் –

நாராயணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது-
வேதாந்த தத்வ அர்த்தங்களை எல்லாம்
உள்ளவாறு கண்டு வெளியிட்டு அருளினார்-

பிள்ளை பெருமாள் ஐயங்கார்-ஐங்கோலும் ஒரு கோலும் நீர்க்கோலம் போல் –ஆக்கி
பஞ்ச பாணனுடைய ஆஜ்ஞ்ஞையும்
ஏக தண்டிகளுடைய ஆரவாரத்தையும்
ஒழித்து செங்கோல் செலுத்தி விளங்கா நின்றது
என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

சாரித்ரா உத்தார தண்டம் சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
சத்வித்யா தீப தண்டம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம்
த்ரயந்த ஆலம்ப தண்டம் த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம்
தத்தே ராமா நுஜார்யா ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம் த்ரிதண்டம் –3-

1-சாரித்ரா உத்தார தண்டம் –
நன்னடத்தைகளை உத்தாரம்
செய்ய வல்ல வேத்ர தண்டம் போன்றதும் –
உலகில் உபாத்த்யாயர்கள் சிஷ்யர்களுக்கு
ஞான அனுஷ்டானங்களை சிஷிப்பதற்கு
கையிலே வேத்ர தண்டத்தை வைத்து இருப்பது உண்டே –

2-சதுர நய பத அலங்கரியா கேது தண்டம்
நல்ல நீதி மார்க்கத்தை
அலங்கரிக்க வல்ல த்வஜ தண்டம்
போன்றதும் –
நியாய மார்க்க பிரதிஷ்டாபகர் –
உபய மீமாம்சை நியாயங்கள் எல்லாம் சிறிதும் நிலை குலையாமல் ஸூ ரஷிதம் ஆக்கி அருளினவர்

3-சத்வித்யா தீப தண்டம் –
சத்வித்யா முதலான -ஆஷி வித்யா -வைச்வா நர வித்யா -உபகோசல வித்யா போன்ற
வேதாந்த வித்யைகளை நன்கு காண்பதற்கு உரிய
தீப தண்டம் போன்றதும்
அன்றிக்கே
சத்வித்யா -மிக வுயர்ந்த வித்யையான உபநிஷத்தை சொன்னதாகவுமாம்
மோஷ சாதனமான வித்யை தானே சத்வித்யை -சா வித்யா யா விமுக்தே –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால தண்டம் –
சகலவித கலி கோலாஹலங்களையும்
சம்ஹரிப்பதற்கு உரிய
யம தண்டம் போன்றதும் —
கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கடலள்வாய திசை ஏட்டின் உள்ளும் கலி இருளே மிடை தரு காலத்திலேயே
மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்தவர் நம் ஸ்வாமி

5-த்ரயந்த ஆலம்ப தண்டம் –
தளர்ந்த வேதங்களுக்கு கைப்பிடி கொடுக்க வல்ல
தடி போன்றதும்

6-த்ரிபுவன விஜயச்சத்ர சௌவர்ண தண்டம் –
மூ வுலகங்களையும் வென்று
தாங்குகின்ற
கொற்றக் குடைக்கு ஸ்வர்ண தண்டம் போன்றதும் –
மூ வுலகங்களையும் தன திருவடிக் கீழ் இட்டுக் கொண்டமைக்கு ஈடாக
தாங்கி நிற்கும் கொற்றக் குடைக்கு இட்ட மணிக் காம்பு போன்றது
7-ப்ரதிகதக சிரோ வஜ்ர தண்டம்-
பிரதிவாதிகளின் தலை மேலே விழும்
வஜ்ர தண்டம் போன்றதுமான –

தத்தே ராமா நுஜார்யா -த்ரிதண்டம்
திவ்ய த்ரி தண்டத்தை
ஸ்வாமி தம் திருக் கையிலே ஏந்தி உள்ளார் –
முக்கோல் பிடித்த முநி
ஆக இப்புடைகளில் உல்லேகிக்கும் படி அமைந்த
த்ரிதண்டத்தின் பெருமை கூறிற்று-

—————————————————————————————————————————————–

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்
சத்வித்யா தீப ஸூத்ரம் சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம்
ப்ரஜ்ஞா ஸூத்ரம் புதாநாம் ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம்
ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்–4-

த்ரய்யா மாங்கல்ய ஸூத்ரம் –
1-வேத மாதுக்கு மங்கள ஸூ த்ரம் போன்றதும் –
ஜகத் அநீச்வரம் அன்று அநேகச்வரமும் அன்று ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே ஈஸ்வரன் -என்று நிர்ணயித்து அருளினாரே

2-த்ரியுகபதயுகாரோ ஹணா லம்ப ஸூத்ரம்-
ஷாட் குணிய பரி பூர்ணனான பகவானுடைய அடி இணையைச் சென்று
கிட்டுவதற்கான அவலம்ப ஸூ த்ரம் போன்றதும் –
த்ரியுகன் -எம்பெருமான் திரு நாமம் உண்டு இ றே
ஞான சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ்
அவன் பாதாரவிந்தங்கள் அடைய இவரைப் பற்ற வேணும் இ றே
த்ரியுகபத -அர்ச்சிராதி கதி என்னவுமாம்
த்ரியுக யுக பத என்ற பாட பேதம்
த்ரியுக =6
அத்தை இரட்டித்து 12
முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ-என்றும்
நடை பெற வாங்கி பகல் ஒளி நாள் -என்றும்
அர்ச்சிராதிகள் 12 உண்டு இ றே –

3-சத்வித்யா தீப ஸூத்ரம் –
உபநிஷத் ஆகிற திரு விளக்கு எரிவதற்கான
திரி நூல் போன்றதும் –

4-சகல கலிகதா சம்ஹ்ருதே கால ஸூத்ரம் –
சகல கலி கோலா ஹங்களையும்
மாய்ப்பதற்க்கான கால பாசம்
போன்றதும் –

5-புதாநாம் ப்ரஜ்ஞா ஸூத்ரம் –
பண்டிதர்கள் உடைய மேதையை வளர்க்கும்
மீமாம்ஸா ஸூத்ரம் போன்றதும் –
முப்புரி நூலும் மார்புமான அழகாய் சேவித்தவாறே
அடியார்களுக்கு ப்ரஜ்ஞா விகாசம் உண்டாகும்
பிரஜ்ஞ்ஞா -என்கிற இடத்தில்
ச்ம்ருதிர் வ்யதீத விஷயா மதிராகாமி கோசரா புத்திஸ் தாத்காலிகீ
ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மாதா -ஸ்லோகம் அனுசந்தேயம்

6-ப்ரசமத நமன பதமிநீ நாள ஸூத்ரம் –
யோகிகளின் உள்ளம் ஆகிற தாமரையோடைக்கு நாள ஸூத்ரம் போன்றதும் –
எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் போல்வார் –
திரு உள்ளத்தில் சிந்திக்குமது ஸ்வாமியின் யஜ்ஞ ஸூத்ரம் –என்றது ஆயிற்று

7-ரஷா ஸூத்ரம் முநீநாம் ஜயதி யதிபதேர் வஷஸி ப்ரஹ்ம ஸூத்ரம்
யஞ்ஞா ஸூத்ரமானது ஸ்வாமியின் திரு மார்பிலே திகழா நின்றது
உபவீதிந மூர்த்வ புண்ட்ரவந்தம்-என்றும்
விமலோபவீதம் -என்றும்

ஸ்வாமி ப்ரஹ்ம ஸூத்ரம் அணிந்து கொண்டு இருக்கும் அழகைச்
சிந்தித்த மாத்ரத்திலே வீடு பெறுவார்கள் என்றது ஆயிற்று-

—————————————————————————————————————————————–

பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—5

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்
2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எம்பார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ முதலி ஆண்டான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பராங்குசாஷ்டகம்–

August 26, 2014

ஸ்ரீ கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் அருளியவை முதல் இரண்டு ஸ்லோகங்கள்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் அருளியது மூன்றாவது ஸ்லோகம்
அடுத்த நான்கு ஸ்லோகங்கள் பூர்வருடைய முக்தங்கள்-விடுதி ஸ்லோகங்கள்
இறுதி ஸ்லோஹம் ஸ்ரீ மணவாள மா முனிகளின் பூர்வாச்ரம திருப் பேரரான
ஆச்சார்ய பௌத்ரர் என்றே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜீயர் நாயனார் அருளிச் செய்தது -நக்ஷத்ர மாலிகா ஸ்லோகம் –

நாதனுக்கு நாலாயிரம் அருளினான் வாழியே -823-நாத முனிகள்
மணக்கால் கிராமம்-லால்குடிக்கு அருகில் –
இடைச்சங்க காலம் –5000-ஆழ்வார்கள் -முதல் சங்கம் -1000-/ கடைச்சங்கம் -2000-வருஷங்களுக்கு முன்
இடைப்பட்ட காலம் இருளான காலம் -3600–நாலாயிரம் நடையாடாமல் –
அனுபவம் முக்கியம் உபதேசம் இரண்டாம் பக்ஷம் ஆழ்வார்களுக்கு –
உபதேசம் பிரதானம் -அனுபவம் இரண்டாம் பக்ஷம் ஆச்சார்யர்களுக்கு
யோகாசனம் -யோகம் ஆத்மாவுக்கு ஆசனம் தேகத்துக்கு -பதஞ்சலியும் ஆதி சேஷன் அம்சம்
வகுள மாலை -தாமம் துவளமோ வகுளமோ -நான்கு கேள்விகளில் இதுவும் ஓன்று –

சேமம் குருகையோ செய்ய திருப் பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ
தோளும் இரண்டோ நான்கும் உளதோ பெருமாள் உனக்கு –
தாமம் துளவமோ வகுளமோ

ஸ்ரீ வடிவு அழகிய நம்பி திருக் குறுங்குடி நம்பியே அன்றோ இவர் -இது அன்றோ இச் சங்கைகளுக்கு அடி
மகிழ் மாலை மார்பினன் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -உபகார வஸ்து கௌரவம் -சஜாதீயர் –
சபரி கொடுத்ததை பெருமாள் மறுக்க முடியாமல் ஸ்வீகரித்தது ஆச்சார்யர் நியமனம் படி கொடுத்ததாலே தானே –
உறாமை யோடே உற்றேன் ஆகாமைக்கு இந்த பக்தாம்ருதம் வழங்கி அருள தானே –
நாடு திருந்த -பிரபந்தம் தலைக்கட்ட -நச்சுப் பொய்கை ஆகாமைக்கா -ருசி வளர்க்க -காதலை பெருக்க வேண்டுமே
ஆர்த்தி அதிகார பூர்த்தி-தன் குழந்தையை பட்டினி போட்டு தொண்டர்க்கு அமுது உண்ண அருளப் பண்ணி –
துணைக் கேள்வி இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் -ஸ்ரீ ராமாயணம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் போலே தனிக் கேள்வி இல்லையே
அவனாலே அவனைத் தானே அடைதல் -அருளிச் செயல் சாரம் –

—————————————————————————————–

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத்
சம்பத்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம்
யத் வா சரண்யம் அசரண்ய ஜனஸ்ய புண்யம்
தத் சம்ஸ்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம் –1-

த்ரை வித்ய வ்ருத்த ஜன மூர்த்த விபூஷணம் யத் –
யாதொரு நம் ஆழ்வார் திருவடி இணையானது
பரம வைதிகர்களுடைய-வேதாந்திகள்-மதுர கவி ஆழ்வார்-நாத யமுன யதிவராதிகள்- போல்வார் –
முடிக்கு அலங்காரமாய் இருக்கின்றதோ –
(ஸ்ரீ சடகோபருடைய சடாரி -ஸ்ரீ ராமானுஜன் சாதியுங்கோள் பிரார்த்தனை-ஆழ்வார் திருநகரில் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் என்பதால் மற்ற இடங்களில் ஸ்ரீ மதுரகவி சாதியுங்கோள் பிரார்த்தனை
ஸ்ரீ முதலியாண்டான் சாதிக்க பிரார்த்தனை -ஸ்ரீ ராமானுஜர் சடாரிக்கு எங்கும் –
திருவேங்கடத்தில் மட்டும் ஸ்ரீ அனந்தாழ்வான் சாதிக்க பிரார்த்தனை )

சம்பத்ச சாத்விக ஜனஸ்ய யதேவ நித்யம் யத்
யாதொரு திருவடி இணையே சர்வ காலமும் சாத்விகர்களுக்கு சகல ஐஸ்வர்யமுமாக இருக்கின்றதோ –
உரு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் -செந்தமிழ் ஆரணமே என்று –இத்யாதி

யத் வா சரண்யம் அசரண்ய ஜனச்ய –
யாதொரு திருவடி இணையே புகல் ஒன்றில்லாதவர்களுக்குத் தஞ்சமாய் இருக்கின்றதோ –

புண்யம் தத் சம்ஸ்ரயேம வகுளா பரணாங்க்ரி யுக்மம் –
அப்படிப் பட்ட பரம பாவனமான ஸ்ரீ நம் ஆழ்வாரது திருவடி இணையை ஆஸ்ரயிக்கக் கடவோம்

ஸ்ரீ ஆளவந்தார் -மாதா பிதா யுவதய -ஸ்லோகத்தில் சர்வ ஸ்வ மாகத் துதித்து
அவற்றை ப்ரணமாமி மூர்த்தா -என்று தலையால் வணங்குவதாக அருளிச் செய்த படியே முதல் பாதம்

தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று -என்றதை
நோக்கி இரண்டாவது பாதம் பணித்தது

சர்வ லோக சரண்யனான ஸ்ரீ எம்பெருமானாலும் கை விடப் பட்டவர்களுக்கு
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே தஞ்சம் என்கிறது மூன்றாவது பாதம் –
(நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் கை விட்ட அதுவே காரணமாக -புன்மையாக கருதுவார்கள் ஆதாலால் –
கைப்பிடித்து அருளினார் )

————————————————————————–

பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த
சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம
ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா—2-

பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த சந்துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண –
பக்தியின் கனத்தால் உண்டாகிய
ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட
சிறந்த ப்ரணயம் ஆகிற
தீர்த்த பிரவாஹத்தாலே
நவரச சமூஹத்தாலே
நிறைந்ததாயும் –
காதல் -வேட்கை -அன்பு -அவா /-பர பக்தி பர ஞானம் பரம பக்தி -பிரணயம் -அவஸ்தைகள் –
ஞாதும் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஸ்ரீ கீதை /-ஞானம் தர்சனம் பிராப்தி -நாயனார் –
காதல் கடல் புரைய விளைத்த காரமர் மேனி –பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதோர் காதல் -5-3/4/5-
அவா -சூழ்ந்து -பாழ்-பிரகிருதி -அதனில் பெரிய -பர நல் மலர் ஜோதி -சுடர் ஞான இன்பம் மூன்றையும் விஞ்சி

சிருங்கார -வீர- கருணை -அத்புத ஹாஸ்யம் -பாயா நகம் -ரௌத்ரம் – பீபஸ்த -சாந்தி- பக்தி -நவ ரச சமூஹத்தாலே-
பக்திஸ்த ஞான விசேஷம் -பக்தி ரூபா பன்ன ஞானம் / மதி நலம் -ஞானம் முதிர்ந்த பக்தி அருளி
ப்ரபன்னனுக்கு கர்மம் கைங்கர்யத்தில் புகும் / ஞானம் ஆத்ம ஸ்வரூபத்தில் புகும் / பக்தி பிராப்பிய ருசியில் புகும்
காற்றையும் கழியையும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பக்தி வரம்பு இல்லையே
சிருங்கார ரசம் -பிரணய ரோஷம் -என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ
அத்புத ரசம் – மாயா வாமனனே – -வியந்து -கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன் -பால் என்கோ
பயம் -ஐவர் திசை திசை வலித்து எத்துகின்றனர்

வேதார்த்த ரத்ந நிதி அச்யுத திவ்ய தாம ஜியாத் பராங்குசபயோதி அஸீமபூமா –
வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும்
ஸ்ரீ எம்பெருமானுக்கு திவ்யமான
அளவில்லாத பெருமையை யுடைதாயும் இருக்கிற
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்-
மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் -புகுந்து கல்லும் கனை கடலும் புல்லென்று ஒழியும் படி –
வாய்க்கும் குருகை திரு வீதி எச்சில் உண்ட நாய்க்கு பரம பதம் -இந்த பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ-ஞானத் தமிழ் கடலே –
இந்த பிரார்த்தனை ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் இடம் இல்லை -ஸ்ரீ நம்மாழ்வார் இடம் –
பெருமான் மகுடம் சாய்க்கும் வண்ணம் பாடும் -இன்பம் பயக்க -இத்யாதி-மிதுனத்தில் கேள்வி

பக்தாம்ருதம் -தனியனில்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் -என்று
ஸ்ரீ திருவாய்மொழியைக் கடலாகக் கூறினார் முன்னோர்
நதி நாம் சாகரோ கதி -பல நதிகளும் கடலிலே சேருவது போலேயும்
ரத்னங்கள் நிறைந்த கடல் போலேயும்
பக்தின் கனத்தால் தோன்றிய அற்புதமான அபிப்ராய விசேஷங்கள் கொண்டு
பல பல படியாக பேசும் முகத்தாலே
நவ ரசங்களும் பொதிந்து இருப்பார்

