தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை -42-60 –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -42-

அவதாரிகை –

இனி ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் அநாதயசித சம்பந்த
தத் வியோக
தத் அன்வயங்களாலே
பத்த
முக்த
நித்ய
ரூபேண த்ரி பிரகாரமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம் தான்
பக்த
முக்த
நித்ய
ரூபேண
மூன்றுபடிப் பட்டு இருக்கும் –

———————————————

சூர்ணிகை -43-

இதில் பத்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார்

பத்தர் என்கிறது
சம்சாரிகளை –

அதாவது பக்தர்கள் ஆகிறார்கள்
தில தைல வத் தாரு வஹ்நி வத் துர் விவேச குண த்ரயாத்மக அநாதி
பகவந் மாயா திரோஹித ஸ்வ ஸ்வரூபராய் அநாதி அவித்யா சஞ்சித அநந்த
புண்ய பாப ரூப கர்ம வேஷ்டிதராய்
தத் கர்ம அனுகுண விவித விசித்திர தேவாதி ரூப தேக விசேஷ ப்ரவிஷ்டராய்
அவ்வோ தேகங்களில் அஹம் புத்தியைப் பண்ணியும்
தேக அனுபந்திகளில் மமதா புத்தியையும் பண்ணி
துர்வாசனா ருசி விவசராய் ஸ்வ ஸ்வ கர்ம அனுகுண
ஸூக துக்க பரம்பரைகளை
அனுபவிக்குமவர்கள் –

———————————————————————————-

சூர்ணிகை -44-

இனி முக்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

முக்தர்
என்கிறது
சம்சார சம்பந்தம்
அற்றவர்களை –

அவர்கள் ஆகிறார்கள் –
அநாதி கர்ம -ப்ரவாஹ பிரயுக்தமான சம்சார சம்பந்தம் நடவா நிற்கச் செய்தே
மோஷ ருசிக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷம் அனுபவத்தாலே ஆதல்
சாமான்யேன அனுஷ்டிக்கும் பிராயச் சித்த கர்மங்களாலே யாதல்
அநபி சம்ஹித பலமாய அதியுத் கடமான ப்ரமாதிக புண்யங்களாலே ஆதல் –
ஷயித்து-அது அடியாக –

ஜாயமான தசையில் பகவத் கடாஷத்தால் யுண்டான
சத்வோத் ரேகத்தாலே மோஷ ருசி பிறந்து
சத் குரு சமாஸ்ரயண சம் பிராப்த வேதாந்த வேத்ய
பர ப்ரஹ்ம ஞானராய்
தத் பிராப்தி ரூப மோஷ சித்யர்த்தமாக
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான கர்மங்களை பல சங்க கர்த்ருத்வ
த்யாக பூர்வகமாக அனுஷ்டித்து

தர்மேண பாப மப நுததி -(தைத் –2-6-தர்மங்களால் பாபத்தை விலக்குகிறான் )என்றும்
கஷாயே கர்ம அபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்ததே
(புண்யங்களால் ஞான உதய பிரதிபந்த வினைகள் கழிந்து ஞானம் பிறக்கிறது )-என்றும்
சொல்லிற்றே

அந்த சத் கர்ம அனுஷ்டானத்தாலே ஜ்ஞான உத்பத்தி விரோதி
ப்ராசீன கர்மம் ஷயித்த வாறே அந்தக்கரணம் நிர்மலமாய்
பகவத் ஏக அவலமபியான சமயக் ஞானம் உதித்து
அநந்தரம் –

ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம்
ஷீண பாப நாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே -என்கிறபடியே

இப்படி பஹூதர ஜன்ம சாத்தியமான கர்ம ஞானங்களால் பிறந்த
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூப பக்தி மூலமாக வரும்
பகவத் பிரசாதத்தாலே ஆதல் –
அன்றிக்கே
தன்னுடைய நிர்ஹேதுக சௌஹாரத்த விசேஷத்தாலே
யாத்ருச்சிகாதி ஸூஹ்ருத
பரம்பரைகளை கல்பித்து அது அடியாக விசேஷ கடாஷத்தை பண்ணி