கடல் ரத்னாகாரம்
ஸ்ரீ ஆழ்வார் வேதப் பொருள்கள் ஆகிற ரத்னங்களுக்கு பிறப்பிடம்
கடல் ஸ்ரீ எம்பெருமான் உறைவிடம்
ஸ்ரீ ஆழ்வாரும் -ஒண்  சங்கதை வாழ் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே -என்கிறபடி
தம்முள் ஸ்ரீ எம்பெருமானைத் தாங்கி நிற்பவர் –
கடல் அளவு கடந்த பெருமை யுடையது -அது ஆகார வைபுல்யம்
ஸ்ரீ ஆழ்வார் சிறந்த குணங்களால் பெருமை வாய்ந்தவர்
ஆக இப்படிகளாலே கடல் என்னத் தகுந்த ஸ்ரீ ஆழ்வார் வாழ்க-

————————————————————————————————-

ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்
சஹஸ்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்–3-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -6-ஸ்லோகம்

ருஷிம் ஜூஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவ உதிதம்
யாவவொரு முனிவர் – ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை
சாஷாத் கரித்தாரோ-மந்த்ர த்ரஷ்டா ரிஷி
ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்னலாம் படியான
அந்த ஸ்ரீ சடகோப முனிவரை சேவிக்கிறோம்-
தத் குண சாரத்வாத் தத் குண விபதேசாத் -த்யாஜ்ய தேக வ்யாமோஹம் காட்டி அருளினான்
முனி மனன சீலர் /ரிஷி மந்த்ர த்ரஷ்டா -ரகஸ்ய த்ரயம் கண்டு அறிந்து உபதேசம் /கவி கிராந்தி தர்சி -தூரப் பார்வை

சஹஸ்ர சாகாம் யோத்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்கள் கொண்ட ஸ்ரீ திருவாய்மொழி-
யோத்ராஷீத்-யகா அத்ராஷீத் -சாம வேதம் கண்டு அருளிச் செய்தார் அன்றோ
தஸ்ய உதித நாம- உத் கீதா விவரணம் -ஸ்ரீ திருவாய் மொழி -உயர்வற -பிறந்தார் உயர்ந்தே

வேங்கடத்துக்கு உறைவார்க்கு நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே -திருமந்த்ரார்த்தம்
அகலகில்லேன் -த்வயார்த்தம்
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற –அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்-சரம ஸ்லோகார்த்தமே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செயல்
வெண்ணெய் -ஸ்ரீ ஆழ்வார் -இரண்டு இடங்களிலும் -ஸ்ரீ கிருஷ்ணன் அபி நிவேசம்
குரவை ஆய்ச்சியர் -பதிகம் அனுபவம் -யாவர் எனக்கு நிகர் –
யுவ வர்ண க்ரமம்-அத்ரி–ஸ்ரீ தத்தார்யர் ப்ராஹ்மணர் / -ஸ்ரீ ஜமதக்கினி -ஸ்ரீ பரசுராமன் -ப்ராஹ்மண க்ஷத்ரியர் /
ஸ்ரீ ராமன் -ஷத்ரியன் / ஸ்ரீ கண்ணன் ஷத்ரியன் வைசியர் /கலி-நான்காவது யுகமும் நான்காவது வர்ணமும் வேளாளர் –

——————————————————————————————————

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர
யன் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ரா
தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய—4-

யத் கோ சஹஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம்
சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே
யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய ஆயிரம் பாசுரங்கள்
பும்ஸாம் -சேதனர்களுடைய -சகல சேதனர்களுடையவும்
அகவிருளைத் தொலைக்கின்றனவோ -கோ -ஒளிக் காற்றை / பாசுரம்

நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்ர —
சூர்யன் இடத்தில்  நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவறொரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில்
அவ்விதமாகவே உறைகின்றானோ-
ஒண் சங்கதை — அடியேன் உள்ளான் அந்தாமத்து அன்பு செய்து -1-8-
திருவடி தொழும் உத்சவம் எங்கும் -திரு முடி சேவை திரு குருகூரில் மட்டும் விசேஷம் —
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ ஆழ்வார் உச்சியில் –
ஒக்கலை நெஞ்சு தோள் கண் நெற்றி உச்சில் உளானே –1-9 -கிரமமாக
அத்யயன உத்சவத்தில் -திருவடி தொழும் உத்சவம் எங்கும் -ஆழ்வார் திரு நகரியில் மட்டும் திருமுடி சேர்ந்து சேவை உண்டே –
பொலிந்து நின்ற பிரான் -கைத்தல சேவை -ஆழ்வார் திருமுடிக்கு மேலே -திரு முடி சேவை –

ஆசு இல் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் -தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு — ஸ்ரீ ஞான சாரம்-9-
அப்ராக்ருதமான தேச விசேஷத்தில் காட்டில் இவர்கள் ஹிருதயத்தில் இருப்பு தனக்கு அத்யந்த ரசாவஹமாய்
இருக்கையாலே இதிலே அத்யாதரத்தைப் பண்ணும் என்றதாயிற்று
யோ அநந்ய மனஸஸ் ஸூத்தா யேதா சயைக மநோ ரதா தேஷாம் மே
ஹ்ருதயம் விஷ்ணோர் வைகுண்டாத் பரமம் பதம் –என்று தானே அருளிச் செய்தான் இறே –

யன் மண்டலம் ஸ்ருதி கதம் பிரணமந்தி விப்ரா –
வேத ப்ரதிபாத்யமான சூர்ய மண்டலத்தை -விப்ரா-அந்தணர்கள் வணங்குவது போலே
யாவரொரு ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம்-மண்டலம்-திருக்குருகூர்- சேவிப்பட்ட யுடனே
பரம பாகவதர்கள் கை எடுத்துக் கும்பிடுகிறார்களோ –
தெற்கு திசை வீறு பெற்றதே ஆழ்வார் திருவவதாரத்தாலே
மண்டலம் -ஸ்ரீ நவ திருப்பதி பெருமாள் ஸ்ரீ ஆழ்வாரை சுற்றி –
ஜாமாதா-ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் தானே பத்தாவது க்ரஹம்
இவன் இட்ட வழக்கு தானே –

தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –
அப்படிப்பட்ட
ஸ்ரீ நம் ஆழ்வார் ஆகிற சூர்யனுக்கு வணக்கமாகுக–

ஆதித்ய
ராம திவாகர
அச்யுத பானுக்களுக்குப்
போகாத
யுள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகசியாத போதில் கமலம்
அலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்தி –

சூர்யன்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி
நாராயணஸ் சரசி ஜாசத சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான்
கிரீடி ஹாரி
ஹிரண்யமயவபூர்
த்ருத சங்க சக்ர –
திவ்ய ஆபரண திவ்யாயூத பூஷிதனான நாராயணனை தன் பால் கொண்டவன்

ஸ்ரீ ஆழ்வாரும் –
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேனுள் உள்ளானே –
அப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானைத் தம்மிடத்தே கொண்டவர்-

ஸ்ருதி கதம்-
முச்சந்தியும் சந்த்யா வந்தன பிரகரணத்தில் அந்தணர்கள் வணங்குகின்றார்கள்
சுருதி -காது
ஸ்ரீ திருவழுதி வள நாடு -ஸ்ரீ திருக் குருகூர்
சொல்லக் காதில் விழுந்தவாறே
பாகவதர்கள் அனைவரும் கை கூப்பி வணங்குவார்கள் இறே
ஆக
இவ்வகைகளால் பாஸ்கரன் என்னத் தக்க ஸ்ரீ ஆழ்வாரை வணங்குவோம் -என்றதாயிற்று-

——————————————————————————————–

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம்
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம்—–5-

பத்யுச் ஸ்ரிய பிரசாதேன
ஸ்ரிய பத்யு பிரசாதேன –
திருமால் திருவருளால் –
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் –
பெரும் கேழலார் -ஒருங்கே -எங்கும் பக்க நோக்கம் அறியாமல் அன்றோ ஆழ்வார் மேலே –
பெரும் கண் புண்டரீகம் பிறழ வைத்து அருளினார்
பண்டை நாள் -உன் திருவருளும் பங்கயத்தாள் திரு அருளும் பெற்றவர் அன்றோ

ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் –
சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும்-
அர்ச்சிராதி கதியையும் அன்றோ காட்டி அருளுகிறார்-ஞான பக்தி வைராக்யம் தானே சம்பத்து

ப்ரபன்ன ஜன கூடஸ்தம் –
பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான –
விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர்
பராசர பாராசர்யா போதாய நாதிகள்-
பிரபன்ன ஜன கூடஸ்தர்-மாதா பிதா இத்யாதி –
பராங்குச பரகால யதிவராதிகள் –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி

ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் –
ஸ்ரீ நம் ஆழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் –

————————————————————-

சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம்
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம்–6-

சடகோப முநிம் வந்தே –
ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன்

சடாநாம் புத்தி தூஷகம் –
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் –
தீ மனத்தவர்களுடைய தீ மனத்தை கெடுத்து

அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் –
அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும்
அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து –
தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து உய்யப் புகும் ஆறு உபதேசம்
கரை ஏற்றுமவனுக்கும் நாலு ஆரும் அறிவிப்பார்

திந்த்ரிணீ மூல சம்ஸ்ரயம் –
ஸ்ரீ திருப் புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான –
இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம் ஆழ்வாரை தொழுகிறேன் -என்கை-

————————————————————————————————————

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா–7-

வகுளா  பரணம் வந்தே ஜகதா பரணம் முநிம்
உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – ஸ்ரீ நம் ஆழ்வாரை –

யச் ஸ்ருதேருத்தரம் பாகம் சக்ரே திராவிட பாஷயா –
யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை
தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ
அந்த ஸ்ரீ நம் ஆழ்வாரை வணங்குகின்றேன் –
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் பெய்தற்கு அருளினார் –
ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர –பரம ஸ்வ ராட் –அவனே அவனும் அவனும் அவனும்
சதேவ சோம்ய ஏகமேய அத்விதீயம் – வேர் முதலாய் வித்தாய் -த்ரிவித காரணம் –

——————————————————————————————————–

வகுளா லங்க்ருதம் ஸ்ரீ மத் சடகோப பதத்வயம்
அஸ்மத் குல தனம் போக்யம் அஸ்து மே மூர்த்நி பூஷணம்-8

மகிழ மலர்களினால் அலங்கரிக்கப் பட்டதும்
எமது குலச் செல்வமும்
பரம போக்யமுமான
ஸ்ரீ ஆழ்வார் திருவடி இணையானது
எனது சென்னிக்கு
அலங்காரம் ஆயிடுக-

———————————————————————————-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா
பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா
பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம—–9-

நமத ஜநச்ய சித்த பித்தி பக்தி சித்ர தூலிகா-
தம்மை வணங்குமவர்களுடைய
ஹ்ருதயம் ஆகிற
சுவரிலே
பக்தியாகிற சித்திரத்தை எழுதும்
கருவியாகவும் –
காலை மாலை கமல மலர் இட்டு -இத்யாதி உபதேசித்து

பவாஹி வீர்ய பஞ்ஜநே நரேந்திர மந்திர யந்த்ரணா-
சம்சாரம் ஆகிற சர்ப்பத்தின் உடைய/-பாவ + அஹி-சம்சார பாம்பு –
வீர்யத்தைத் தணிக்கும் விஷயத்தில்
விஷ வைத்தியனுடைய-நரேந்திர -விஷ வைத்தியன்-மந்திர பிரயோகச் சிடிகை போன்றதையும்
நரகத்தை நகு நெஞ்சே -மாறன் சொல் நேராகவே விளையும் வீடு –
வழி நின்ற வல் வினை மாள்வித்து அழிவின்று ஆக்கம் தரும்

பிரபன்ன லோககைரவ பிரசன்ன சாரு சந்த்ரிகா –
பிரபன்ன ஜனங்கள் ஆகிற
ஆம்பல் மலர்களை விகசிப்பிக்க வல்ல-கைரவம் -ஆம்பல்
அழகிய நிலாப் போன்றதையும் இருக்கிற –

சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத் துநோது மே தம –
ஸ்ரீ நம் ஆழ்வாருடைய திருக் கைத் தல முத்ரையானது-உபதேச முத்திரை
என்னுடைய அகவிருளை எப்படியாவது தொலைத்து அருள வேணும் —

ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை வர்ணிக்கும் ஸ்லோகம்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாது
பக்த ஜனங்களின் பக்தியை ஊட்ட வல்லதாயும்
சம்சார ஸ்ப்ருஹதையை அறுக்க வல்லதாயும்
பிரபன்னர்களைப் பரமானந்த பரவசராக்க வல்லதாயும்–இரா நின்ற ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஸ்ரீ ஹஸ்த முத்தரை யானது
நம்முடைய அகவிருளை அகற்ற வேணும் -என்றார் ஆயிற்று –

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சார்யபௌத்ரர் –ஸ்ரீ ஜீயர் நாயனார் -திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பூர்வாச்சார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

 

ஸ்ரீ தேவ ராஜ பஞ்சகம் –ஸ்ரீ தொட்டயாசார்யர் ஸ்வாமி அருளிச் செய்தது –

August 25, 2014

அவதாரிகை –

தக்கானைக் கடிகைத் தடம் குன்றின் மிசை இருந்த
அக்காரக் காபியை அடைந்து உய்ந்து போனேனே –
சோள சிம்ஹ புரத்தில்-
எழுந்து அருளி இருந்த மகா வித்வச் சிகாமணி
காஞ்சி கருட சேவை சென்று சேவிக்க ஷமர் அன்றிக்கே
அதியூரான் புள்ளை ஊரான் -பாசுரம் சிந்தித்து
வாயார ஏத்தி இருக்கையிலே
பேரருளாளன் இவர் பரம பக்திக்கு உகந்து தக்கான் திருக்குளத்திலே சேவை சாதித்து அருளே
அந்தானுபவ பரீவாஹ ரூபமாக திரு அவதரித்தது
இந்த தேவாதி ராஜ பஞ்சகம் –

ஐந்து ஸ்லோகங்களும் பெரிய திருவடி வாகனத்தின் பெருமை ஒன்றே பேசும் –

———————————————————————-

பிரத்யூஷே வரத பிரசன்ன வதன ப்ராப்த ஆபி முக்யான் ஜனான்
ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான் ஆபாலம் ஆனந்தயத்
மந்த உட்டாயித சாமர மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை
அந்தர் கோபுரம் ஆவிராச பகவான் ஆருட பஷீஸ் வர—1-

பிரத்யூஷே –பின் மாலையிலே
பிரசன்ன வதன -தெளிந்ததான திரு முக மண்டலத்தை யுடைய
வரத -பேர் அருளானான தேவப் பெருமாள்
ப்ராப்த ஆபி முக்யான் ஜனான்–தன்னைக் கண்டு களிக்க எதிர் நோக்கி யுள்ளவர்களாயும்
ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் -தங்கள் தலை மேல் உயர்த்திக் கூப்பிய கைகளையும் யுடையவர்களாயும்
அவிரலான் ஜ நாந் –எண்ணற்ற ஸமூஹமாயுள்ள ஜனங்களை
ஆபாலம் ஆனந்தயத்–பாலர்களை முதல் கொண்டு மகிழ்விக்குமவராய்
ஆருட பஷீஸ் வர–பெரிய திருவடி வாஹனம் மேலே ஏறி இருந்தவராய்
மந்த உட்டாயித சாமர -மெதுவே மேல் தூக்கி வீசப்பட்ட சாமரங்களை யுடையவராய்
மணி மய ஸ்வேத ஆத பத்ர -ரத்ன மணி மயமான வெண் கொற்றக் குடை பிடிக்கப் பட்டவராய்
சனை -மெதுவாக -மெல்ல மெல்ல
அந்தர் கோபுரம் ஆவிராச -ராஜ கோபுரத்தூடே தோன்றி அருளினார் –

பிரத்யூஷே வரத பிரசன்னவதன –வரத-பகவான்-
ஸூ ப்ரபாத காலத்தில்
ஸூ பிரசன்னமான திரு முக மண்டலத்தை யுடைய
பேரருளாள் பெருமாள்

ப்ராப்த ஆபி முக்யான் -ஆபத்தாஞ்ஜலி மஸ்தகான் அவிரலான்-ஜனான் –
அபி முகர்களாயும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பினவர்கலாயும்
இடைவெளி இல்லாமல் நெருங்கி இருப்பவர்க்களுமாய் உள்ள
ஜனங்களை –

ஆபாலம் ஆனந்தயத் –
சிறுவர் முதல் கொண்டு சந்தோஷப் படுத்துமவராய்

மந்த உட்டாயி தசாமர –
மெதுவாக வீசப் பட்ட சாமரங்களை யுடையவராய்

மணி மய ஸ்வேத ஆத பத்ர சனை-
ரத்ன மயமான வெண் கொற்றக் குடைய யுடையவராய் –

அந்தர் கோபுரம் ஆவிராச ஆருட பஷீஸ் வர
பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டவராய்
மெல்ல மெல்ல திருக் கோபுரத்தினுள்
தோன்றி அருளினார்-

தேவப் பெருமாள் உடைய பெரிய திருவடி திரு நாளை
பிரதம பரிச்பந்தமே பிடித்து அனுபவிக்கிறார்
அருணோதய வேளையில்
அபிமத ஜன தர்சன ஆனந்த வேகத்தாலே
அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்த ஹாச விலாசத்தோடு
கூடின திரு முக மண்டலம் பொலிந்த தேவப் பெருமாள்
சிரச் அஞ்சலி மாதாய -என்றும்
மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி -என்றும் சொல்லுகிறபடியே
உச்சி மிசைக் கரம் வைத்து தொழும் அவர்களாய்
அஹமஹமிகயா வந்து நெருக்குவார் இடையே
அகப்பட்டுத் துடிப்பவர்களான அடியார்களை
சிறியார் பெரியார் வாசி இன்றிக்கே
ஜநி தர்மாக்களை எல்லாம் உகப்பியா நின்று கொண்டு
காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போல் -என்கிறபடியே
பறைவை ஏறு பரம் புருடனாய்
திரு வெண் கொற்றக் குடை பிடிக்கும் அழகும்
சாமரை வீசும் அழகும்
பொழிய
திருக் கோபுர சேவை தந்து அருளுமாறு எழுந்து அருளின அழகு என்னே
என்று ஈடுபடுகிறார்-

—————————————————

முக்தாத பத்ர யுகளே உபய சாமராந்தர்
வித்யோதமான விநத தனய அதிரூடம்
பக்த அபயப்ரத கராம் புஜம் அம்புஜாஷாம்
நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் —-2-

முக்தாத பத்ர யுகளேவ்–வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட இரு குடைகளோடும்
உபய –இரு மருங்கும் இரண்டு
சாமராந்தர்-வீசப்பட்ட சாமரங்களின் இடையே
வித்யோதமான -பொலிந்து நிற்கும்
விநத தனய அதிரூடம்–விநதையினுடைய திருமகனாரன பெரிய திருவடிக்கு மேல் ஏறி அமர்ந்து இருப்பவரும்
பக்த அபய ப்ரத -தன் அடியார்களுக்கு அஞ்சேல் என்று காட்டி அருளும்
கராம் புஜம் -தாமரையை ஒத்த திருக்கைகளை யுடையவரும்
அம்புஜாஷாம்-தாமரையை ஒத்த திருக்கண்களை யுடையவரும்
ரமணீய வேஷம் -பொலிந்து தோன்றும் மனத்தைக் கவரும்படியான அழகிய தோற்றம் யுடையவருமான
நித்யம் நமாமி வரதம் –வரப் பிரதரான பேர் அருளாளனை எப்பொழுதும் இறைஞ்சுகிறேன் –

முக்தாத பத்ர யுகளே –
இரண்டு முத்துக் குடைகள் என்ன –

உபய சாமராந்தர் –
இரண்டு சாமரங்கள் என்ன
இவற்றின் உள்ளே –

வித்யோதமான விந்தா தனய அதிரூடம் –
விளங்கா நின்ற வைனதேயனான
பெரிய திருவடியின் மீது ஏறி
வீற்று இருப்பவனும் –

பக்த அபயப்ரத கராம்புஜம்-
அடியார்களுக்கு அபயம் அளிக்கும்
திருக் கைத் தாமரையை யுடையவனும் –

அம்புஜாஷாம் –
செந்தாமரைக் கண்ணனும் –

நித்யம் நமாமி வரதம் ரமணீய வேஷம் –
மநோ ஹராமான திவ்ய அலங்காரங்களை யுடையனுமான
பேரருளாளனை
இடையறாது வணங்குகின்றேன் —

———————————————————–

கேசித் தத்வ விசோதநே பசு பதௌ பாரம்ய மாஹூ பரே
வ்யாஜஹ்ரு கமலாசநே நயவிதாம் அன்யே ஹரௌ சாதரம்
இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி —3-

கேசித் தத்வ விசோதநே -பரதத்வ விஷய விசாரத்தில்
நயவிதாம்-ஸாஸ்த்ர விசார கண்ணோட்டம் யுடையவர்களுக்குள்ளே
கேசித் -சிலர்
பசு பதௌ -பசுபதியான முக்கண்ணன் இடத்தில்
பாரம்ய மாஹூ -பரதத்வத்தைத் தெரிவித்தனர்
பரே-வேறே சிலர்
கமலாசநே-தாமரையில் வீற்று இருப்பவராக நான்முகன் இடத்தில்
(பாரம்யம் )வ்யாஜஹ்ரு -பரதத்வத்தைப் பேசினார்கள்
அன்யே -மற்றும் சிலர்
(பாரம்யம் )ஹரௌ சாதரம் ஆஹு -ஆதாரத்தோடு பாபங்களை நசிக்கிற ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில்
பரதத்வத்தை வெளியிட்டார்கள்
இத்யேவம் சல சேதஸாம் ந்ருணாம்-இப்படியாக சஞ்சல புத்தியுடைய மநுஷ்யர்கள் விஷயத்தில்
ச்ருதீ நாம் நிதி -வேதங்களின் பொக்கிஷம் எனப்படும்
தார்ஷ்ய -பக்ஷி ராஜரான கருடாழ்வார்
சம்பிரதி -இப்பொழுது -இந்த மூன்றாம் நாளிலே
கரத்ருதம் -தம்முடைய உயர்த்திய திருக்கரங்களால் தாங்கப்பட்ட
ஹரே -ஹரியாகிய பரமபுருஷனுடைய
பாதாரவிந்தம்–தாமரை அடிகளை
தத்வம் -பரதத்வமாக –
அஹம் ஏவ பரம் தத்வம் என்று ஆறு வார்த்தைகளால் தாமே அருளிச் செய்தபடியே
தர்சயதீவ த்ருஸ்யதே -புலப்படுத்திக் காட்டுவது போல் சேவை யாகிறது –

கேசித் தத்வ விசோதநே நயவிதாம்-
பரதத்வம் இன்னது என்று
ஆராயும் அளவில்
சாஸ்திரம் அறிந்தவர்களுக்குள்ளே

பசு பதௌ பாரம்யம்-
சில மதஸ்தர்கள்
ருத்ரன் இடத்தில்
பரத்வத்தைக் கூறினார் –

ஆஹூ பரே வ்யாஜஹ்ரு கமலாசநே -பாரம்யம்-
வேறு சிலர் நான் முகக் கடவுளிடத்தில்
பரத்வம் உள்ளதாக பகர்ந்தார்கள் –

அன்யே ஹரௌ சாதரம்-பாரம்யம்-
மற்றையோர்கள் ஆதாரத்தோடு கூட
ஸ்ரீ மன் நாராயணன் இடத்தில் பரத்வம்
உள்ளதாக சொன்னார்கள் –

இப்படி பலரும் பலவாறாக சொல்லுகின்றார்களே
ஒரு விதமான நிஷ்கர்ஷம் இல்லையே
என்று தளும்பின நெஞ்சை யுடையரான மனிசர்க்கு
தெள்வு பிறப்பிக்க வேண்டி –

இத்யேவம் சலசேதஸாம் கரத்ருதம் பாதாரவிந்தம் ஹரே
தத்வம் தர்சயதீவ சம்ப்ரதி ந்ருணாம் தார்ஷ்ய ச்ருதீ நாம் நிதி –
வேதங்களுக்கு நிதியான பெரிய திருவடியானவர்
இப்போது
இத் திரு நல நாளிலே
தம்முடைய கைத் தளத்திலே தாங்கப் பட்ட
எம்பெருமான் உடைய திருவடித் தாமரையை
பரதத்துவமாகக் காட்டுகின்றார் போலும்-

வேதாத்மாவான விஹகேச்வரன்
சந்தேக விபர்யாயம் அற
பரதத்வத்தை
ஸ்ரீ மன் நாராயணன் உடைய இந்தத் திருவடித் தாமரையே காணீர் பரதத்வம் -என்று
கரஸ்தமாக்கிக் காட்டுகிறாப் போலே உள்ளது -என்றார் ஆயிற்று
பஷி காட்டி விட்டால் இதையே தத்வமாக விஸ்வசிக்க விரகு உண்டோ
என்கிற சங்கைக்கு இடம் இன்றி –
ச்ருதீ நாம் நிதி -என்று கருத்மானுக்கு விசேஷணம் இட்டார்
வேதாத்மா விஹகேச்வர -என்று ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே –
ஸூபர்ணோசி கருத்மான் த்ரிவ்ருத்தே சிர -இத்யாதி வேத வாக்கியம் உண்டே-

———————————————————-

யத் வேத மௌலி கண வேத்யம் அவேத்யம் அந்யை
யத் ப்ரஹ்ம ருத்ர ஸூ ர நாயக மௌலி வந்த்யம்
தத் பத்ம நாப பத பத்ம மிதம் மனுஷ்யை
சேவ்யம் பவத் பிரிதி தர்சய நீவ தார்ஷ்ய–4-

பத்ம நாப-தாமரை யுந்திப் பெருமானுடையதான
யத் பத பத்மம் -எந்தத் தாமரைத் திருவடியானது
வேத மௌலி கண -வேதாந்த -உபநிஷத் -தொகுப்புக்களாலே –
வேத்யம் -அறியப்பட வேண்டியதும்
அவேத்யம் அந்யை-அவைத்யர்களான மற்றோர்களால் அறியப்பட முடியாததும்
யத் ப்ரஹ்ம ருத்ர ஸூ ர நாயக -ப்ரஹ்மாதிகளும்
மௌலி வந்த்யம்-தங்கள் முடி தாழ்த்தி வணங்கக் கூடியதுமான
தத் இதம் -அப்படிப்பட்டதான இந்த திருவடியே
தத் பத பத்ம மிதம் மனுஷ்யை
சேவ்யம் பவத் பிர் இதி -மனிதர்களான உங்களால் சேவிக்கத் தகுந்தது என்று
தர்சய நீவ தார்ஷ்ய–விநத குமாரனான கருத்மான் காணத் தகுந்ததாகக் காட்டுகிறார் போலே தோற்றம் அளிக்கிறது –

ஒ வைதிக ஜனங்களே
எம்பெருமான் யுடையதான எந்தத் திருவடியானது
வேதாந்தங்களுக்கே அறியக் கூடியதோ
வைதிகர்கள் அல்லாத மற்றியோர்க்கு அறியக் கூடாததோ
யாதொரு திருவடியானது
பிரமன் சிவன் இந்த்ரன் ஆகிய இவர்கள் முடி தாழ்த்தி
வணக்கக் கூடியதோ
அப்படிப் பட்ட இந்தத் திருவடியானது
உங்களால் சேவிக்கத் தகுந்தது
என்று கருத்மான்
கையிலே ஏந்தி காட்டி அருளுகின்றான் போலும் –

———————————

பிரத்யக் கோபுர சம்முகே தின முகே பஷீந்த்ர சம்வாஹிதம்
ந்ருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ர த்வயீ பாஸூரம்
ஸாநந்தம் த்விஜ மண்டலம் விதததம் சந்தாஹ சிஹ்நாரவை
காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே–5-

காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே–திருக்கச்சி திவ்யதேசத்திலே தேவாதி ராஜப்பெருமானின் மூன்றாம் உத்சவத் திருநாள் அன்று
தின முகே-தினத்தின் துவக்கமாக பின் மாலை வேளையிலே
பஷீந்த்ர -பக்ஷி ராஜரான கருடாழ்வாராலே
சம்வாஹிதம்-தனது திருத்தோள்கள் மேல் அமர்த்தப்பட்டு நன்கு தாங்கப்பட்டவரும்
ந்ருத்யச் சாமர கோரகம்-தாமரை மொட்டுக்கள் போலே அசைந்து ஆடுகிற கவரிகளான சாமரங்களால் வீசப் படுபவரும்
நிருபமச் சத்ர த்வயீ -ஒப்பற்ற இரண்டு திருக்குடைகளின் நிழலில்
பாஸூரம்-பொலிந்து இருப்பவரும்
சந் நா ஹ -திரு வீதி உலா புறப் பாட தயார் என்பதைத் தெரிவிக்கின்ற
சிஹ்நாரவை-திருச்சின்னம் என்னும் காகள ஒலியினாலே
த்விஜ மண்டலம் –கோஷ்டியாக எழுந்து அருளி இருக்கும் இருமுறை ஓதும் ஸ்ரீ வைஷ்ணவ அந்தணர் குழாமை
ஸாநந்தம் விதததம் —மகிழ்வு ஊட்டுபவரும்
காந்தம் –பொலிந்த அழகு பொருந்தியவருமான
வரதம் -அபீஷ்ட வரங்களை ஈந்து அருளும் பேர் அருளாளப் பெருமாளை
புண்ய க்ருதோ –புண்யவான்களான பாகவத அடியர்கள்
பிரத்யக் கோபுர சம்முகே -மேல் திசை திருக்கோபுர வாசலிலே
பஜந்தி -போற்றி பாடி வணங்கி வழிபடுகிறார்கள்

பிரத்யக் கோபுர சம்முகே –
மேலைத் திருக் கோபுர வாசலிலே

தின முகே –
ஸூ ப்ரபாத வேளையில் –

பஷீந்த்ர சம்வாஹிதம் –
பெரிய திருவடியினால்
தாங்கப் பட்டவரும்

நருத்யச் சாமர கோரகம் நிருபமச் சத்ரத்வ யீபாஸூரம் –
சாமர முகுளம் வீசப் பெற்றவரும்
ஒப்பற்ற இரண்டு திருக் குடைகளின் இடையே
விளங்கா நிற்பவரும் –

ஸாநந்தம் த்விஜ மண்டலம் வீ தததம் சந்தாஹ சிஹ்நா ரவை –
புறப்பாடு சித்தமாயிற்று என்று
தெரிவிக்கிற திருச் சின்ன ஒலியினால்

காந்தம் புண்ய க்ருதோ பஜந்தி வரதம் –
மறையவர் திரளை மகிழச் செய்பவரும்
மிக அழகு போருந்தியவருமான
பேரருளாள பெருமாளை
பாக்ய சாலிகள் பார்க்கப் பெறுகிறார்கள் –
எங்கே எப்பொழுது என்றால் –

காஞ்ச்யாம் த்ருதீயோத்சவே –
திருக் கச்சி மா நகரில்
மூன்றாவது உத்சவ
நல நாளிலே

தன்யா பஸ்யந்தி மே நாதம் -என்று பிராட்டி வருந்தி சொன்னது போலே
இங்கும் புண்ய க்ருதோ பஜந்தி -என்று
தம் இழவு தோற்றச் சொல்லி இருக்கையாலே
இந்த மஹோச்த சேவை
தமக்கு பிராப்தமாக பெறாத காலத்திலே
பணித்தது இந்த ஸ்லோஹ பஞ்சகம் என்று
விளங்குகின்றதே –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டயாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நரசிம்ஹாஷ்டகம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள சீயர் அருளிச் செய்த ஸ்லோஹம் –

August 25, 2014

ஸ்ரீ ஸூந்தர ஜாமாத்ரு முனே ப்ரபத்யே சரணாம் புஜம்
சம்சாரார்ணவ சம்மக்ன ஜந்து சந்தார போதகம் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் பிராணிகளைக் கரை மரம் சேர்ப்பதற்கு
உரிய தோணி போன்றதான அழகிய மணவாள சீயர் உடைய
திருவடித் தாமரைகளை
தஞ்சமாக பற்றுகிறேன்
என்றவாறே –

பெருமாள் கோயில் கரிகிரியின் கீழ்க் காட்சி தந்து அருளா நிற்கும்
அழகிய சிங்கர் விஷயம் என்றும்
திரு வல்லிக் கேணி தெள்ளிய சிங்கர் விஷயமாகவும்
பணித்து அருளிய ஸ்லோகம் –

———————————————————————————————————————————————

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம்
தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ—————1-

—————————————-

ஸ்ரீமத் அகலங்க பரிபூர்ண சசி கோடி -ஸ்ரீதர மநோஹர ஸ்டா படல காந்த
அழகியவாயும்
களங்கம் அற்றவையுமாயும் உள்ள
பல வாயிரம் பௌர்னமி சந்திரர்களின்
சோபையைத் தாங்குகின்ற
மநோ ஹரமான
உளை மயிர் திரள்களினால் -சடாபடலம் -உளை மயிர்க் கற்றை – களாலே
அழகியவரே -அழகியான் தானே அரி யுருவன் தானே –

பாலய க்ருபா ஆலய பவ அம்புதி நிமக்நம் தைத்ய வரகால நரசிம்ஹ நரசிம்ஹ –
கருணைக்கு இருப்பிடமானவரே
ஆசூர வர்க்கங்களுக்கு யமன் போன்ற
அழகிய சிங்கப் பெருமாளே –
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ் புக நின்ற செங்கண்மால் -திருவாய் மொழி -3-6-6-
தைத்யவர் -இரணியன் போன்ற ஆசூர பிரக்ருதிகள்
காலன் -மிருத்யு
சம்சாரக் கடலில் வீழ்ந்த
அடியேனை ரஷித்து அருள வேணும் –
நரசிம்ஹ நரசிம்ஹ -இரட்டிடித்துச் சொல்லுகிறது
ஆதார அதிசயத்தினால் –

பிறவிக் கடலுள் நின்று துளங்கும் அடியேனுக்கு
தேவரீர் உடைய திருவருள் அல்லது
வேறு புகல் இல்லை
என்றார் -ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம்
பாதக தவா நல பதத்ரிவரகேதோ
பாவந பராயண பவார்த்தி ஹரயா மாம்
பாஹி க்ருபயைவ நரசிம்ஹ நரசிம்ஹ–2

—————————————-

பாத கமல அவந்த பாதகி ஜநா நாம் –
தனது திருவடித் தாமரைகளில்
வணங்கின பாபிஷ்ட ஜனங்களின் உடைய
பாபங்களுக்கு