அநந்தரம்
அத்வேஷத்தை ஜனிப்பித்து
ஆபிமுக்யத்தை யுண்டாக்கி
சாத்விக சம்பாஷணத்தை விளைத்து

அவ் வழியாலே
சதாச்சார்யா சமாஸ்ரயணத்திலே மூட்டி
தத் உபதேச முகேன தத்வ ஞானத்தை பிறப்பித்தல்
தன்னுடைய விசேஷ கடாஷம் தன்னாலே தத்வ ஞானத்தை பிறப்பித்தல் செய்து
மகா விஸ்வாச பூர்வகமாக தன் திருவடிகளை உபாயம் என்று நிற்கும்படி பண்ணும்
பகவத் ஆகஸ்மிக கிருபையாலே உபாயாந்தர விஷயத்தில் பிறந்த
துஷ்கரத்வாதி புத்தி மூலமாக வரும் ப்ரபதன மூலமான
பகவத் பிரசாதத்தாலே யாதல் சம்சாரிக்க சகல திருத்தங்களும் கழிந்து
ஆவிர் பூத ஸ்வரூபராய்
பகவத் அனுபவ கைங்கர்ய ஏக போகரானவர்கள் –

அவிசேஷண-முக்தர் -என்கிறது
சம்சார சம்பந்தம் அற்றவர்களை -என்கையாலே
பகவத் அனுபவத்தில் ருசி இன்றிக்கே
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
சம்சார நிவ்ருதியை யுண்டாக்கிக் கொண்டு
தேச விசேஷத்திலே போய் ஸ்வ ஸ்வரூப அனுபவம் பண்ணி இருக்கும்
கேவலரையும் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————

சூர்ணிகை -45-

இனி நித்யர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

நித்யர் என்கிறது
ஒருநாளும் சம்சரியாத
சேஷ
சேஷசநாதிகளை –

இத்தால் முக்தரை வ்யாவர்த்திக்கிறது –
நிவ்ருத்த சம்சாரர் இறே அவர்கள் –
இவர்கள் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் இறே

அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் ஸூராயஸ் சரஸ்த பந்தா (ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32 )(
அபகரிக்கப் படாமல் உள்ள இயல்பான கைங்கர்யம் பெற்ற நித்யர்கள் )என்றார் இறே பட்டர் –
நித்யோ நித்யா நாம (கட -5-13- நித்யர்களில் நித்யமானவனும் )-என்றும்
ஜ்ஞாஜஜௌ த்வாவஜா வீச நீ சௌ (ஸ்வே -1-9-)
(பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
ஓன்று வலிமை உடையதும் ஓன்று வலிமை அற்றதும்)-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தே

அசந்நேவ-(தை -2-6-1-இல்லாதவர்கள் ஆகிறார்கள்)என்பது
சந்தமேனம் (தை -2-6-1-இருப்பவர்கள் ஆகிறார்கள் )-என்பது ஆகிறது
பகவத் விஷய ஞான ராஹித்ய சாஹித்யங்களாலே இறே

ஆகையால் இவர்களை நித்யர் என்கிறதும்
பகவத் ஞானத்துக்கு ஒரு நாளும் சங்கோசம் இல்லாமையாலே என்று கொள்ள வேணும்

இந்த வைபவத்தைப் பற்றி இறே
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா (எந்த பரமபதத்தில் பகவத் அனுபவத்தில் முதன்மையாக நித்யர்கள் உள்ளனரோ)-என்றும்
யத்ர ருஷய பிரதமஜா யே புராணா (எந்த பரமபதத்தில் அனைத்தையும் நேரே காணக் கூடிய நித்யர்கள் முன்பே உள்ளனரோ )-என்றும்
ஸ்ருதி இவர்களை ஸ்லாகிக்கிறது

ஸ்ரீ பாஷ்ய காரரும் இவர்கள் யுடைய வைபவத்தை
ஸ்வ சந்தா அனுவர்த்தி (பகவானுடைய இச்சையை பின்பற்றியே உள்ள )இத்யாதியாலே
ஸ்ரீ கத்யத்திலே பரக்க அருளிச் செய்தார்

ஆகையால் -ஒரு நாளும் சம்சரியாதே -என்ற போதே -இவர்களுடைய
வைபவம் எல்லாம் சொல்லிற்று ஆயிற்று

அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந் விதனாய்
கைங்கர்ய பரர்க்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலே
திரு வநந்த வாழ்வானை சேஷன் என்கிறது –

நிவாச சய்யா ஆசனம் பாதுகாம் சுகோபதாந வர்ஷ ஆதப வாராணாதிபி
சரீர பேதைஸ் ச தவ சேஷதாம் கதைர் யசோசிதம சேஷ இதீரிதே ஜனை (ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -40-)-என்று இறே
ஸ்ரீ ஆளவந்தாரும் அருளிச் செய்தது –

மற்றுள்ள ததீயரைப் போலே அநியமமாய் இராதே சர்வேஸ்வரன் அமுத செய்த சேஷம் ஒழிய
அமுது செய்யாத நியமத்தைப் பற்ற சேஷாசனர் என்று
சேனை முதலியாரை நிரூபிக்கிறது
த்வதீய புக்தோ ஜஜித சேஷ போஜினா-(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -42 ) என்றார் இறே ஆளவந்தாரும்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய வை ப்ர புக்த சிஷ்டாச் யத ஸைந்ய ஸத்பதி (ஸ்ரீ ஸூந்தர பஹு ஸ்தவம் 74) –
என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –

ஆதி -சப்தத்தாலே
சேஷ சேஷாசன கருட ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிஜாரிக பரிசரித சரண யுகள -என்கிறபடியே
பகவத் கைங்கர்ய ஏக போகராய் இருந்துள்ள வைனதேய பிரமுகரான நித்ய சித்தரை எல்லாம் சொல்லுகிறது –

—————————————————————————————————-

சூர்ணிகை -46-

அவதாரிகை –
பூர்வோகதமான ஸ்வரூப வைலஷ்ண்யத்தை யுடைய ஆத்மாவுக்கு
அவித்யாதி தோஷ சம்பந்தம் வந்தபடி என்-
என்கிற சங்கையில்
சத்ருஷ்டாந்தமாக தத் ஹேதுவை அருளிச் செய்கிறார் –

ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்சர்க்கத்தாலே
ஔஷண்ய
சப்தாதிகள்
யுண்டாகிறாப் போலே

ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே
அவித்யா
கர்ம
வாசனா
ருசிகள்
உண்டாகிறன-

அதாவது
ஸ்வ பாவாத ஏவ நிர்விகாரமாய் சீதளமாய் இருக்கிற ஜலத்துக்கு
அக்னியோடு சம்ஸ்ருஷ்டியான ஸ்தாலியோட்டை சம்சர்க்கத்தாலே
ஔ ஷண்ய சப்தோத்ரேக ரூபங்களான விகாரங்கள் யுண்டாகிறாப் போலே

ஸ்வத ஞான ஆனந்த அமல ஸ்வரூபனான ஆத்மாவுக்கும்
குண த்ரய ஆஸ்ரய அசித் சம்பந்தத்தாலே
அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாகிறன என்கை-

இவருடைய திருத் தம்பியாரும் ஆச்சார்ய ஹிருதயத்திலே(10)
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் -என்று அருளிச் செய்தார் இறே

இப்படி ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே (6-7-22)
நிர்வாணமய ஏவாயமாத்மா ஞான மயோமல துக்காஞ்ஞா நாமலா
தர்மா பிரக்ருதேஸ் தே ந சாத்மந ஜலஸ்ய ச அக்னி
சம்ஸ்ருஷ்ட ஸ்தாலீ சங்காத ததாபி ஹி சப்தோத்ரேகாதிகான்
தர்மான் தத் கரோதி யதா முனே ததாத்மா ப்ரக்ருதௌ
சங்காத அஹம் மாநாதி தூஷித
பஜதே ப்ராக்ருதான் தர்மா நன்ய ஸ்தேப்யோபி சோவ்யய–என்று சொல்லப் பட்டது –

1-அவித்யை யாவது -அஞ்ஞானம்
அது தான் ஜ்ஞான ஜ்ஞான அநுதய -அந்யதா ஞான –விபரீத ஞான
ரூபேண அநேக விதமாய் இருக்கும்