பாதக தவா நல –
காட்டுத் தீ போன்றவனே

பதத்ரிவரகேதோ –
பஷி ராஜனான பெரிய திருவடியைக்
கொடியாக யுடையவனே –

பாவந பராயண –
தன்னைச் சிந்திப்பார்க்கு
பரகதியாய் யுள்ளவனே -உபாயமும் உபேயமுமாக இருப்பவனே

பவார்த்தி ஹரயா மாம் -பாஹி க்ருபயைவ –
சம்சாரத் துன்பங்களைப்
போக்க வல்ல
உனது
கருணையினாலேயே அடியேனைக் காத்தருள வேணும்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
க்ருபயைவ -என்பதால்
ஏவ காரத்தால்
என் பக்கலில் ஒரு கைம்முதல் எதிர் பார்க்கலாகாது
என்கிறது –

நரசிம்ஹ நரசிம்ஹ
அழகிய சிங்கப் பெருமானே-

——————————————————————————————————————————————————————-

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக்
பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர
பண்டித நிதான கமலாலய நமஸ் தே
பங்கஜ நிஷண்ண நரசிம்ஹ நரசிம்ஹ——3-

———————————

துங்க நக பங்க்தி தளிதா ஸூ ரவரா ஸ் ருக் பங்க நவ குங்கும விபங்கில ம்ஹோர –
நீண்ட திரு வுகிற் வரிசைகளினால் பிளக்கப் பட்டவனான
ஹிரன்யாசூரனுடைய
உதிரக் குழம்பாகிற
புதுமை மாறாத
கும்குமச் சாறு தன்னால் வ்யாப்தமாய் இருக்கிற
அகன்ற திரு மார்பை
யுடையவரே –

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன்
போன்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -என்றும் –

போரார் நெடு வேலோன் பொன் பெயரோன் ஆகத்தை
கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு குடல் மாலை
சீரார் திரு மார்பின் மேல் கட்டிச் செங்குருதி
சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி
ஆரா வெழுந்தான் அரி யுருவாய் -என்றும் சொல்லுகிறபடியே

பண்டித நிதான
அறிஞர்கட்கு நிதி போன்றவரே
வைத்த மா நிதி இ றே
நிதியானது உள்ளே பத்தி கிடந்தது
ஒரு கால விசேஷத்திலே
பாக்யவாங்களுக்கு வெளிப்படுமா போலே –

கமலாலய –
பெரிய பிராட்டியாருக்கு இருப்பிடமானவரே –
கமலை கேழ்வனே-
நரசிங்க வுருக் கொண்ட போது மூவுலகும் அஞ்சிக் கலங்கிப்
போகும்படியான சீற்றம் உண்டானது கண்டு
அதனைத் தணிக்க
ஸ்ரீ மகா லஷ்மி வந்து குடி கொள்ள
லஷ்மி நருசிம்ஹான் ஆண்மை இங்கு நினைக்கத் தக்கது

பங்கஜ நிஷண்ண –
ஆசன பத்மத்திலே எழுந்து அருளி இருப்பவரே –
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -என்றபடி –

நரசிம்ஹ நரசிம்ஹா –

நமஸ் தே
உமக்கு வணக்கமாகுக –

————————————————————————————————————————————————————————–

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்
யோகி ஹ்ருதயேஷூ ச சிரஸ் ஸூ நிகமா நாம்
ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே
தேஹி மம மூர்த்நி நரசிம்ஹ நரசிம்ஹ—————–4-

————————————————————————————————-

மௌலிஷூ விபூஷண மிவாமரவராணாம்-
அமரவராணாம் மௌலிஷூ விபூஷண –
சிறந்த தேவர்களின் முடிகளின் மீதும்
அமரர்கள் சென்னிப் பூ இ றே

யோகி ஹ்ருதயேஷூ –
யோகிகளின் உள்ளத்திலும் –

ச சிரஸ் ஸூ நிகமா நாம் –
வேதாந்தங்களிலும் –
வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கு

மௌலிஷூ விபூஷண
சிறந்த தொரு பூஷணம் போன்று விளங்குகின்ற –
விபூஷணம் எனபது சப்தம் எந்த பதங்கள் எல்லாவற்றிலும் அந்வயிக்கக் கடவது

ராஜ தரவிந்த ருசிரம் பதயுகம் தே தேஹி மம மூர்த்நி –
தாமரை போல் அழகிய
தேவரீருடைய திருவடி இணையை
என் சென்னி மீது
வைத்து அருள வேணும் –

கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் யாழி யம் கண்ணா வுன் கோலப் பாதம் -என்றும்

நரசிம்ஹ நரசிம்ஹ-

——————————————————————————————————————————————————————

வாரிஜ விலோசன மதநதி மதசாயம்
க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம்
ஏஹி ரமயா சஹ சரண்ய விஹகா நாம்
நாதமதி ருஹ்ய நரசிம்ஹ நரசிம்ஹ———————5-

————————————————

 

வாரிஜ விலோசன –
செந்தாமரைக் கண்ணரே –
கிண் கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுத் சிறிதே எம்மேல் விழித்து அருள வேணும்

சரண்ய-
அடியேன் போல்வார்க்குத் தஞ்சமானவரே –

மதநதி மதசாயம் –
என்னுடைய சரம அவஸ்தையிலே

க்லேச விவ சீக்ருத சமஸ்த கரணாயாம் –
சமஸ்த கரணங்களையும் -செவி வாய் -கண் -முதலான –
க்லேசத்துக்கு வசப்படுதுமதான
அந்த சரம அவஸ்தையிலே –

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்றும்

மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து மேல் மிடற்றினை யுள் எழ வாங்கி
காலும் கையும் விதிர் விதிர்த்து ஏறிக் கண் உறக்கமதாவது -என்றும்

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர்க் குழிக் கண்கள் மிழற்றத்
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற -என்றும் –

காஷ்ட பாஷான சந்நிபம் அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் -என்றும்
ஏஹி ரமயா சஹ விஹகா நாம் நாதமதி ருஹ்ய –
ரமயா சஹ விஹகாநாம் நாதம் அதிருஹ்ய ஏஹி
பிராட்டியோடு கூடப் பெரிய திருவடி மேல் எரிக் கொண்டு
அடியேன் பால் வந்து அருள வேணும் –

பறவை ஏறு பரம் புருடனாய்ப் பிராட்டியோடும் கூட எழுந்தருளி
பாவியேனைக் கை கொண்டு அருள வேணும்
என்று பிரார்த்திக்கிறார்
ஆயிற்று

நரசிம்ஹ நரசிம்ஹ-

————————————————————————————————————————————————————————-

ஹாடக கிரீட வரஹார வநமாலா
தார ரசநா மகர குண்டல ம ணீந்த்ரை
பூஷிதம சேஷ நிலயம் தவ வபுர் மே
சேதசி சகாஸ்து நரசிம்ஹ நரசிம்ஹ–6-

——————————

ஹாடக கிரீட –
பொன்மயமான சிறந்த மகுடம் என்ன

வரஹார வநமாலா –
வைஜயந்தி என்னும் வனமாலை என்ன

தார ரசநா –
முத்து மயமான அரை நாண் என்ன –
தாரம் -என்று முத்துக்குப் பெயர்
நஷத்ரவடம் என்கிற திரு ஆபரணத்தை சொல்லிற்றாகவுமாம்

மகர குண்டல ம ணீந்த்ரை –
திரு மகரக் குழைகள் என்ன –

மணீந்த்ரை –
ரத்னா வாசகமான இந்த சப்தம் லஷண்யா ரத்ன பிரசுர பூஷண வாசகம் ஆகலாம் –

பூஷிதம –
ஆகிய இத் திரு ஆபரணங்களினால்
அலங்கரிக்கப் பட்டதும் –
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ ஆழிகளும் கிண் கிணியும்
அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல வைம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியுமான
திரு வாபரனங்கள் அணிந்த திரு மேனியே தமது திரு உள்ளத்தில் திகழ வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

அசேஷ நிலயம் –
எங்கும் வ்யாபித்ததுமான
அசெஷத்தையும் நிலையமாக வுடைத்தான -என்கை
நிலய சப்தம் நித்ய பும்லிங்கம் ஆகையாலே இங்கு பஹூ ரீவ்ஹியாகக் கடவது

தவ வபுர்-
தேவரீர் உடைய திரு மேனி

மே சேதசி சகாஸ்து –
என் நெஞ்சின் உள்ளே விளங்க வேணும்

நரசிம்ஹ நரசிம்ஹ –
அழகிய சிங்கப் பெருமாளே-

———————————————————————————————————————————————————————————–

இந்து ரவி பாவக விலோசன ரமாயா
மந்திர மஹா புஜ லசத்வர ரதாங்க
ஸூந்தர சிராய ரமதாம் த்வயி மநோ மே
நந்திதித ஸூரேச நரசிம்ஹ நரசிம்ஹ—7-

————————————————

இந்து ரவி பாவக விலோசன –
சந்தரன் சூர்யன் அக்னி
இவர்களை திருக் கண்ணாக
யுடையவரே –
தீப் பொறி பறக்கும் நெற்றிக்கண் உண்டே -அதனால் அக்னியை சேர்த்து அருளுகிறார்

ரமாயா மந்திர –
பெரிய பிராட்டியாருக்கு
திருக் கோயிலாக இருப்பவரே –
அந்த நெற்றிக் கண்ணை அவிப்பதற்காக
பிராட்டி வந்து திரு மேனியில் வீற்று இருந்த படியாலே
ரமாயா மந்திர -என்றார் –

மஹா புஜ லசத்வர ரதாங்க
தடக்கையிலே விளங்கும்
சிறந்த திரு ஆழி ஆழ்வானை யுடையவரே –

மஹா புஜ லசத் தரரதாங்க -என்றும்பாடபேதம்
தரம் -என்று சங்குக்குப் பெயர் ஆதலால்
சங்கு சக்கரம் இரண்டையும் சேரச் சொன்னபடி ஆகவுமாம்

ஸூந்தர –
அழகு பொலிந்தவரே-

சிராய ரமதாம் த்வயி மநோ மே-
அடியேனுடைய மனமானது
தேவரீர் இடத்தில்
நெடும்காலம் உகப்பு கொண்டு இருக்க வேணும்

நந்திதித ஸூரேச –
அமரர் கோணத்த துயர் தீர்த்தவரே –

நரசிம்ஹ நரசிம்ஹ-

———————————————————————————————————————————————————–

மாதவ முகுந்த மது ஸூதன முராரே
வாமன நருசிம்ஹ சரணம் பவ நதா நாம்
காமத கருணின் நிகில காரண நயேயம்
காலமமரேச நரசிம்ஹ நரசிம்ஹ——8-

——————————————————————————————————–

மாதவ –
திருமாலே –

முகுந்த –
முக்தி அளிக்கும் பெருமானே –

மது ஸூதன –
மது கைடபர்களை மாய்த்தவனே

முராரே –
நரகா ஸூ ரவதத்தில் -முரணைக் கொன்றவனே

வாமன-
குறள் கோலப் பெருமானே

நருசிம்ஹ –
நரம் கலந்த சிங்கமே –

சரணம் பவ நதா நாம் –
அடி பணிந்தவர்களுக்குத் தஞ்சமாவாய் –

காமத
அபேஷிதங்களை எல்லாம் அளிப்பவனே –

கருணின் –
தயாளுவே –

நிகில காரண –
சகல காரண பூதனே

காலம் நயேயம் –
யமனையும் அடக்கி யாளக் கடவேன் -பொருள் சிறவாது
உன்னை வாழ்த்தியே வாழ் நாளைப் போக்கக் கடவேன் –

அமரேச –
அமரர் பெருமானே

நரசிம்ஹ நரசிம்ஹ –
இங்கனே உன் திரு நாமங்களை வாயார வாழ்த்திக் கொண்டே
என் வாழ் நாளைப் போக்கக் கடவேன்

க்ரோசன் மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேதி
அனிசமப நேஷ்யாமி திவசான் -பட்டர்

——————————————————————————————————————————————————–

அஷ்டகமிதம் சகல பாதக பயக்தம்
காம தம சேஷ துரி தாம யரி புக்நம்
ய படதி சந்ததம சேஷ நிலயம் தே
கச்சதி பதம் ஸ நரசிம்ஹ நரசிம்ஹ–9-

——————————————————–

அஷ்டகமிதம் –
எட்டு ஸ்லோகங்களினால் அமைந்த
இந்த ஸ்தோத்ரத்தை –

சகல பாதக பயக்தம் –
சகல பாபங்களையும்
சகல பயன்களையும்
போக்கடிப்பதும்
பாதகம் -மஹா பாதகங்களை -குறிக்கும்

காம தம –
சகல அபேஷிதங்களையும் அளிப்பதும்

சேஷ துரி தாம யரி புக்நம் –
சகல விதமான பாபங்களையும்
பிணிகளையும்
பகைவர்களையும்
நிரசிப்பதுமான –
துரிதம் -உபபாதகன்களை

ய படதி சந்ததம சேஷ நிலயம் தே கச்சதி பதம் ஸ –
யாவன் ஒருவன் கற்கின்றானோ
அவ்வதிகாரி
அனைவருக்கும் ப்ராப்யமான
தேவரீர் உடைய திவ்ய ஸ்தானத்தை
அடைந்திடுவான்

நரசிம்ஹ நரசிம்ஹ –

இதனால் இந்த ஸ்தோத்ரம் கற்றாருக்கு பலன்சொல்லித் தலைக் கட்டுகிறார்
அநிஷ்ட நிவாரணம்
இஷ்ட ப்ராபணம் ஆகிற இரண்டுக்கும்
கடவதான இந்த ஸ்தோத்ரத்தை
நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வர்
என்று பேறு கூறித் தலைக் கட்டினார் ஆயிற்று

தெள்ளிய சிங்க பெருமாள் அக்காராகனி திருவடிகளே சரணம்

————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாளச் சீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தேவ ராஜ மங்களம்-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்லோகங்கள் -ஸ்ரீ பேர் அருளாளன் கோயில் ஸேவா கிரம ஸ்லோகமும் ஸ்ரீ காஞ்சி திவ்ய தேச முக்த ஸ்லோகமும் –

August 25, 2014

ஸ்ரீ கோயில் திருமலை ஆழ்வார் -திருவாய் மொழிப்பிள்ளை -நாலூர் ஆச்சான் பிள்ளை
ஈடு சாதித்த விருத்தாந்தம் –
திருவாய் மொழிப்பிள்ளை திருவரங்கத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளியதால்
இப்படி விளிச்சொல் அவருக்கு நன்றி காட்டி அருளவே இந்த மங்களாசாசனம் -12–ஸ்லோகங்கள்
ஸ்ரீ தேவ ராஜ பெருமாளுக்கு மங்களா சாசனத்துக்காகவே அருளிச் செய்த ஸ்லோகம் இது

ஆலம்பனம் -ச துலம் -துலா மாச மூலம் —
அனைத்துக்கும் மூலம் –
சடாரி முக -தொடக்கமான ஆச்சார்ய ஸ்ரீ ஸூக்திகள் அறியும் மூலம் –
பிறவி பயன் பெற மூலம்

—————————

அப்பிள்ளை அருளிச் செய்த தனியன் –

யச் சக்ரே தேவராஜஸ்ய மங்களா சாசனம் முதா
தம் வந்தே ரம்யா ஜாமாத்ரு முநிம் விசத வாக் வரம்-

முதா -ஆனந்தம் பொங்க அருளிச் செய்த
சக்ரே -அருளிச் செய்தவர் –
ஜாமாதா -மணவாளன் — ரம்ய -அழகிய –முனிம் -மனன சீல-முனி –

பதற்றத்துடன் என் வருமோ -அதி சங்கையால் பல்லாண்டு பெரியாழ்வார்
இவரோ ஆனந்தத்துடன் மங்களா சாசனம்
பண்ணி அருளிய உபகார சிந்தனையால் ஆனந்தம் –
கண்டவாற்றால் தானே என்று நின்று அருளும் இவரைப் பார்த்து அதி சங்கையும் பண்ணவும் வேண்டாமே –
இவருக்கு அதிக ஈடுபாடே பிள்ளை லோகாச்சார்யார் தானே -இவரே அவராக அன்றோ

————————————————————————–

பல்லாண்டு -தொடங்கிய பெரியாழ்வார் போல் மங்களம் பாதத்தால் இங்கும் தொடக்கம் –
எந்த பேர் அருளாளன் கிருபை லேசத்தால் -தயா நிதிம் -தயைக்கு இருப்பிடம் –
ஆளவந்தார் ஸ்லோகம் -செவிடன் கேட்க்கிறான் -நொண்டியும் ஓடுகிறான் -ஊமையும் பேசுகிறான் –
குருடன் பார்க்க -மலடி பிள்ளைப் பேறு

மங்களம் வேதஸோ வேதி மேதிநீ க்ருஹமேதிநே
வரதாய தயா தாம்நே தீரோ தாராய மங்களம்-1

——————————

மங்களம்-பல்லாண்டு

வேதஸோ
பிரமனுடைய –

வேதி மேதிநீ –
உத்தர வேதி ஸ்தலத்தை –
நான் முகன் செய்த அஸ்வமேத யாகத்திலே
உத்தர வேதியில் திருவவதரித்து அருளினார்
புராண பிரசித்தி

க்ருஹமேதிநே –
இருப்பிடமாகக் கொண்டவருமான –

க்ருஹமேதிநே —
பெரும்தேவி மணவாளன் -என்றுமாம்
கமலா க்ருஹமேதிநம் -என்றார் ஸ்ரீ தேசிகன்

வரதாய-தயா தாம்நே –
அருளுக்கு இருப்பிடமான -என்றபடி-
வரம் ததா தீய -வேண்டிய மங்களங்கள் எல்லாம் அருளும் பேர் அருளாளன் – இறே-

தீரோ தாராய –
தைரியமும்
ஔதார்யமும் யுடையவர் -என்கை –
திருமங்கை ஆழ்வாருக்கு -வேகவதி மண்ணை அளந்து தானம் கொடுத்து –தங்க நெல் மணியாக மாறினதே —

மங்களம்-
பல்லாண்டு –
விரையார் பொழில் வேங்கடவன் -அரங்கனைப் பாட வந்த பொழுது -எங்கு இருந்து வந்தான் என்பதை உள்ளி மங்களா சாசனம் –
வடக்கு வாசல் வழியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறார் அன்றோ –
அதே போலே இங்கும் ஆவிர்பாவம் சொல்லி –மங்களாசானம் பண்ணி அருளிச் செய்கிறார் –

———————————————————————————————————–

வாஜிமேத வபா ஹோமே தாதுருத்தர வேதித
உதிதாய ஹூதாதக்நேர் உதாராங்காய மங்களம்–2-

வாஜிமேத -அஸ்வமேத யாகம்
வபா ஹோமே-ஹவிர் பாகம்
தாதுருத்தர வேதித-யாக குண்டம் யாக வேதிகை -உத்தர வேதிகை
உதிதாய ஹூதாதக்நேர் உதாராங்காய மங்களம்—ஆவிர்பவித்து -உதாராங்காய மங்களம் அழகிய திரு மேனியுடன் –
கீழே வரத்தை சொல்லி இங்கு அழகிய திரு ரூபம் –
வள்ளல் தன்மை -உதாரன்-அழகை நேராக காட்டி -நாமும் இன்றும் சேவிக்கும் படி திரு முகத்தில் வடுக்கள் உடன்
அநந்தம் பிரதம ரூபம் –சாலைக் கிணறு –உயர்ந்த ரத்னம் அரங்கன் தன்னிடமே கொள்ளுவான் —
அரையர் தாளம் இசைத்து -அருளிச் செயல்களை -சாதித்து -கச்சிக்கு வாய்த்தான் மண்டபம் –
அத்தியூரான் புள்ளை யூர்வான் -நம் இராமானுஜனை தந்து அருள வேணும்
கெட்டேன்-ராமன் த்வரி ந பாஷதே -தந்தோம் -தியாகம் -இவருக்கே உரிய தனிச் சிறப்பு –

பிரமனுடைய அயமேத வேள்வியில் வபையை எடுத்து
ஹோமம் பண்ணின யுடனே
உத்தர வேதியில் நின்றும்
ஹோம குண்டலத்தில் இருந்து உதித்து அருளினவரும்
அழகிய திரு மேனியை யுடையவருமான
பேரருளாளப் பெருமாளுக்கு பல்லாண்டு-

—————————————————————

யஜமாநம் விதிம் வீஷ்ய ஸ்வயமான முகச்ரியே
தயமாந த்ருசே தஸ்மை தேவராஜாய மங்களம்-3-

விதிம்-ப்ரம்மா
ஸ்வயமான முகச்ரியே–சிரித்த முகத்துடன்
தயமாந த்ருசே தஸ்மை
தேவராஜாய மங்களம்-

தாதாம் ஆவீர் பூத் ஸவ்ரி ஸ்வயமான முகாம்புஜ பீதாம்பரத ஸ்ரக்வீ -சாஷாத் மன்மத மன்மத-

கோபிமார்கள் –ஆனந்தம் சாத்மிக்க-மறைய -துக்கம் -மிக்கு -அத்தை போக்க சங்கு சக்கர -பீதாம்பர காட்சி கொடுப்பதை –
தாதாம் ஆவீர் பூத் ஸவ்ரி–முதல் பாதம் -விவரணம் முன் பாசுரம் –
ஸ்வயமான–இரண்டாம் பாதம் -இப்பாசுரம்
பீதாம்பர -பட்டு பீதாம்பரம் -ஸ்ரக்வீ -வனமாலை -திருத் துழாய் மாலைகள் உடன்
சாஷாத் மன்மத மன்மத –ஆறாவது ஸ்லோகத்தில் காட்டுவார் –

தம்மை சாஷாத் கரிக்கும் பொருட்டு
வேள்வி செய்த பிரமனை நோக்கிப்
புன்முறுவல் செய்து கொண்டு
அருள் நோக்கம் தந்து அருளின
தேவப் பெருமாளுக்கு பல்லாண்டு

—————————————————

வாரித ஸ்யாம வபுஷே விராஜத் பீத வாஸஸே
வாரணா சல வாஸாய வாரி ஜாஷாய மங்களம்–4-

வாரித ஸ்யாம வபுஷே –
கரு முகில் போல்வதோர் திருமேனி யுடையவரும்

விராஜத் பீத வாஸஸே –
பீதக வாடை திகழும்
திருவரையை யுடையவரும்

வாரணா சல வாஸாய –
திரு வத்தி மா மலையைத்
தன்னிடமாகக் கொண்டவரும்

வாரி ஜாஷாய –
செந்தாமரைக் கண்ணருமான
தேவப் பெருமாளுக்கு
அக்ஷன் கண் -வாரி நீர் -வாரி ஜ நீரில் வந்த தாமரை

மங்களம் –
பல்லாண்டு-

வாரித ஸ்யாம வபுஷே -வாரி –மேகம் -ஸ்யாமளா-திருமேனி –கறுத்த-பத்து மஞ்சள் –
கருணை நிறம் கருப்பு -கோபம் சிகப்பு –செய்யாள் -திருக்கண் திருமேனி -மாறி –
விராஜத் பீத வாஸஸே-பீதாம்பரம் –
வாரணா சல வாஸாய -சலம் -வாரணம் -யானை மலை -ஹத்திகிரி வாசம் -ஐராவதம் கைங்கர்யம் —
வாழைத்தண்டு விளக்கு –அனைவருக்கும் அருள் புரிய
வாரிஜா ஷாய மங்களம்- வாரி – ஜலம் –தாமரை -அக்ஷன் கண் -தாமரைக் கண்ணன்

————————————————————

அத்யாபி சர்வ பூதாநாம் அபீஷ்ட பல தாயிநே
பிரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்-5-

நான்முகனுக்கு அபேஷித சம்விதானம் செய்து அருளினது போலவே
இன்றைக்கும்
சகல பிராணி வர்க்கங்களுக்கும்
அபேஷிதங்களான பலன்களை அருளிச் செய்பவரும்
ஆஸ்ரிதர்கள் அநிஷ்ட நிவ்ருத்திகளையும் செய்து அருள்பவரும்
எனக்குத் தலைவருமான
தேவப் பெருமாளுக்கு
பல்லாண்டு-

அத்யாபி சர்வ பூதாநாம் -அனைவருக்கும் -இன்றும் கூட -நான் முகனுக்கு -திரு மங்கை ஆழ்வாருக்கு –
ராமானுஜரை ரஷித்து -தேசிகனுக்கு அருளி -நமக்கும் இன்றும் –
தமக்கும் திருவாயமொழிப்பிள்ளை மூலம் ஈடு கொடுத்து அருளினார்-
அபீஷ்ட பல தாயிநே-அனைத்தையும் அருளும்
பிரணதார்த்தி ஹராயாஸ்து- ப்ரபவே மம மங்களம்-5-
தேசிகன் -உஞ்ச வ்ருத்தி செய்து-கால ஷேபம்– ஸ்ரீ ஸ்துதி -தங்க மழை பொழிய -பிரம்மச்சாரி பிள்ளைக்கு கல்யாணத்துக்கு –

—————————————————————

திவ்ய அவயவ சௌந்தர்ய திவ்ய ஆபரண ஹேதயே
தந்தாவள கிரீசாய தேவராஜாய மங்களம்–6-

திவ்யமான அவயவ சௌந்தர்யத்தை யுடையவரும்
திவ்யமான ஆபரணங்களை யுடையவரும்
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதருமான
தேவப் பெருமாளுக்கு
பல்லாண்டு
தந்தா வளம் =என்று யானைக்கு பெயர்-

திவ்ய அவயவ சௌந்தர்ய –லாவண்யமும் சௌந்தர்யமம் உண்டே –
திவ்ய ஆபரண ஹேதயே-கிரீட மகுட –சங்கு சக்கர இத்யாதி -கழுத்தில் பெரும் தேவியார் கை வளையல் தழும்பு –
தந்தாவள கிரீசாய –யானை மலை தலைவன்
தேவராஜாய மங்களம்–
க்ளைவ்ஹாரம்–Robert Claiv -கருட சேவைக்கு -பெருமாள் எழுந்து அருள -திரு ஒத்து வாடை சமர்ப்பிக்க -வியர்க்குமா -கேட்டானாம் –
பிழிந்து காட்ட -சாஷாத் -என்று உணர்ந்தானாம் -அர்ச்சாவரதாரம் உயிர் உண்டு விஸ்வசிப்பவனே ஸ்ரீ வைஷ்ணவன் என்பாராம் நம்பிள்ளை
அவன் கொடுத்த ஹாரம் –கருட சேவை பொழுது இன்றும் சாத்துவார்கள் –

——————————————————————

புருஷாய புராணாய புண்ய கோடி நிவாஸிநே
புஷ்பிதோ தார கல்பத்ரு கமநீயாய மங்களம்—7

புருஷாய புராணாய-
அநாதி சித்த புருஷரும்

புண்ய கோடி நிவாஸிநே –
புண்ய கோடி விமானத்திலே எழுந்து அருளி இருப்பவரும்

புஷ்பிதோ தார கல்பத்ரு கமநீயாய –
பூத்து அழகிய கல்ப வருஷம் போல்
ஸ்ப்ருஹணீயமான
தேவப் பெருமாளுக்கு
கமநீய -விரும்பத் தக்கவர்

மங்களம் –
பல்லாண்டு-

புருஷாய புராணாய–உத்தம புருஷன் -புருஷோத்தமன் -மனசை வசிப்பதால் புருஷன் -புரி-சேதியதி புருஷ
நெஞ்சமே நீள் நகர் -இதுவே தலை நகர் அவனுக்கு –
மனத்துள்ளான் -மா கடல் நீர் உள்ளான் –பேயாழ்வார் முதலில் –
புரு பஹு சனோதியதி புருஷ -கொடுப்பவர் -என்றுமாம் -உயர்ந்த பரம புருஷார்த்தம் அருளுபவர் –
அதமன் -மத்யமன் -உத்தமன் -புருஷோத்தமன் –ராமானுஜரை அனைவரும் அனுபவிக்க கொடுத்து
புராணாயா -தொல்லை மால் –மற்றவை நவீனம் -சரபர் -கற்பனை -ப்ரத்யங்கிரா தேவி -ப்ரத்யங்கிங்கிரா மேலும் வரும் –
புரா அபி நவி புராணம் -அந்த அந்த சனத்துக்கு புதிதாக -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் இவனே –
புண்ய கோடி நிவாஸிநே–விமானம் -சாயை நிழலில் செய்யும் புண்ய கார்யம் கோடி மடங்கு –
இதனால் தான் ப்ரம்மா இங்கே அஸ்வமேத யாகம்
ஆனந்த நிலையம் -திருமலை –எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
கமநீயாய மங்களம்-பொன்னே போலே அனைவரு விரும்பி பொக்கிஷம் போலே கொள்ளும்
தாமரைக்காடு -பூத்தால் போலே அன்றோ -கண்ணனையும் தாமரை –அடியும் அஃதே –

—————————————————————–

காஞ்ச நாசல ச்ருங்காக்ர காளமேகா நுசாரிணே
ஸூபர்ண அம்ஸ அவதம்ஸாய ஸூர ராஜாய மங்களம்–8-

காஞ்ச நாசல ச்ருங்காக்ர காளமேகா நுசாரிணே –
பொன் மயமான தொரு மலையின் உச்சியிலே
காளமேகம் திகழ்வது போலே

ஸூ பர்ணாம் ஸாவதம் ஸாய ஸூ ரராஜாய மங்களம் –
பெரிய திருவடியின்
திருத் தோளுக்கு
அலங்காரமாகி நின்ற
தேவப் பெருமாளுக்குப்
பல்லாண்டு-

ஸூபர்ண -கருடன்

காய்ச்சின பறவை யூர்ந்து பொன்மலையின் மீ மிசைக் கார்முகில் போல் -திருவாய்மொழி
அத்தியூரான் புள்ளை யூர்வான் -பூதத் தாழ்வார்
வையத்தெவரும் வணங்கும் பெரிய திருவடி சேவை -பிரசித்தம் இறே-

காஞ்ச நாசல ச்ருங்காக்ர -ஸ்வர்ணமே மலையாக -உச்சி மேலே
காளமேகா நுசாரிணே–காள மேகம் –
ஸூபர்ண அம்ஸ அவதம்ஸாய -கருடன் ஸ்வர்ண மலை போலே -வைகாசி விசாகம் -கருட சேவை காண கண் கோடி வேணுமே
அடியார் தோள்களில் மிதந்து வரும் படி -தொட்டாச்சார்யார் சேவை பிரசித்தம் –தக்கான் குளம் –
ஸூ ரராஜாய மங்களம்–தேவ ராஜர் -அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவா –

————————————————————————–

போகா பவர்க்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தத்தே த்வயம்
ஸ்ரீ மத் வராத ராஜாய மஹோதாராய மங்களம்–9-

இருள் தரும் மா ஞாலம் ஆகிய இவ் வுலகத்தில் போகம் என்றும்
நலமந்த மில்லதோர் நாடாகிய நித்ய விபூதியில் போகம் என்றும்
போகம் -இருவகைப் படுமே
ஐஹிகத்தை விரும்புவார் சிலர்
ஆமுஷ்மிகத்தை விரும்புவார் சிலர்
இங்கனே ஓர் ஒன்றை விரும்பினாலும் கூட
தம்முடைய ஔதார்ய விசேஷத்தாலே-
இரண்டையும் அளித்து அருள்பவர்
பேரருளாள பெருமாள்
என்கிறார் –

அவன் நாடு நகரமும் நான்குடன் காண
நலனிடை யூர்தி பண்ணி
வீடும் பெறுத்தித்
தன் மூ வுலகுக்குத் தரும் ஒரு நாயகமே -போலே –

போகா பவர்க்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தத்தே த்வயம்
போகம்-ஐஸ்வர்யம் – -அபவர்க்கம் -முக்தி –
கூரேச விஜயம் -நாலூரானுக்கும் அருளி –
ஸ்ரீ மத் வராத ராஜாய மஹோதாராய மங்களம்–

———————————————————————————–

மதங்க ஜாத்ரி துங்காக் ரச் ருங்கச் ருங்கார வர்ஷ்மணே
மஹாக்ருபாய மத்ர ஷா தீஷி தாயாஸ்து மங்களம்–10-

ஸ்ரீ ஹஸ்த கிரியின் மிக வுயர்ந்த உச்சிக்கு
அலங்காரமான திரு மேனியை யுடையவரும்
என் போல்வாரைக் காத்து அருள்வதில் தீஷை கொண்டவருமான
பேரருளாள பெருமாளுக்கு
பல்லாண்டு
வர்ஷம் -திருமேனி

மதங்க ஜாத்ரி-யானை மலை
துங்காக் ரச் ருங்கச் ருங்கார வர்ஷ்மணே-அழகன் அழகிய திரு மேனி உடன் சிகரத்தில் சேவை சாதித்து
மஹாக்ருபாய மத்ரஷா தீஷி தாயாஸ்து மங்களம்–ரக்ஷண தீக்ஷை
மணல் பாக்கத்து நம்பி -ரகஸ்யார்த்தம் கேட்க -ஸ்வப்னத்திலே -அருளி —தூங்கிண்டே கால ஷேபம் கேட்ப்பாராம்
-மீதி இரண்டு ஆற்றங்கரை நடுவில் கேட்டு -உபய காவேரி வட தென் காவேரி நடுவில் காட்டு அழகிய சிங்கர் சந்நிதி –
கூற நாராயண ஜீயர் -யானைகள் தீங்கு வராமல் இருக்க சிங்க பெருமாள் பிரதிஷ்டை செய்து அருளினாராம் –
பிள்ளை லோகாச்சார்யார் -தொடர்ந்து அருள -அவரோ நீர் -என்றாராம் –
மா முனிகள் வியாக்யானம் பண்ணும் படி அருளிய தீக்ஷை -மஹா கிருபாய -மத் ரஷா தீக்ஷை

—————————————————————————–

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரேண ப்ரீத்யா சர்வாபி ஷிணே
அதீதார்ச்சாவ்ய வஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்–11

அர்ச்சாவதார சமாதியைக் கடந்து
திருக் கச்சி நம்பிகளோடு
பரம ப்ரீதி யுடன் வார்த்தையாடி யருளின
தேவப் பெருமாளுக்கு பல்லாண்டு
நம்பிகள் -ஆறு வார்த்தை பிரசித்தம் இறே
அநவரதம்-வார்த்தை யாடினது -என்பதால் சர்வாபி பாஷிணே-என்கிறார்-