2-கர்மமாவது கரண த்ரய க்ருதமாய் புண்ய பாபாத்மகமான க்ரியா விசேஷம்
அதில் புண்யம் ஐஹிக ஆமுஷ்மிக நானா வித போக சாதன தயா பஹூ விதமாய் இருக்கும்
பாபமும் அக்ருத்ய கரண கிருத்திய அகரண பகவத் அபசார பாகவத் அபசாரா அசஹ்யா அபசார ரூபேண அநேகவிதமாய் இருக்கும்

3-வாசனை ஆவது முன்பு செய்து போந்த வற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான சம்ஸ்காரம்
இது தான் ஹேது பூதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

4-ருசியாவது ரசாந்தரத்தாலும் மீட்க ஒண்ணாத படி ஒன்றிலே செல்லுகிற விருப்பம்
இதுவும் விஷய பேதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாயிற்றன -என்னாமல்-
உண்டாகிறன -என்கையாலே
இவற்றின் உடைய ப்ரவாஹ ரூபத்வம் சொல்லப் பட்டது-

————————————————————————————————

சூர்ணிகை -47

இப்படி ஆத்மாவுக்கு வந்தேறியான அவித்யாதிகள் தான்
எவ் வவஸ்தையில் கழிவது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அசித்து கழிந்த வாறே
அவித்யாதிகள்
கழியும்
என்பார்கள் –

அதாவது
காரண நிவ்ருதயயா கார்ய நிவ்ருத்தி யாகையாலே
அசித் சம்பந்தம் நிபந்தனமாக வந்த இவையும்
தத் சம்பந்தம் கழிந்தவாறே கழியும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி

என்பார்கள் -என்ற இத்தை பர மதமாக்கி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களுக்கு பகவத் பிரசாத விசேஷத்தாலே
அசித்து கழியும் முன்னே அவித்யாதிகள் கழியக் காண்கையாலே
அந்த நியமம் இல்லை என்று இவருக்கு கருத்து என்று சொல்லுவாரும் உண்டு

அது முக்கியம் அன்று
அவர்கள் திரு மேனியோடு இருக்கச் செய்தே பரம பக்தி பர்யந்தமாகப் பிறந்ததே யாகிலும்
வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகளவும்
யானும் உளன் ஆவான் என் கொலோ (பெரிய திருவந்தாதி 76)-என்கையாலே
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி (சாந்தோக்யம் -ப்ரஹ்மத்தைக் கண்டவன் அனைத்தையும் கண்டவன் ஆகிறான் )
என்கிற முக்த அவஸ்தையில் வைசத்யம்
அசித்து கழிவதற்கு முன்பு இல்லாமையாலே –

ஆக
கீழ்ச் செய்தது ஆயிற்று
ஆத்ம ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும் என்றும்
அதில் பக்த சேதனருக்கு அவித்யா உத்பத்தி மூலமும்
தந் நிவ்ருத்தி கரமும்
சொல்லி நின்றது –

——————————————————————————————

சூர்ணிகை -48-

இப்படி உக்தமான த்ரிவித ஆத்மா வர்க்கமும்
இத்தனை சேதனர் என்று சங்கயேயமாய் இருக்குமோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இம் மூன்றும்
தனித் தனியே
அனந்தமாய்
இருக்கும் –

அதாவது
வர்க்ய த்ரயமுமாக அநந்தம் என்று தோற்றும் என்று நினைத்து
தனித் தனியே என்று விசேஷிக்கிறார் –

அனந்தமாய் இருக்கும் என்றது
அசங்கயேயமாய் இருக்கும் என்றபடி –

—————————————————-

சூர்ணிகை -49-

உக்தமான ஜீவ அனந்யத்துக்கு விரோதியான
ஐக ஆத்ம்ய வாதத்தை நிராகரிக்கிறார் மேல் –

சிலர்
ஆத்மா பேதம் இல்லை
ஏக ஆத்மாவே உள்ளது
என்றார்கள் –

சிலர் என்று அநாதரோ கதியாலே அருளிச் செய்கிறார்
இப்படி சொல்லுமவர்கள் தாங்கள் ஆரோ என்னில்
ஜீவ அத்வைத பிரதிபாதிக சாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள்