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரேண -திருக் கச்சி நம்பி உடன்
ப்ரீத்யா சர்வாபி ஷிணே-அன்புடன் -பேசி –
பணிவிடை -ஆலவட்டம் –காவேரி அரங்கன் -குளிர் அருவி வேங்கடம் -இவன் தானே அக்னி குண்டத்தில் -இருந்து –
கூரத் ஆழ்வான் திரு மாளிகை கதவு மணி சப்தம் -ஆறு வார்த்தை அஹம் ஏவ பரத்வம்
பேதமே தர்சனம் -உபாயம் திருவடி பிரபத்தி -அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம்
தேகாவசேனா முத்தி –
பூர்ணாஸ்சார்யம் ஸமாஸ்ரய –
கேசவ சோமயாஜுலு கேட்க புத்ர காமாஷ்ட்டி யாகம் திரு வல்லிக் கேணியில் செய்ய சொல்லி அருளினார் –
வீசினேன் -பேசினேன் -மோக்ஷம் ஆச்சார்ய சம்பந்தம் அடியாக தானே -ஆறு மாச காலமாவது கைங்கர்யம் செய்தே-
பேசினவர்க்கு யார் கைங்கர்யம் கொடுப்பார் -அதனால் -இடையராக திருக் கோஷ்ட்டியூர் நம்பிக்கு கைங்கர்யம் செய்தாராம் –
அதீதார்ச்சாவ்ய வஸ்தாய- ஹஸ்த்யத்ரீசாய மங்களம்-அர்ச்சை நிலையை குலைத்து பேசினீரே பல்லாண்டு

———————————————————————-

அஸ்து ஸ்ரீஸ்தந கஸ்தூரீ வாஸநா வாஸி தோரஸே
ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதாய தேவ ராஜாய மங்களம்—12-

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து
ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் என்று உரையீரே -என்று
ஆண்டாளைப் போலே பாரிக்க வேண்டாமல்
பெரிய பிராட்டியார் அநவரதமும் திரு மார்போடே
அணைந்து இருக்கையாலே
அளளுடைய திருமுலைத் தடத்தில் சாத்தின கஸ்தூரிக்குப் பின்
நறுமணம் கமழா நின்ற
திரு மார்பை யுடையவரான
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதற்குப்
பல்லாண்டு-

ஸ்ரீ ஹஸ்தி கிரி நாதாய தேவ ராஜாய மங்களம்-திரு மார்பில் சந்தனம் அவள் இடம்
அவள் திரு மார்பில் கஸ்தூரி இவன் இடம்

———————————————————————————-

மங்களா சாசன பரை மாதாசார்ய புரோகமை
சர்வைஸ் ச பூர்வைரா சார்யை சத்க்ருதாயாஸ்து மங்களம் -13

பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட
அஸ்மத் ஆச்சார்யர் முதலான
சகல பூர்வ ஆச்சார்யர்களாலும் போற்றப் பெற்ற பெருமானுக்கு
பல்லாண்டு –

முன்னோர்கள் உடைய முறைமையை பின் பற்றியே அடியேனும்
இந்த ஸ்துதியினால்
பல்லாண்டு பாடினேன் -என்று
அருளிச் செய்து தலைக் கட்டினார் ஆயிற்று-

—————————————————————-

மணவாள மா முனிகள் திவ்ய தேச யாத்ரை யடைவில்
முதல் பர்யாயமாக
பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளின போது
அருளிச் செய்தவை –

ஸ்ரீ மத் த்வாரம் மஹத்தி பலி பீடாக்ர்யம் பணீந்த்ராஹ் ரதம்
கோபி நாம் ரமணம் வ்ராஹவபுஷம் ஸ்ரீ பட்ட நாதம் முநிம்
ஸ்ரீ மந்தம் சடவைரிணம் கலிரிபும் ஸ்ரீ பக்திசாரம் முநிம்
பூர்ணம் லஷ்மண யோகிநம் முநிவரான் ஆத்யான் அத த்வாரபௌ
ஸ்ரீ மன் மஜ்ஜ ந மண்டபம் சரசி ஜாம் ஹேதீச போகீஸ்வரரௌ
ராமம் நீல மணிம மஹா ந சவரம் தார்ஷ்யம் நருசிம்ஹாம் ச்ரியம்
ஸே நாநயம் கரி பூதரம் ததுபரி ஸ்ரீ புண்ய கோட்யாம் ஹரிம்
தன் மத்யே வரதம் ரமா சஹசரம் வந்தே ததீயைர் வ்ருதம்

1-திருக் கோயில் வாசல்
2-மஹா பலி பீடம்
3-திரு வநந்த புஷ்கரணி -அநந்த சரஸ
4-வேணு கோபாலன்
5- ஞானப் பிரான்
6- பட்டர் பிரான் -பெரியாழ்வார்
7-நம் ஆழ்வார்
8-கலியன்
9-திருமழிசைப் பிரான்
10-எம்பெருமானார்
11-முதல் ஆழ்வார்கள்
12-த்வார பாலகர்கள்
13- அபிஷேக -திருமஞ்சன -திரு மண்டபம்
14-பெரும் தேவித் தாயார்
15-திருவாழி ஆழ்வான்
16- திரு வநந்த வாழ்வான்
17-சக்கரவர்த்தி திருமகன்
18- கருய மாணிக்கப் பெருமாள்
19-திரு மடைப் பள்ளி
20-பெரிய திருவடி
21- அழகிய சிங்கர்
22-சூடிக் கொடுத்த நாச்சியார்
23- சேனாபதி ஆழ்வான்
24- திருவாத்தி மா மலை
25- அதன் உச்சியில் புண்ய கோடி விமானத்தில்
அடியார்கள் புடை சூழ காட்சி தரும்
பெரும் தேவி மணாளன் பேரருளாள்ன்
ஆக இவர்களை எல்லாம் தொழுது மங்களா சாசனம் செய்து அருளின படி சொல்லும் ஸ்லோஹம்-

———————————————————————–

ஸ்ரீ காஞ்சி புரியில் உள்ள அஷ்டாதச திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் செய்து அருளின ஸ்லோகம்

தேவாதீச நருசிம்ஹா பாண்டவ மகாதூத பிரவாலப்ரபான்
ஸ்ரீ வைகுண்டபதிம் த்ரிவிக்ரமஹரிம் நீரேசமேகேச்வரௌ
நீலவ்யோமவிபும் மகோரகஹரிம் ஜ்யோத்ஸ் நேந்து முகுந்தாஹ்வையம்
காமா வாசபதிம் நருகேசரிவரம் தீபப்ரகாசப்ரபும்
ஸ்ரீ யுக்தாஷ்ட புஜாச்பதேச மநகம் ஸ்ரீ மத்ய தோக்தக்ரியம்
இத்யஷ்டா தச திவ்ய மங்கள புர்தேவான் சரோயேகிநா
ஸாகம் நிஸ் துல காஞ்ச்ய பிக்ய நகரீ நாதான் நமா மஸ் சதா

1-தேவப்பெருமாள்
2-அழகிய சிங்கர்
3-பாண்டவ தூதர்
4-பவழ வண்ணர்
5-வைகுண்ட நாதன் -பரமேஸ்வர விண்ணகரம்
6-உலகளந்த பெருமாள்
7-நீராகத்தான்
8-காரகத்தான்
9-கார் வானத்துள்ளான்
10-ஊரகத்தான்
11-நிலாத் திங்கள் துண்டத்தான்
12-கள்வர்
13-உள்ளுவார் உள்ளத்தான்
14-முகுந்தப் பெருமாள்
15- வேளுக்கை -ஆள் அழகிய சிங்கர்
16-விளக்கொளி எம்பெருமான்
17-அட்ட புயகரத்தான்
18-சொன்ன வண்ணம் செய்த பெறுமா -திரு வேக்கா
ஆக 18 பெருமாள்களையும்
பொய்கை ஆழ்வாரையும்
எஞ்ஞான்றும் இறைஞ்சுகிறோம்
என்றது ஆயிற்று-

——————————————————–

முக்தகம் –

ஆளவந்தார் பெருமாள் கோயிலுக்கு எழுந்து அருளின காலத்தில்
யாதவ பிரகாசர் பக்கலிலே வேதாந்தம் அதிகரித்துக் கொண்டு இருந்த உடையவர்
விரைவில் சித்தாந்த ப்ரவர்த்தகராக ஆகவேணும் என்று
தேவப் பெருமாள் திருவடிகளிலே
இந்த ஸ்லோஹம் அனுசந்தான பூர்வகமாக
பிரபத்தி பண்ணினார் என்றும்
அப்போதாக அவதரித்த ஸ்லோஹம் –

யஸ்ய பிரசாத கல்யா பதிர ச்ருணோதி
பங்கு ப்ரதாவதி ஜாவேந ச வக்தி மூக
அந்த ப்ரபச்யதி ஸூ தம் லபதே ச வந்த்யா
தம் தேவ மேவ வரதம் சரணம் கதோஸ்மி-

பேரருளாள பெருமாள் உடைய அனுக்ரஹ லேசத்தினால்
செவிடனும் செவி பெறுவான்
முடவனும் விரைந்தோடுவான்
ஊமையும் பேச வல்லவனாவான்
குருடனும் காணப் பெறுவான்
மலடியும் மக்கள் பெறுவாள்
இப்படிப் பட்ட அனுக்ரஹம் செய்தருள வல்ல
பேரருளாளப் பெருமாளைத் தஞ்சமாகப் பற்றுகின்றேன்
என்றவாறே-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத பேரருளாளப் பெருமாள் திரு வடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம் -ஸ்ரீ பிரதிவாத பயங்கர அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்தது –

August 25, 2014

கமலா குச சூசுக குங்குமதோ

நியதாருணி தாதுல நீலத நோ
கமலாய தலோசன லோகபதே

விஜயீ பவ வேங்கட சைலபதே–1

———————————————————————————————————–

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

—————————————————————————————————————————————————————————–

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக

பிரமுகாகில தைவத மௌலிமணே
சரணாகத வத்சல சார நிதே

பரிபாலய மாம் வருஷ சைலபதே————————2-

——————————————————————————————————————————–

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூ க்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொள் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

————————————————————————————————————————————————————————————

அதி வேலதயா தவ துர் விஷ ஹை

அநு வேலக்ருதரை பராதசதை
பரிதம் த்வரிதம் வருஷ சைலபதே

பரயா க்ருபயா பரிபாஹி ஹரே ——3-

——————————————————–
திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சாஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேழம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இ றே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

——————————————————————————————————————————————————————————————

அதி வேங்கட சைல முதாரமதே

ஜநதா பிமத அதிக தாந ரதாத்
பரதேவதயா கதிதாந் நிகமை

கமலா தயிதான் ந பரம் கலயே—–4-

——————————————————————————————————-

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ
ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

———————————————————————————————————————————————————————————————-

கல வேணுரவ அவச கோபவதூ

சத கோடி வ்ருதாத் ஸ்மர கோடி சமாத்
பிரதிவல்லவி ச் அபிமதாத் ஸூக்ரு தாத்

வஸூ தேவ ஸூதாத் ந பரம் கலயே -5-

—————————————————————————————————————————————-

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ச்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு எத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புல்லின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வா ஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூ க்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————————————————————————————————————————————————————————————

அபிராம குணாகர தாசரதே

ஜகத் ஏக தநுர்தர தீரமதே
ரகுநாயக ராம ரமா ஈச விபோ

வரதோ பவ தேவ தயா ஜலதே—-6

———————————————————————————————————
இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ச்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆகவேணும்-

———————————————————————————————————————————————————————————————-

அவநீ தனா கமநீயவரம்

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே—7

—————————————————————————————————

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மனவளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் சூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

————————————————————————————————————————————————————————————

ஸூ முகம் ஸூ ஹ்ருதம் ஸூ லபம் ஸூ கதம்

ஸூ குணம் ச ஸூ சாய மமோக சரம்
அபஹாய ரகூத்வம் அநயம் அஹம்

ந கதஞ்சன  கதஞ்சன ஜாது பஜே—————————-8-

————————————————————————————————————————————
ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூ ஹ்ருதம் –
சர்வ பூத ஹூ ஹ்ருத்தானவனும்

ஸூ லபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூ கதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூ குணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடிஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

——————————————————————————————————————————————————————————————

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச————————-9-

—————————————–

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

————————————————————————————————————————————————————————————

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம

ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம்

ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேச——————–10-

——————————————————–
பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத்திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூ க்தியாகுமே-

————————————————————————————————————————————————————————————

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரதைவதம் ந

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந

ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

—————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பரதேவதையும்
பெரும் செல்வமும்
குலதேவதையும்
பரமகதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————————————-

அஜ்ஞாநிநா மயா தோஷான்

அசேஷாந விஹிதாந ஹரே
ஷமஸ்வ தவம் ஷமஸ்வ தவம்

சேஷ சைல சிகாமணே —-13

——————————————-

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

———————————————————————————————————————————————————————————————————–

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர் விஷ்ணோ பராம் ப்ரேயசீம்
தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம்
பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் சரியம்
வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்—–14-

—————————————————————————————————————-

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூ கதிக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் சரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலக்குக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக்கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

—————————————————————————————————————————————————————————————————
ஸ்ரீ பிரதிவாதிபயங்கர அண்ணன் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரம் -ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தவை —

August 24, 2014

ஸ்ரீபராசர பட்டார்யா ஸ்ரீரெங்கேச புரோஹித
ஸ்ரீவத்சாங்க ஸூதா ஸ்ரீமான் ஸ்ரேயசே மேஸ்து பூயஸே-

————————————————————————————————————————————————————–

சப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே
காவேரி மத்யதேச ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே
நித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ச்வ வினயச்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்——————-1-

——————————————————————————————————————

சப்த பிரகார மத்யே –
மாட மாளிகை சூழ் திரு வீதியும்
மன்னு சேர் திரி விக்ரமன் வீதியும்
ஆடல் மாறன் அளகங்கன் வீதியும்
ஆழி நாடன் அமர்ந்துறை வீதியும்
கூடல் வாழ் குலசேகரன் வீதியும்
குலவு ராச மகேந்தரன் வீதியும்
தேடு தன்மைவன் மாலவன் வீதியும்
தென்னரங்கர் திரு வாவரணமே

சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே –
தாமரை முகுளம் போல் விளங்குகின்ற பிரணவாகார ஸ்ரீ ரெங்க விமானத்திலே
காவேரி மத்யதேச –
கங்கையில் புனிதமாய காவிரி நடுபாட்டில்

ம்ருதுதர பணிராட் போக பர்யங்கே பாகே –
அரவரசப் பெரும் சோதி அனந்தன் என்னுமணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி –

நித்ரா முத்ரா பிராமம் –
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் –
ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற –

கடி நிகட சிர பார்ச்வ வினயச்த ஹஸ்தம் –
அழகு பொலிந்தவரும் திருவரை அருகில் ஒரு திருக் கையும்
திரு முடி அருகில் மற்றொரு திருக்கையும் வைத்து இருப்பவரும் –
திரு அபிஷேகத்தைத் தொட்டுக் காட்டி அருளி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் ஈஸ்வரன் இவனே என்று காட்டி அருளி
வலத் திருக்கை பரத்வத்தைக் காட்டி அருளி
திரு முழம் தாள் அளவும் நீட்டிய திருக்கை
இத் திருவடி இணையே தாழ்ந்தார்க்கு புகலிடம் என்று காட்டி அருளி
இடைத் திருக் கை சௌலப்யம் காட்டி அருளி-
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்-
சீர் பூத்த செழும் கமலத் திருத் தவிசின் வீற்று இருக்கும் நீர் பூத்த திரு மகளும் மகளும்
அடி வருடப் பள்ளி கொள்ளும் பரமனைத் தாம் இடை வீடின்றிப் பாவனை செய்யும் பரிசை இதனால்
அருளிச் செய்தார் ஆயிற்று –
வடிவினை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையெனும் பிடிக்க
நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
-என்ற அபிசந்தி விசேஷத்தினால் இந்த விசேஷணம் இட்டு அருளின படி –

ரங்கராஜம் பஜேஹம்-
ஸ்ரீ ரெங்க நாதரை நான் சேவிக்கின்றேன்-

————————————————————————————————————————————————————————-

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் கர்ணாந்த லோலேஷணம்
முகதஸ் மேரம நோஹரா தர தளம் முக்தா க்ரீடோஜ்ஜ்வலம்
பச்யன்மா நஸ பச்யதோ ஹரருச பர்யாய பங்கே ருஹம்
ஸ்ரீ ரங்காதீபதே கதா நு வதநம் சேவேய பூயோப் யஹம்—–2

—————————————————————————————————
கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் –
கஸ்தூரிக் காப்பினால் அமைந்த திவ்ய ஊர்த்வ புண்டர திலகம் உயையதும்

கர்ணாந்த லோலேஷணம் –
திருச் செவியின் அளவும் சுழலமிடா நின்ற திருக் கண்களை யுடையதும் –
கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய திருக்கண்கள் -யுடையதும்

முகதஸ் மேரம நோஹரா தரதளம்-
வ்யாமோஹமே வடிவெடுத்தும் புன்முறுவல் செய்து கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்ற திரு வதரத்தை யுடையதும் –
அர்ச்சாவதார சமாதியைக் கடந்து விம்மி–அவ்யக்த மதுர மந்தஹாச விலாசம் விளங்கும் திரு அதரம்

முக்தா க்ரீடோஜ்ஜ்வலம் –
முத்துக் க்ரீடத்தினால் ஒளி பெற்று விளங்குவதும் –

பச்யன்மா நஸ பச்யதோ ஹரருச –
கண்டார் நெஞ்சைக் கவரும் அழகு வாய்ந்த –

பர்யாய பங்கே ருஹம் –
தாமரையே என்னலாம் படி யுள்ளதுமான –

ஸ்ரீ ரங்காதீபதே கதா நுவதநம் சேவேய பூயோப் யஹம் –
திரு முக மண்டலத்தை
அடியேன் மறுபடியும் என்று சேவிப்பேன் –

அந்தோ என் விடாய் தீருவது என்றைக்கு –
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக் கண் வளரும்
கடல் வண்ணர் க்கமலக் கண்ணும் ஒளிமதிசேர் திரு முகமும் கண்டு
என்னுள்ளம் மிக என்று கொலோ வுருகு நாளே -குலசேகரர்
குளிர்ந்த திரு முகத்தையும் திரு நாமத் தழும்பையும் முறுவலையும் இழக்க வென்றால் அடியேன் அஞ்ச மாட்டேனோ
அங்கே போனால் ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகமும் நம் பெருமாள் திரு முக மண்டலம் போலே குளிர்ந்து
இருந்தது இல்லை யாகில் முறிச்சுக் கொண்டு வருவதாக நினைத்து இருந்தேன் –
சொட்டை நம்பியும் அருளினாரே-

———————————————————————————————————————————————————————————————————–

கதாஹம் காவேரி தட பரிசரே ரங்க நகரே
சயானம் போகீந்த்ரேசதமகமணி ச்யாமல ருசிம்
உபாசீன க்ரோசன் மதுமதன நாராயண ஹரே
முராரே கோவிந்தேத்ய நிசமப நேஷ்யாமி திவசான்—-3-

—————————————————————————————————–

கதாஹம்
காவேரி தட பரிசரே ரங்க நகரே
திருக் காவிரிக் கரை யருகில்
திரு வரங்க மா நகரில்

சயானம் போகீந்த்ரே –
திரு வநந்த வாழ்வான் மீது பள்ளி கொண்டு அருளா நின்ற

சதமகமணி ச்யாமல ருசிம் –
சதமகன் -இந்த்ரன்
மணி -ரத்னம்
இந்திர நீல ரத்னம் போன்று ச்யாமளமான காந்தியை யுடைய
பச்சை மா மலை போல் மேனி
பச்சை நீலம் கருமை -கவி சரணியில் பர்யாயம்-

உபாசீன க்ரோசன்
மதுமதன நாராயண ஹரே முராரே கோவிந்தேத்ய
நிசமப நேஷ்யாமி திவசான்
பெரிய பெருமாளை பணிந்து
திரு நாமங்களை இடைவிடாது சொல்லிக் கதறி
அடியேன் எப்போது
ஜீவித சேஷமான நாட்களை எல்லாம் போக்குவேன்-

—————————————————————————————————————————————————————————

கதாஹம் காவேரி விமல சலிலே வீத கலுஷ
பவேயம் தத்தீரே சரம முஷி வசேயம் கநவநே
கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்
பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம்————————4-

———————————————————————————————————–

கதாஹம் காவேரி விமல சலிலே
திருக் காவேரியில் நிர்மலமான தீர்த்தத்திலே குடைந்தாடி –
தெண்ணீர் பொன்னி –
தெளிவிலாக் கலங்கள் நீர் சூழ் –
ஆறுகளுக்கு கலக்கமும் தேவும் சம்பாவிதமே
விமல சலிலே –என்று -தெளிவையே அனுபவிக்கிறார் இங்கே –

வீத கலுஷ –
சகல கல்மஷங்களும் அற்றவனாக –
விரஜா நதி ஸ்நானத்தாலே போக்க வேண்டிய கல்மஷமும் இங்கே தொலையும் -என்க-

பவேயம் தத்தீரே -சரம முஷி வசேயம் கநவநே –
விடாய் தீர்க்கும் சோலைகளிலே
எப்போது வசிக்கப் பெறுவேன் —
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை –

கதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம் –
மிகப் புனிதமும்
பெருமை தன்கியதுமான
மணல் குன்றிலே -ஸ்ரீ ரங்கத்திலே-

பஜேயம் ரங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –
அரவணை மேல் பள்ளி கொண்டு அருளா நிற்றவரும்
தாமரை போன்ற திருக் கண்களை யுடையவரும்
கல்யாண குணநிதியுமான
ஸ்ரீ ரெங்க நாதரை
எப்போது சேவிக்கப் பெறுவேன்-

——————————————————————————————————————————————————————–

பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிகத நீரோப கண்டாம்
ஆவீர்மோத ஸ்திமித சகுநா நூதித ப்ரஹ்ம கோஷாம்
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம்
பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம் ந–5-

———————————————————————————————-

பூகீ கண்ட த்வயஸ ஸரஸ ஸ்நிகத நீ ர –
பாக்கு மரங்களின் கழுத்து அளவாக பெருகுகின்றதும் –
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் இ றே

உப கண்டாம் ஆவீர்மோத ஸ்திமித சகுநாநூதித ப்ரஹ்ம கோஷாம்-
தேனோடு கூடினதும்
சிநேக யுக்தமுமான
தீர்த்தத்தை சமீபத்திலே யுடையதாய்
மகிழ்ச்சி யுண்டாக்கி
ச்திமிதமாய் இருக்கின்ற பறைவைகளினால்
அநு வாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை யுடையதாய் –

மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ருஞ்ச்யமாந அபவர்க்காம் பச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்கதாம்ந
வழி நடப்பவர்களின் கூட்டங்களினால்
வழிகள் தோறும் திரட்டி எடுத்துக் கொள்ளப் படுகிற
மோஷத்தை யுடையதான –
முக்தி கரஸ்தம் -என்றபடி
கோயில் வாசமே மோஷம் என்பார்களே-

——————————————————————————————————————————————————————————

ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம் —6-

———————————————————————————————————

ந ஜாதுபீதாம்ருத மூர்ச்சிதா நாம் நா கௌகசாம் நந்தந வாடிகாஸூ
ரங்கேஸ்வர த்வத்புரமாச்ரிதா நாம் ரத்யா சுநாம் அந்யதாமோ பவேயம்

ஸ்ரீ ரெங்க நாதனே
தேவேந்த்ரனது சோலைப் புறங்களிலே அம்ருத பானம் பண்ணி மயங்கிக் கிடக்கிற
அமரர்களுள் ஒருவனாக ஒருகாலும் ஆகக்
கடவேன் அல்லேன்
பின்னியோ என்னில்
தேவரீர் யுடைய ஸ்ரீ ரெங்க நகரியைப் பற்றி வாழ்கிற
திரு வீதி நாய்களுள்
ஒரு நாயாகப் பிறக்கக் கடவேன் –

இந்திர லோகம் ஆலும் அச்சுவை பெறினும் வேந்தன்
மறு பிறவி அநிஷ்டம் இல்லை –

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்
திவ்ய தேச வாசத்துக்கு அனுகூலங்களாக பெறப் பெறில் குறை இல்லை –

வாய்க்கும் குருகைத் திரு வீதி எச்சிலை வாரி யுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தாய் -என்னக் கடவது இ றே-

———————————————————————————————————————————————————————————

அசந்நிக்ருஷ்டசஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர்
மித்த்யாபவாதேன கரோஷி சாந்திம்
ததோ நிக்ருஷ்டே மயி சந்நிக்ருஷ்டே
காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி————————-7-

——————————————————————————————————————————–

ஸ்ரீ ரெங்க நாதரே
உண்மையில் உமது அருகில் வராத ஒரு நாயின் சம்பந்தமான பொய்யான அபவாதத்தினால்
சாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்
அந்த நாயினும் கடை கெட்டவனான அடியேன் வெகு சமீபத்தில் வந்திருக்கும் போது
என்ன சாந்தி செய்வீர்

நாயினும் கடை கெட்ட அடியேன் -நைச்ச்ய பாவம் -ஐதிகம்-

—————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞஜந கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ஸ பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முநி————————8-

————————————————————————————————————————————

எம்பெருமானார் யுடைய திவ்ய தேச யாத்ரையைப் பற்றி
நித்யானுசந்தானம் செய்வதற்காக
பட்டர் அருளிச் செய்து இருக்கிற முக்த ஸ்லோஹம் இது –

தென்திருவரங்கம்
கரிசைலம் என்கிற -திருவாத்தி மா மலை
அஞ்சன கிரி என்கிற திருவேங்கட மலை
கருடாசலம் என்கிற திரு நாராயணபுரம்
சிம்ஹாசலம்
ஸ்ரீ கூர்மம்
புருஷோத்தமம் என்கிற ஜகந்நாதம்
ஸ்ரீ பத்ரிகாச்ரமம்
நைமிசாரண்யம்
த்வாரகை
பிரயாகை
வடமதுரை
அயோதியை
கயை
புஷ்கரம்
சாளக்ராமம் –
இந்த திவ்ய தேசங்களில்
எம்பெருமானார் உகந்து வர்த்தித்த படியை அருளிச் செய்கிறார்-

——————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ பராசுர பட்டர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ஆழ்வார்கள் திருவவதார மகிமை –

August 24, 2014

ஸ்ரீ பொய்கை ஆழ்வார்
துவாபர யுகம் –சித்தார்த்தி வருஷம் –ஐப்பசி மாசம் –சுக்ல பஷ அஷ்டமி -செவ்வாய் கிழமை
திருவோணம் நஷத்ரம்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் அம்சம்
ஸ்ரீ காஞ்சி பொய்கையில் திருவவதாரம்

ஸ்ரீ பூதத்தார்
அடுத்த நாள் -ஸ்ரீ திருக்கடல் மல்லையில் -அவிட்டம் நஷத்ரம் -நீலோற்பல மலரில்
கதையின் அம்சமாக
திருவவதாரம்

ஸ்ரீ பேயாழ்வார்
அடுத்த நாள் சதயம் நஷத்ரம் -நந்தகம் அம்சம்
ஸ்ரீ திரு மயிலையில் கிணற்றில்-நெய்தல் மலரான -செவ்வல்லிப் பூவில் திருவவதாரம்

————————————————————–

ஸ்ரீ திரு மழிசை பிரான் –
பார்க்கவா முனிவர் -கனகாங்கி தேவமாது -கரு ஆண் குழவி யாக மாற
திருவாளன் -பிரம்பு அறுக்கும் வேளாளன் –
சேஷமான பாலை உட் கொண்ட மனைவி பெற்ற கனி கண்ணன் –
லோகாயுதம் பௌத்தம் சமணம் –சிவ வாக்கியர் பெயர்
ஸ்ரீ பேயாழ்வார் நல்வழிப் படுத்த -ஸ்ரீ பக்தி சாரர்

கணிகண்ணன் பாடிய பாடல்
ஆடவர்கள் எங்கன் அன்று ஒழிவார் வெக்காவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா
நீடியமால் நின்றான் இருந்தான் கிடந்தான் இது வன்றோ
மன்றார் பொழில் கச்சி மாண்பு –

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
ஸ்ரீ ஓரிரவிருக்கை
ஸ்ரீ கிருஷ்ணா நாம் வர்ஹீனாம் நக நிர்ப்பின்னம் -விட்ட இடம் ஸ்ரீ பெரும் புலியூரில் காட்டி அருளி

அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவது என்கொலோ
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரம் கொள் கையனே சடங்கர் வாய் அடங்க உட்கிடந்த வண்ணமே
புறம் பொசிந்து காட்டிடே –

சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம்
பாக்கியத்தால் செங்கண் கரியானை சேர்ந்தோம் யாம் தீதிலமே எங்கட்கு அரியது ஓன்று இல்

உறையிலிடாதவர்

—————————————————-

ஸ்ரீ மதுர கவி ஆழ்வார்
துவாபர யுகத்தில் -8,63,779-
ஈஸ்வர வருஷம்
சித்திரை சித்திரை
குமுதர் கருடர் அம்சம்

சேமம் குருகையோ செய்ய திருப் பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ -தாமம்
துளவமோ வகுளமோ தோள் இரண்டோ நான்கும்
உளவோ பெருமான் உனக்கு

ஈயாடுவதோ கருடற்கு எதிரே யிரவிக்கெதிர் மின் மினி யாடுவதோ
நாயாடுவதோ வுறுமிப் புலி முன் நரி கேசரி முன் நடையாடுவதோ
பேயாடுவதோ வழகூர்வசி முன் பெருமான் வகுளா பரண் நன் அருள் கூர்ந்து
ஓவாது உரை யாயிரமா மறையின் ஒரு சொல் போருமோ வுலகில் கவியே

—————————————————————-

ஸ்ரீ நம் ஆழ்வார் –
காரியார் -உடைய நங்கையார் -ஸ்ரீ திரு வண் பரிசாரம்
கலி -43 நாள்
பிரமாதி வருஷம் வைகாசி மாதம் -பௌர்னமி வெளிக் கிழமை -விசாகம் -ஸ்ரீ திருக் குருகூர்
ஸ்ரீ திருக் குறுங்குடி நம்பியே –திருமால் அம்சம் கௌஸ்துபம் அம்சம் -ஸ்ரீ விஷ்வக் சேனர் அம்சம்
ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் -திருப் புளிய மரம்
ஸ்ரீ சடகோபர் -ஸ்ரீ வகுளா பரணர் -ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் பரிசாக மகிழ மாலை அருள –
ஸ்ரீ பராங்குசன்
ஸ்ரீ நம் சடகோபனைப் பாடினையோ -நம் ஆழ்வார்

——————————————————————

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் –
கலி –28 வருஷம் -பராபவ வருஷம் -மாசி மாதம் –சுக்ல பஷம் –துவாதசி -வியாழக் கிழமை –புனர்வசு நஷத்ரம்
ஸ்ரீ திருவஞ்சிக் களத்தில் –
கோழிக் கூட்டரசன் திருடவிரதன் –கௌஸ்துபம் அம்சம் –
மகன் -திருடவிரதன்
மகள் இளைய குலசேகர வல்லி-ஸ்ரீ நம் பெருமாளுக்கு திரு மணம்-

———————————————————————

ஸ்ரீ பெரியாழ்வார் –
கலி-47-வருஷம் -குரோதன வருஷம் –ஆனி மாதம் –சுக்ல பஷம் –ஏகாதசி –ஞாயிற்றுக் கிழமை -சுவாதி நஷத்ரம் —
ஸ்ரீ கருட அம்சம்-வேயர் குலம் –ஸ்ரீ புதுமையாருக்கும் ஸ்ரீ முகுந்தாசார்யருக்கும் -ஸ்ரீ வில்லிபுத்தூரில்
புத்ரராய் திருவவதரித்தார் –

————————————————————-

ஸ்ரீ ஆண்டாள் –
கலி -98 வருஷம் -நள வருஷம் -ஆடி மாதம் –சுக்கில பஷம் –சதுர்த்தசி –செவ்வாய் கிழமை –பூர நஷத்ரம் –
ஸ்ரீ பூமிப் பிராட்டி அம்சமாய் -ஸ்ரீ வில்லி புத்தூரில்
திருவவதாரம்

———————————————————————————

ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
ஸ்ரீ திரு மண்டங்குடி
மார்கழி கேட்டை
ஸ்ரீ வைஜயந்தி வனமாலை அம்சம்
முன்குடுமி சோழிய பிராமணர்
விப்ர நாராயணர் -தேவதேவி

———————————————————————————–

ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் –
ஸ்ரீ உறையூர்
கார்த்திகை ரோகினி
திரு மறு ஸ்ரீ வத்சம் அம்சம்
அந்தணன் காலனியில் நெல் கதிரில்
பாணர் எடுத்து வளர்க்க

—————————————————————————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்
ஸ்ரீ திருவாலி -ஸ்ரீ திருநகரி -ஸ்ரீ திருக் குறையலூர்
கள்ளர் குடி -கலி -398- நள வருஷம்
பூர்ணிமை வியாழக் கிழமை கிருத்திகை நஷத்ரம்
நீலன் –
ஆலிநாடன் அருள்மாரி அரட்ட முக்கி அடையார் சீயம்
கொங்கு மலர்க் குழலியர் வேள்
மங்கை வேந்தன்
கொற்ற வேல் பரகாலன்
கலியன்

ஈயத்தால் ஆகாதோ விரும்பினால் ஆகாதோ பூயத்தான் மிக்க தொரு பூதத்தால் ஆகாதோ
தேயத்தே பித்தளை நல செம்புகளால் ஆகாதோ
மாயப் பொன் வேண்டுமோ மதித்து என்னப் பண்ணுகைக்கே

——————————————————————-

ஸ்ரீ மணவாள மா முனி அருளியது –

அணைத்த வேலும் தொழுத கையும் அழுந்திய திரு நாமமும்
ஓம் என்ற வாயும் உயர்ந்த மூக்கும் குளிர்ந்த முகமும்
பரந்த விழியும் பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
கருண்ட குழலும் வடிந்த காதும் அசைந்த காது காப்பும்
தாழ்ந்த செவியும் சரிந்த கழுத்தும் அகன்ற மார்பும்
திரண்ட தோளும் நெளிந்த முதுகும் குவிந்த இடையும்
அல்லிக் கயிறும் அழுந்திய சீராவும் தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனி மாலையும் தளிரும் மிளிருமாய் நிற்கிற நிலையம்
சாற்றிய திருத் தந்தையும் சதிரான வீரக் கழலும்
தஞ்சமான தாளிணையும் குந்தியிட்ட கணைக்காலும்
குளிர வைத்த திருவடி மலரும் வாய்த்த மணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும் வாடினேன் வாடி என்று
வாழ்வித்து அருளிய நீலக் கலிகன்றி மருவலர் தம் உடல் துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே

உறை கழித்த வாளை ஒத்த விழி மடந்தை மாதர் மேல்
உருக வைத்த மனம் ஒழித்து இவ்வுலகளந்த நம்பி மேல்
குறைய வைத்து மடலெடுத்த குறையலாளி திருமணம்
கொல்லை தன்னில் வலி பறித்த குற்றமற்ற செங்கையான்
மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க அவன் முனே
மடியொடுக்கி மனமடக்கி வாஉபுதைத்து ஒன்றலார்
கரை குளித்த வேல் அனைத்து நின்ற விந்த நிலைமை என்
கண்ணை விட்டகன்றிடாது கலியன் ஆணை ஆணையே

காதும் சொரி மூக்கும் கையும் கதிர் வேலும்
தாது புனை தாளிணையும் தனிச் சிலம்பும்
நீதி புனை தென்னாலி நாடன் திருவழகைப் போலே
என் ஆணை ஒப்பார் இல்லையே

வேல் அணைத்த மார்பும் விளங்கு திரு வெட்டு எழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச் செவியும்
தாளிணைத் தண்டையும் தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கும் என் கண்

இதுவோ திருவரசு இதுவோ திருமணம் கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோ தான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்த விடம்

———————————————————————

ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி
தாழ்வாதுமில் குரவர் வாழி -ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸப்த காதை —7-தீங்கேதும் இல்லாத் தேசிகன்—பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

August 23, 2014

தீங்கேதும் இல்லாத் தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் -ஓங்காரத்
தேரின் மேல் ஏறிச் செழும் கதிரினூடு போய்ச்
சேருவரே யந்தாமம் தான்—-7-

————————————————————————-

அவதாரிகை –

பல படியாலும் ஆச்சார்யன் பக்கல் பிரேமம் இல்லாதவனுக்கு
அதபதனம் ஒழிய உஜ்ஜீவனம் இல்லை என்று சொல்லா நின்றீர் –
ஆச்சார்யா ப்ரேமம் கனத்து இருக்குமவனுக்கு
உஜ்ஜீவனம் உண்டோ என்ன
தாளிணையை வைத்தவவரை நீதியால் வந்திப்பார்க்கு உண்டு ஆழியான் -என்று
தத்வ தர்சிகளாய் இருப்பாரும் அறுதி இட்டார்கள் ஆகையால்
இப்படி இருக்குமவனுக்கு உஜ்ஜீவனம் யுண்டு என்று சொல்லா நின்று கொண்டு
இப்பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் –

—————————————————————————–

வியாக்யானம் –

தீங்கேதும் இல்லாத் தேசிகன் தன் சிந்தைக்குப்-
தப்பில் குருவருளால் -என்றும்
தாழ்வாதுமில் குரவர்-என்றும்
நாமக்ரோத விவர்ஜிதம் -என்றும்
அநகம்-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்வாச்சார்யன் பக்கல் பிரேமம் அற்று இருக்கை யாதல்
தன் பக்கல் சில மினுக்கங்களை நினைத்து இருக்கை யாதல்
சிஷ்யனுக்கு ஞான உபதேசம் பண்ணும் இடத்தில் சாபேஷனாய் இருக்கை யாதல்
கிராம குலாதிகளை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை தாழ நினைக்கை யாதல்
ப்ராபகாந்தரங்களில் அன்வயமாதல்
பிராப்யாந்தரங்களில் ருசி யாதல் –
ஞான அனுஷ்டானங்களில் குறை யாதல்
ஆத்மா குணங்களில் வைகல்யமாதல்
இவை ஆகிற பொல்லாங்கு ஒன்றும் இன்றிக்கே இருப்பானாய்-

தத் சம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிக -என்றும்
தத் ஷம் ப்ராப்தௌ வரவரமுநிர் தேசிக -என்றும் சொல்லுகிறபடி
தன்னைப் போலே அங்குத்தைக்கு புதியர் அன்றிக்கே
தன்னிலமாய் கொண்டு
தன்னை அங்கே சேர்த்து விடக் கடவனாய் இருந்துள்ள
ஸ்வாச்சார்யன் திரு உள்ளத்துக்கு
தீங்கு இல்லாமை யாகிற
ப்ரபாகாந்தரங்களில் அந்வயம் தொடக்கமான பொல்லாங்கு இல்லாமை –

தீங்கு ஏதும் இல்லாமை யாகிறது –
ஸ்வாச்சார்யன் பக்கல் பிரேமம் அற்று இருக்கை தொடக்கமான பொல்லாங்கு இல்லாமை
இத் தீங்கு ஒரு கால விசேஷத்திலே யுண்டாய் கழிந்தது அன்றிக்கே
எதன் நிவ்ருத்தி ஸ்வதஸ் சித்தமாய் காணும் இருப்பது –

தேசிகன் தன் –
ஸ்வத உத்தாரகத்வத்தால் வந்த பிரதாண்யம் இருக்கிறபடி
சிந்தைக்கு பாங்காக நேரே பரிவுடையோர் –
இப்படி மகா உபாகாரகரான ஸ்வாச்சார்யர் திரு உள்ளத்துக்கு அனுகூலமாம் படி
தத்யாத் பக்தித ஆதராத் -என்றும்
ஆசார்யஸ்ய ஸ்திர பிரத்யுபகரண தியா தேவ வத்ச்யா து பாச்ய-என்றும் சொல்லுகிறபடி
நேர் கொடு நேர் கிஞ்சித்கார முகேன
தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் -என்கிறபடியே
தனக்கு அனுபாவ்யமான அவன் திரு மேனியைப் பேணிக் கொண்டு
அவன் பக்கலிலே நிரவதிக பிரேமத்தை யுடையவன்

பாங்காக –
சிஷ்யனுக்கு நிக்ரஹ காரணம் த்யாஜ்யம் என்கையாலே
அவனுக்கு ஸ்வரூபம் தத் பிரியம்
நடத்துகை ஒன்றும் போலே காணும் –

நேரே –
ஆள் இட்டு அந்தி தொழ ஒண்ணாத வோபாதியும்
மகிஷி ஸ்வேததுக்கு ஆள் இட ஒண்ணாத வோபாதியும்
தான் செய்ய கடவ அனுகூல வ்ருத்தியை அன்யரை இட்டு செய்விக்க ஒண்ணாது இ றே

பரிவுடையோர்
யஸ்மாத் ததுபதேஷ்டா சௌதஸ் மாத குருத ரோ குரு

அர்ச்சநீயச்ச வந்த்யசச கீர்த்தநீயச சர்வதா
த்யயேஜ்ஜே பேன் நமேத் பக்த்யா பஜேதப் யர்ச்சயேத் சதா
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத்
இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம் -இத்யாதிகளாலே
சர்வ கரணங்களாலும்
சர்வ பிரகாரங்களாலும்
சர்வ காலமும்
சர்வம் யதேவ -என்கிறபடியே
ஸ்வாச்சார்யன் தன்னையே எல்லாமாக பிரதிபத்தி பண்ணி
அவன் பக்கல் பிரேம உக்தனாய் இருக்கை ஒன்றுமே
சிஷ்யனுடைய ஞானம் பலம் ஆகிறது என்று சொல்லா நின்றது இ றே-

பரிவுடையோர் –
நிதியுடையோர் என்னுமா போலே
இது தான் பெறாப் பேறாய் இருப்பது ஓன்று இ றே
தத்ர அபி துர்லபம் மன்யே வைகுண்டே பிரியம் தர்சனம் -என்றது இ றே

பரிவுடையோர்
மேல் சொல்லுகிற புருஷார்த்த சித்திக்கு
வேண்டுவது இது ஒன்றுமே ஆய்த்து-

இங்கன் பரிவுடையனான இவனுக்கு
சித்திக்கப் புகுகிற பலம் தான் ஏது என்ன –
ஓங்காரத் தேரின் மேல் ஏறித் -இத்யாதி –
வைகுந்த மா நகர் அன்றோ இவன் கியது -என்கிறார் –

ஓங்காரத் தேரின் மேலேறி –
இப்படி ஸ்வார்ச்சார விசேஷத்திலே பிரேம சாலியான இவன்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆழ்வார் மண்னூடே -என்கிறபடி
இங்கு இருக்கும் நாள் ஸ்வ வ்யாவ்ருத்தி தோற்றவும்
ஸ்வரூப அனுரூபமாகவும்
பரமபதமும் கூட தன சிறுமுறிக்கு செல்லும்படியாகவும்
உபய வேதாந்த கால ஷேப ஸ்ரீ யோடும்
ததீயராதன ஸ்ரீ யுடனும்
உகந்து அருளின நிலங்களில் மங்களா சாசன ஸ்ரீ யுடனும்
தத் கைங்கர்ய ஸ்ரீ யுடனும்
உடையவரைப் போலே நூற்று இருபது ஆண்டு குறைவு நிறைவுகள் இன்றிக்கே இருந்து
சரீர அவசானத்திலே தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்
படியான பரம பக்தி தலை எடுத்து
அந்தமில் பேரின்பத்து அடியோரோடும் கூடி ஒரு கோவையாக இருக்க வேணும் என்னும் பிராப்ய
த்வரை விஞ்சி
ஹார்த்தா நுக்ரஹீதனாய் கொண்டு
ஹிருதய கமலத்தின் நின்றும் புறப்பட்டு
ஸூ ஷூ ம் நை -என்னும் பேரை உடைத்தான மூர்த்த்ணய நாடியாலே
சிர கபாலத்தைப் பேதித்து
ஓங்கார ரதமாருஹ்ய -என்கிறபடியே மனஸ் ஸூ சாரத்தியம் பண்ண
பிரணவம் ஆகிற தேரின் மேல் ஏறி-

செழும் கதிரி னூடு போய்-
அநந்தரம்
அர்ச்சிஷ மேவாபி சம்பவந்தி அர்ச்சிஷோஹா அன்ஹ ஆபூர்யமான பஷம்
ஆபூர்யா மான பஷாத் ஷடுதங் மாசான்
மாசேப்யஸ் சம்வஸ்த்ரம் சவாயுமா கச்சதி -என்கிறபடி முற்பட
அர்ச்சிசைக் கிட்டி
பின்பு அஹஸ்சையும்
சுக்ல பஷ அபிமாநியையும்
உத்தராயண அபிமாநியையும்
சம்வஸ்தர அபிமாநியையும்
வாயுவையும்
சென்று கிட்டி -அவர்கள் பெரிய ப்ரீதி உடன் வழி நடத்துகை முன்னாக
ஸ ஆதித்ய மா கச்சதி -என்றும்
பிரவிசச்ய ஸ சஹாஸ்ராம் ஸூ ம் -என்றும்
தேரார் கதிர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -என்றும் சொல்லுகிறபடி
நெருங்கி இருந்துள்ள கிரணங்களை யுடையனான ஆதித்ய மண்டலத்தை பேதித்து
அவன் சத்கரிக்க அவ்வருகே போய்ச் சென்று-

சேருவரே அந்தாமம் தான் –
அநந்தரம்
ஆதித்யா சந்த்ரமசம்
சந்திர மசோ வித்யுதம்
ஸ வருண லோகம்
ஸ இந்திர லோகம்
ஸ பிரஜாபதி லோகம்
ஸ ஆகச்சதி விரஜா நதீம்
தம் பஞ்ச ஸ தாநப்சரஸாம் பிரதிதாவந்தி
தம் ப்ரஹ்ம அலங்காரேண-என்கிறபடியே
அம்ருதாத்மகனான சந்திரனையும்
ஆதிவாஹிக கோடியிலே பரிகணிதமான அமானவனையும்
சர்வ வ்யாப்கனான வருணனையும்
த்ரைலோக்ய பாலகனான இந்த்ரனையும்
முக்தராய் போருமவர்களை சர்வ பிரகாரத்தாலும் மிகவும் ஸ்லாக்கிக்க கடவனான பிரஜாபதியையும் சென்று கிட்டி
அவர்கள் சத்கரிக்கும் சத்காரம் முன்னாக அவ்வோ லோகங்களையும் கடந்து-

ஈஸ்வரனுக்கு க்ரீடா கந்துக ஸ்தா நீயமான அண்டத்தையும்
ஒன்றுக்கு ஓன்று பத்து மடங்கான ஆவரண சப்தகத்தையும்
முடிவில் பெரும் பாழான மூலப் பிரக்ருதியையும் கடந்து
முன்பு சம்சாரியான நாளில் தான் பட்ட இழவு எல்லாம் தீர
மிகவும் ஸூ கோத்தரமான மார்க்கத்தாலே
தனக்கு உபாயமான பாரளந்த பாத போது போலே
கடுநடை இட்டுப் போய்
அம்ருத வாஹிநியான விரைஜையிலே குடைந்து நீராடி
வன் சேற்று அள்ளலையும்
வாஸநா ரேணுவையும்
விரஜா ஸ்நானத்தாலே கழியப் பெற்று –

அவ்விரஜைக் கரையிலே சங்கு சக்கர கதாதரானாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
அமானவன கர ஸ்பர்சம் முன்னாக
லாவண்ய சௌந்தர்யாதி கல்யாண குண கரமாய் ஸூத்த சத்வமயமான
பகவத் அனுபவ ஏக ப்ரியகரமாய் –
ஒளிக் கொண்ட சோதியான விக்ரஹத்தையும்
ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவத்தையும் பெற்று
பகவத் அனுகூல ஏக போக்யரான நித்ய சித்தறாலே நெருங்கி
அவர்களாலும் அளவிட ஒண்ணாத அளவையும்
ஐஸ்வர்யத்தையும் ஸ்வ பாவத்தையும் யுடைத்தான
திவ்ய தேசத்தை கண்கள் ஆர அளவும் நின்று கண்டு கைகள் கூப்பித் தொழுது

அமாநவ பரிசரத்தில் சங்க காஹள பேரீ ம்ருதங்களின் யுடைய முழக்கத்தைக் கேட்டு
ஓடுவார் விழுவார் போற்றுவார் புகழுவார்
பூ மழை பொழிவார் பாவாடை விரிப்பார்
பாதங்கள் கழுவுவாராயக் கொண்டு
எதிரே திரள் திரளாக புறப்பட்டு வருகிற நித்ய முக்தருடைய ஆனந்த கோலாஹலத்தை அனுபவித்துக் கொண்டு போய்
அவர்கள் எதிர்கொண்டு அலங்கரித்து சத்கரிக்கை முன்னாக
ஸ ப்ரஹ்ம லோக மபிசம்பத்யதே -என்றும்
அந்தாமம் -என்றும்
பொன்னுலகு -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ பிரகாரத்தாலும் ஸ்ப்ருஹணீயமாய்
தன்னுடைய வரவாலே புதுக் கணித்து மிகவும் அழகியதாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு போக ஸ்தானமாயும்
அவனுடைய செங்கோலாலே ஏகாதபத்ரமாய் நடத்தக் கடவதாயும்
அவன் திருவடிகளிலே அசேஷ சேஷ வ்ருத்திகளிலும்
அந்விதமாகைக்கு ஏகாந்தமாய் இருந்துள்ள
ஏர் கொள் வைகுந்த மா நகரத்தைச் சென்று கிட்டி
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்தில் இன்புற்று இருந்து
என்கிறபடியே
அம்ருத சாகர அந்தர் நிமக்ன சர்வாயவனாய்க் கொண்டு
யாவத் காலமும் இருப்பன் –

சேருவரே –
இவ்வர்த்தத்தில் அசிர்ப்புப் பண்ண வேண்டுவது இல்லை –
இது சரதம் என்கிறார்
ந சம்சயோஸ்தி -என்றது இ றே-

அந்தாமம் தான் –
லீலா விபூதியில் காட்டிலும்
நித்ய விபூதிக்கு யுண்டான
ப்ரதான்யம் இருக்கிற படி –

ஆக
இப்பாட்டாலே
சரம பிரகரணத்திலே
ஆச்சார்யா சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் -இத்யாதிகளால் சொல்லுகிற

அர்த்த விசேஷங்களை பிரதிபாதித்து அருளினார் ஆய்த்து –

——————————————————————————–

நிகமம் –
ஆக
இப்பிரபந்தத்தால்
அர்த்த பஞ்சக உபதேஷ்டாவே ஆச்சார்யன் ஆகிறான் –
என்னும் இடத்தையும்
அவன் இடத்தில் பிரேமம் அற்று இருப்பார் ஸ்வாத்மகாதகர்
என்னும் இடத்தையும்
அவர்கள் ஜ்ஞான விசேஷ யுக்தர்களே யாகிலும்
நித்ய சம்சாரிகளாய்ப் போருவர்
என்னும் இடத்தையும்
அதுக்கு க்ருதக்ன்னரான இவர்கள் அதி க்ரூரர்
என்னும் இடத்தையும்
ஸ்வ உத்கர்ஷதையைத் தேடுகை ஆச்சார்யனுக்கு அழுக்கு
என்னும் இடத்தையும்
இவ் வழுக்குக்கு அடியான தோஷத்தை பெரிய பெருமாள் தாமே தமக்கு
போக்கி அருள வேணும் என்னும் இடத்தையும்
ஆச்சார்யன் பக்கல் பிரேம யுக்தனான அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்திலே சென்று
முக்த ஐஸ்வர்யத்தைப் பெற்று கைங்கர்ய சாம்ராஜ்யத்திலே
மூர்த்த அபிஷிக்தனாய்க் கொண்டு யாவதாத்மபாவியாக இருப்பன்
என்னும் இடத்தையும்
அருளிச் செய்து நின்றார் ஆய்த்து-

———————————————————————————–

விளாஞ்சோலை பிள்ளை திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்