அதாவது
ப்ரஹ்ம அத்வைதம் என்றும்
ஜீவ அத்வைதம் என்றும்
சாஸ்திர பிரதிபாத்யமான அத்வைதம் த்விவிதமாய் இருக்கும்

அதில் ப்ரஹ்ம அத்வைதம் ஆவது
பிரகார்ய அத்வைதம்
ஜீவ அத்வைமாவது
பிரகார அத்வைதம்

இதுக்கு நியாமகம் ஏது என்னில்
ப்ரஹ்ம ப்ரகரணங்களில் —
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -(சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மம் )
ஐத தாத்ம்யம் இதம் சர்வம் -(சாந்தோக்யம் -6-8-7-அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்டது )
புருஷ ஏவேதம் சர்வம் (ஸ்வே -3-15-இந்தப் புருஷனே இவை அனைத்தும் )-என்று
சாமாநாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை பிரதிபாதிக்கையாலும் –

சாமாநாதி கரண்யம் பிரகார பேத விசிஷ்ட பிரகாரயேகத்வ பரமாகையாலும் –

ஏகஸ் சன் பஹூதா விசார (பரமாத்மா ஒன்றாக இருந்தபடி பலவற்றையும் வியாபிக்கிறான் )-என்று
பிரகார பஹூத்வம் கண்டோக்த மாகையாலும்

ஐக்ய விதிக்கு சேஷமான –
தேக நா நாஸ்தி (ப்ரஹ்மாவை விடுத்து ஏதும் இல்லை )–இத்யாதி
பேத நிஷேதம் விஹித ஐக்ய விரோதி பேத விஷயமாகையாலும்

பிரகாரி பஹூத்வ நிஷேத பரமாகையாலும்

ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருஸ்யதே (ப்ரஹ்மதுக்கு நிகரானதும் மேலானதும் காணப்படுவது இல்லை )-என்று
ப்ரஹ்ம துல்ய பிரகாராந்தர நிஷேத
கண்டோக்தியாலும் பிரகார அத்வைதமே ப்ரஹ்ம அத்வைதம்-

ஜீவ பஹூத்வம் ஸ்ருதி சித்தமாகையாலும்
அல்லாத போது பக்த முக்த வ்யவஸ்த அனுபபத்தியாலும்
உபதேச அனுபபத்தியாலும்
ஸூகாதி வ்யவஸ்த அனுபபத்தியாலும்

புமாந் ந தேவோ ந நரோ ந பசுர் ந ச பாதப சதுர்விதோ விபே தோயம் மித்தயா ஜ்ஞான நிபந்தன
தேவாதி பேத அபத் வஸ்தே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-98 )
(ஜீவாத்மா தேவனும் அல்லன் -மனிதனும் அல்லன் -ஸ்தாவரம் அல்லன் -விலங்கு அல்லன் என்று
கூறப்பட்ட நான்கு விதமான வேறுபாடுகள் தவறான ஞானத்தால் ஏற்படுகிறது
தேவன் முதலான வேறுபாடுகள் நீங்கும் போது மெய்யான ஞானம் ஏற்படுகிறது )-இத்யாதி களிலே
தேவாதி சரீர பேத விசேஷ நிஷேதம் கண்டோக்தமாகையாலும்
முக்தாத்மாக்களுக்கு சாம்யத்தை ஸ்ருதி சொல்லுகையாலும் ஜீவ அத்வைதம் பிரகார அத்வைதமே

இது தான் ஸ்ருத பிரகாசிகையிலே
ஆதிபரத -சதுஸ்லோகீ வியாக்யான உபக்ரமத்திலே
ப்ரஹ்ம அத்வைதம் ஜீவாத வைதஞ்சேத்ய அத்வைதம் த்விவிதம் சாஸ்திர பிரதிபாத்யம் -என்று தொடங்கி
ஸ்ரீ வேத வியாச பட்டராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது –

இப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப் படுகிற ஜீவ அத்வைதத்துக்கு ஹிருதயம் அறியாதே
ஆத்ம பேதம் இல்லை -ஏகாத்மாவே உள்ளது என்று
சில குத்ருஷ்டிகள் சொன்னார்கள் -என்கை-

——————————————————————————–

சூர்ணிகை -50-

அது அயுக்தம் என்னும் இடம் சாதிக்கிறார் –
அந்த பஷத்தில்
ஒருவன்
ஸூகிக்கிற காலத்தில்
வேறே ஒருவன்
துக்கிக்க கூடாது –

அதாவது
அப்படி ஆத்ம பேதம் இல்லாத பஷத்தில்
அஹம் ஸூகி -என்று ஒருவன் ஸூகோத்தரனாய் இருக்கிற காலத்தில்
அஹம் துக்கீ -என்று ஒருவன் துக்கோதரனாய் இருக்கிற
இந்த ஸூக துக்க வியவஸ்தை கூடாது என்கை

ஸூக துக்கங்கள் இரண்டும் ஏக ஆஸ்ரய கதமாகில்
உபய பிரதி சந்தானமும் ஒருவனுக்கே யுண்டாக வேணும் இறே
ஆகையால் ஸூக துக்கங்கள் நியதங்கள் ஆகையாலே
ஆத்மா பேதம் யுண்டாக வேணும் என்று கருத்து-

—————————————————————

சூர்ணிகை -51-

அந்த ஸூக துக்க வியவஸ்தைக்கு ஹேது
தேக பேதம் என்கிறவர்கள் உக்தியை அனுவதிக்கிறார்

அது
தேக பேதத்தாலே
என்னில்

————–

சூர்ணிகை -52-

அதுக்கு அனுபபத்தி சொல்லுகிறார் –

சௌபரி சரீரத்திலும்
அது
காண
வேணும் –

அதாவது
தேஹ பேதம் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது என்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இந்த ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்

ஸ்மரியாது ஒழிகிறது சம்ஸ்காரத்தின் யுடைய அனுதபவத்தாலே ஆதல்
நாசத்தாலே ஆதல்
சரீராந்தரத்தில் ஸூக துக்க ச்ம்ரிதாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும்
இரண்டில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும் ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும்

ஆகையால்
ஸூக துக்க நியமத்துக்கு
ஹேது தேக பேதம் என்ன ஒண்ணாது-

———————————————————–

சூர்ணிகை -53-

இப்படி ஸூக துக்க வ்யவஸ்த அனுபபத்தியே என்று
ஏகாத்மா என்னும் பஷத்தில்
பக்த முக்தா வ்யவஸ்தா அனுபபத்தியும்
சிஷ்யாச்சார்யா வ்யவஸ்தா அனுபபத்தியும்
யுண்டு என்கிறார் மேல்

ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யனாகையும்
கூடாது

அதாவது -ஏகாத்மா வாகில் –
அநேக ஜன்மம் ஸஹஸ்ர ஸீம் சம்சார பதவீம் வ்ரஜந் மோஹ சரமம்
ப்ரயா தோ சௌ வாசநா ரேணு குண்டித (ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19 )
(பல ஆயிரக் கணக்கான பிறவிகளில் சம்சாரத்தில் உழன்றபடி
மயக்க வாசனைகளால் உண்டாகும் துன்பத்தை அடைகிறான் )-என்கிறபடியே
ஒருவன் சம்சரிக்கையும்

சுகோ முக்கோ வாமதேவோ முக்த (சுகர் முக்தரானார் வாமதேவர் முக்தரானார் )–என்கிறபடியே
ஒருவன் முக்தனாகையும்

தத் விஞ்ஞாநார்த்தம் ச குருமே வாபி கச்சேத் சமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
தஸ்மை ச விதவான் உபசந்நாய சம்யக் பிரசாந்த சித்தாய சமாந் விதாய
யே நாஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் (முண் -1-2-12.13)
(இத்தகைய ப்ரஹ்ம ஞானத்தை அடையும் பொருட்டு வேதங்களை அத்யயனம் செய்த அவன் –
அவன் கையில் ஸமித் போன்றவற்றை எடுத்தவனாக வேத அத்யயனம் செய்தவரும்
ப்ரஹ்மத்தைக் குறித்து நன்கு அறிந்தவரும் ஆகிய ஆச்சார்யனை அடைய வேணும் தன்னிடம் வந்தவனும் –
தன்னிடம் வணக்கம் நிறைந்தவனும் தனது மனத்தை வசப்படுத்தினவனும் ஆகிய அந்த சிஷ்யனுக்கு
ஆச்சார்யன் செய்ய வேண்டியது என்ன என்னில் -தான் எந்த ஒரு வித்யை மூலமாக
ஸ்வரூபம் மற்றும் குணங்களால் மாறுபாடு இல்லாத பரமபுருஷனை அறிகின்றாரோ
அத்தகைய ப்ரஹ்ம வித்யையை அந்தச் சிஷ்யனுக்கு நேர்மையாக உபதேசிக்க வேண்டும் ) -என்கிறபடியே
ஒருவன் சிஷ்யனை வந்து உபசத்தி பண்ண
ஒருவன் ஆச்சார்யனாய் இருந்து அவனுக்கு உபதேசிக்கையும் கூடாது என்கை-

————————————————————————

சூர்ணிகை -54-

இன்னமும் ஒரு அனுப பத்தி சொல்லுகிறார் –

விஷம
சிருஷ்டியும்
கூடாது –

அதாவது ஏகாத்மா வாகில்
தேவ திர்யகாதி ரூபேண சில ஸூகோத்தரமாகவும்
சில துக்க கோத்தரமாகவும்
இப்படி லோகத்தில் பதார்த்தங்களை விஷமமாக சர்வேஸ்வரன் சிருஷ்டிக்க கூடாது என்கை

ஜீவ பேதமும்
கர்ம தாரதர்யமும் இறே
விஷம சிருஷ்டிக்கு ஹேது-

———————————————————————————————–

சூர்ணிகை -55-

இப்படி யுக்தியாலே அநேக விரோதங்களை தர்சிப்பித்தார் கீழ்
இவ்வளவே அன்று –
இப் பஷத்துக்கு ஸ்ருதி விரோதமும் யுண்டு -என்கிறார் –

ஆத்ம பேதம்
சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும் –

அதாவது -ஏகாத்மா என்கிற பஷம்
நித்யோ நித்யாநாம் சேதனச் சேதனாநாம் ஏகோ பஹூநாம் யோ விததாதி காமாந் (கட -5-13 )
(நித்யர்களில் நித்யமானவனும் சேதனர்களில் சேதனனும் ஆகிய அவன்
அனைவருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன் ) -என்று
ஆத்ம பேதத்தை சொல்லுகிற ஸ்ருதிக்கும் சேராது -என்றபடி –

———————————————————————

சூர்ணிகை -56-

இந்த ஸ்ருதி ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்னில்
போக்தா போக்கியம் (அனுபவிக்கும் சேதனம் அனுபவிக்கப்படும் அசேதனம் )-என்றும்
ப்ருதக் ஆத்மாநம் (ஸ்வே –1-6–ஆத்மாவையும் அவனை நியமிப்பவனாயும் தனித் தனியாக ) –என்றும்
ஜஞாஜ்ஜௌ த்வவாஜௌ (ஸ்வே -1-9-பிறப்பற்ற அந்த இருவரில் ஒருவன் அறிந்தவன் ஒருவன் அறியாதவன் )-என்றும்
அந் யோந்தர ஆத்மா விஞ்ஞானமய (மநோ மயனைக் காட்டிலும் வேறான ஞான மயனாக உள்ளவனும்
உள்ளே காணப் படுபவனும் ஆகிய ஆத்மா வேறாக உள்ளான் )-என்றும்
ஜீவ ஏகத்வ ப்ரதிகாதிகைகளான அநேக ஸ்ருதிகளோடும்
விரோதிக்கும் ஆகையால்
இது ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்று இறே அவர்கள் சொல்லுவது
அத்தை நிஷேதிக்கிறார்

ஸ்ருதி
ஔபாதிக பேதத்தை
சொல்லுகிறது
என்ன
ஒண்ணாது –

ஔபாதிக பேதமாவது
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும்

———————————————————-

சூர்ணிகை -57-

ஔபாதிக பேதம் என்ன ஒண்ணாமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

மோஷ
தசையிலும்
பேதம்
யுண்டாகையாலே –

அதாவது
சதா பஸ்யந்தி-(ப்ர-5-10 )
நித்ய ஸூரிகள் எப்போதும் அந்த விஷ்ணுவுடைய உயர்ந்த இடத்தைப் பார்த்த படியே உள்ளனர் )என்றும்
மம சாதரம்யம் ஆகதா -(கீதை -14-2-எனது ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் ) என்றும்
முக்தாநாம் பரமா கதி (முக்தர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள் )என்றும்
சாயுஜ்யம் பிரதிபந்நாயே(ஸாயுஜ்யம் அடைகிறார்கள் ) -என்றும்
யஸ்மின் பதே விரா ஜந்தே முகதாஸ் சம்சார பந்தனை
(எந்த இடத்தை அடைவதால் முக்தர்கள் சம்சாரத்தில் இருந்து விடுபடுகிறார்களோ )-என்றும்

மோஷ தசையில் ஆத்ம பேதத்தை ஸ்ருதிகள் சொல்லுகையாலே
அப்படி சொல்ல ஒண்ணாது என்கை

மோஷ தசையாவது
சர்வோபாதி விநிர்முக்த தசை இறே

அந்த தசையிலும் ஆத்ம பேதம் ஸ்ருதி சித்தம் ஆகையாலே
நித்யோ நித்யா நாம் -என்கிற ஸ்ருதியும்
ஆத்ம பேதத்தை சொல்லுகிறது என்றது ஆயிற்று –

———————————————————————————————-

சூர்ணிகை -58–

அவதாரிகை –

ஆனால் ஆத்ம பேத பிரதிபதிக்கு ஹேதுவாய்
ஔபாதிகமாய் இருந்துள்ள
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒரு பிரகாரத்தாலும் பேத கதனத்துக்கு யோக்யதை இல்லாதபடி இறே மோஷ தசை இருப்பது —

அவ் விடத்தில் ஆத்ம பேதம் சித்திக்கிற படி எங்கனே
என்கிற வாதி பிரஸ்னத்தை அனுவதிக்கிறார்

அப்போது தேவ மனுஷ்யாதி
பேதமும்
காம க்ரோதாதி
பேதமும்
கழிந்து
ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய்
ஒரு படியாலும் பேதம் சொல்ல
ஒண்ணாத படி
இருந்ததே யாகிலும்
திருஷ்டாந்த முகேன பேதத்தை
சாதிக்கிறார்

———-

சூர்ணிகை -59-

பரிமாணமும் எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள்
ரத்னங்கள்
வ்ரீஹ்கள்
தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும்
சித்தம் –

அதாவது
அளவும் தூக்கமும் வடிவும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வ்ரீஹகள் முதலான பதார்த்தங்களுக்கு
பேதகமாய் இருப்பதொரு லஷணம் இல்லை யாகிலும்
அதிலே நாநாத்வம் காண்கிறாப் போலே
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி
ஏக ஆகாரமான முக்த ஆத்மாக்களுக்கும்
ஸ்வரூப பேதம் சித்திக்கும் என்றபடி —

———————————————————-

சூர்ணிகை -60-

கீழ்ச் சொன்னவற்றை எல்லாம் அனுபாஷித்துக் கொண்டு
நிகமிக்கிறார்

ஆகையால்
ஆத்ம பேதம்
கொள்ள வேணும் –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று –
சிலர் ஆத்ம பேதம் இல்லை
ஏகாத்மாவே உள்ளது என்றார்கள் -என்று(49) தொடங்கி
இவ்வளவாக முன்பு தாம் அருளிச் செய்த
ஜீவ அனந்த்ய பிரதிபடமான ஏகாத்ம வாதத்தை உத்ஷேபித்து
யுக்தியாலும்
சாஸ்த்ரத்தாலும்
பஹூ முகமாக அத்தை தூஷித்து
ஆத்ம பேதத்தை சாதித்தார் ஆயிற்று –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: