தத்வ த்ரயம் -சித் பிரகரணம்-சூர்ணிகை -31-41- –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

சூர்ணிகை -31

சிலர்
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை
என்றார்கள் –

சிலர் என்று
அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான
அநாதரம் தோற்ற அருளிச் செய்கிறார் –
குணங்கள் என்றும் பிரகிருதி என்றும் பேதம் இல்லை இறே இவர்களுக்கு
ஆகையால் பிரக்ருதிக்கே என்கிற
ஸ்தானத்திலே
குணங்களுக்கே -என்கிறார் –
மூல பிரகிருதி நாம ஸூகத்துக்க மோஹாதமகாநி லாகவ பிரகாச சலனோ
பஷ டம பன கௌரவா வரண கார்யாணி அத்யந்த அதீன தார்யாணி
கார்யைக நிரூபண விவேகாநி அநயூந அனதிரேகாணி சமுதாமுபேதானி
சதவரஜச தமாமசி தரவயாணி -என்று இறே அவர்களுடைய சித்தாந்தம் –
ஆகையால் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றபடி –
அதாவது
கடவல்லியிலே-ந ஜாயதே மரியதே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு ஜனன மரணாதிகளான பிரகிருதி தர்மங்களை எல்லாம்
பிரதிசேஷித்து-ஹந்தா சேது மந்யதே ஹந்தும் ஹதசசசேன மந்யதே ஹதம
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம ஹநதி ந ஹனயதே -என்று
கன நாதி கரியைகளிலே கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும்
ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே
நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –
என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே
கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை
போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –

————————————————————————————————–

சூர்ணிகை -32-

அத்தை நிராகரிக்கிறார் –

அப்போது இவனுக்கு
சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும்
குலையும்

அதாவது
பிரக்ருதிக்கே கர்த்ருத்வமாய்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லையான போது
இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்தரத்துக்கு
தான் அதிகாரியாய்க் கொண்டு
அதன் வசத்திலே நடக்க வேண்டுகையும்
விஹித நிஷித தகரண ப்ரயுக்த ஸூ கதுக்க ரூப பல போக்த்ருத்வம்
சேராது -என்கை-
சேதனன் கர்த்தா வாகாதபோது சாஸ்தரத்துக்கு வையாததயம் பிரசங்கிக்கும்
சாஸ்திர பலம் பரயோகதரி
கர்த்தா சாஸ்தரார்த்தத்வாத்-என்னக் கடவது இ றே –
இனித் தான்
ஸ்வா ககாமோ யஜத-
முமுஷூர் பரஹ்மோபாசீத்-என்று
ஸ்வர்க்க மோஷாதி பல போக்தாவை இ றே கர்த்தாவாக
சாஸ்திரம் நியோக்கிகிறதும் –
ஆகையால் பல போக்தாவே கர்த்தாவாகவும் வேணும் இ றே
அசேதனதுக்கு கர்த்ருத்வம் ஆகில் சேதனனைக் குறித்து விதிக்கவும் கூடாது
சாசானாஸ் சாஸ்திரம் -என்னக் கடவது இ றே
சாசனமாவது பரவாததனம்
சாஸ்தரத்துக்கு பரவாத தகத்வம் போதஜன நத்வாரத்தாலே
அசேதனமான பரதானத்துக்கு போதத்தை விளக்கப் போகாது இ றே
ஆகையால் சாஸ்திரம் அர்த்தவததாம் போது
போக்தாவான சேதனனுக்கே கர்த்ருத்வம் ஆகவேணும்
இது எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும் என்று அருளிச் செய்தது –

————————————————————————————————

சூர்ணிகை -33-

ஆனால் கர்த்ருத்வம் எல்லாம் இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் ஆமோ என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சாம்சாரிக
பிரவ்ருதிகளில்
கர்த்ருதம்
ஸ்வரூப
பிரயுக்தம்
அன்று –

அதாவது
சம்சாரிக்க பிரவ்ருதிகளான
ஸ்திரீ அன்ன பாநாதி போகங்களை
உத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வியாபாரங்கள் –
அவற்றில்
கர்த்ருத்வம் ஔபாதிகம் ஆகையால்
ஸ்வரூப பிரயுக்தம் அன்று -என்கை –

————————————————————————————————-

சூர்ணிகை -34

ஆனால் அது தான் இவனுக்கு வந்தபடி என் -என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

குண சமசர்க்க
க்ருதம்

அதாவது
குணங்கள் ஆகிறன -சத்வம் ரஜஸ் தமஸ் ஸூ க்கள்
அவற்றின் யுடைய சமசர்க்கத்தாலே யுண்டானது -என்றபடி பிரக்ருதே கரியமாநாணி குணை காமாணி சர்வச
அஹங்கார விமூடாதமா காதாஹமிதி மந்யதே -என்னக் கடவது இ றே
இது எல்லாம்
கர்தா சாஸ்த்ராத்வாத் -என்கிற ஸூ தரத்திலே
பூர்வ பஷ சித்தான ரூபேண ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்-

———————————————————————————————–

சூர்ணிகை -35

இப்படி சாங்க்ய பஷத்தை நிராகரித்து
ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை சாதித்தார் கீழ் –
இந்த கர்த்ருத்வம் தான் ஸ்வா யததாமோ
பராய ததாமோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

கர்த்ருத்வம்
தான்
ஈஸ்வர
அதீநம்

அதாவது
இந்த ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் தான்
ஸ்வாதீனம் அன்றிக்கே ஈஸ்வர அதீநமாய் இருக்கும் -என்றபடி –
பராதது தசசருதே -என்று வேதாந்த ஸூ தரத்திலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பராயததம் என்று
சித்தமாகச் சொல்லப் பட்டது இறே
சாஸ்த்ராத்தவாத த்துக்காக கர்த்ருத்வம் ஆத்மா தாம் என்று கொள்ள வேணும்
அந்த கர்த்தாவுக்கு தாமமான ஜ்ஞான இச்சா பிரயத்தனங்கள்
பகவத் அதீனங்களாய் இருக்கையாலும்
அந்த ஜ்ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய க்ரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய கர்த்ருத்வம் ஈஸ்வர அதீநம் -என்கிறது –
இவனுடிய புத்தி மூலமான பிரயத்தனத்தை அபேஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது என்று
விவரணத்திலே ஆச்சான் பிள்ளையும்
இப்படி கர்த்ருத்வம் பரமாதமாய்த் தமானாலும்
விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது –
க்ருத பரயத்நா பேஷச்து விஹித ப்ரதி ஷித்தா வையா தயாதிபய -என்று
பரிஹரிக்கப் படுகையாலே –
அதாவது
விஹித பரதி ஷித்தங்களுக்கு வையாதயாதிகள் வாராமைக்காக
இச் சேதனன் பண்ணின பிரத பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பிக்கும் -என்றபடி –
எங்கனே என்னில்
எல்லா சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையாலே
சாமானாயேன பிரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வம் யுண்டாயே இருக்கும்
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வகிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாகக் கொண்டு நில்லா நிற்கும்
அவனாலே யுண்டாக்கப் பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன்
அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன ஞான சிகீர்ஷா பிரத்யனனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்
அவ்விடத்திலே மத்யஸ்தன் ஆகையாலே உதாசனரைப் போலே இருக்கிற
பரமாத்மாவானவன் அந்த சேதனர் யுடைய பூர்வ வாசன அனுரூபமான
விதி நிஷதே பிரவ்ருதியிலே
அனுமதியையும் அநாதரத்தையும் யுடையவனாய் கொண்டு
விஹிதங்களிலே அனுக்ரஹத்தையும்
நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணா நிற்பானாய்
அனுக்ரஹாதமகமான புண்யதுக்கு பலமான ஸூகத்தையும்
நிக்ரஹாதமகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வவோ சேதனருக்கு கொடா நிற்கும்
இது தன்னை அபி யுக்தரும் சொன்னார் –

ஆதா வீச ஸ்வர தததயைவ புருஷச ஸ்வா தந்த்ரிய சகதயா
ஸ்வ யம தத் தத் ஞான சிகீர்ஷா பிரத்யத்ன யுத்பாத யன வாததே ததரோபேஷய
தத் அனுமதய விதத்த தன நிக்ரஹ அனுக்ரஹ தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததச சர்வச்ய புமசோ ஹரி -என்று அடியிலே
சர்வ நியந்தாவாய்
சர்வ அந்தராத்மாவான
சர்வேஸ்வரன்
தனக்கு யுண்டாக்கிக் கொடுத்த ஞானத்வ ரூபமான ஸ்வா தந்த்ரிய சக்தியாலே
இப்புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞான சிகிருஷா பிரயத்தனங்களை
யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும் –
அவ்விடத்திலே
அசாஸ்தா யங்களிலே உபேஷித்தும்
சாஸ்திரீ யங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹ அனுக்ரஹங்களை பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்னா நின்றார்கள் –
இப்படி சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை
அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து
என்று தீப பிரகாசத்திலே ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள் இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –

ஆனால்
ஏஷ ஹ்யேவசாது கர்ம காரயதி தம யமேபயோ லோகேபய
உன்னிநீஷதி ஏஷ ஏவாசாது காம காரயதி தம யமதோ நிநீஷதி -என்று
உன்னிநீஷ-யாலும் அதோ நிநீஷை யாலும் சர்வேஸ்வரன் தானே
சாதவசாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்னும் இது சேரும்படி என் என்னில்
இது சர்வ சாதாரணம் அன்று
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதிமாத்ரமான ஆனுகூல்யத்திலே
வ்யவசிதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே ஸ்வ பிராப்த உபாயங்களாய
அதி கல்யாணங்களான கர்மங்கலளிலே ருசியை ஜனிப்பிக்கும் –
யாவன் ஒருவன் அதி மாத்திர பிராதி கூல்யத்தில் வ்யவச்திதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோ கதி சாதனங்களான கர்மங்களிலே சங்ககி பிக்கும் என்று
இந்த சுருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையாலே
இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே
அஹம் சர்வச்ய பிராபவோ மத்த்ஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதபா வசம் அந்விதா-என்று தொடங்கி
தேஷாம் சத்த யுக்தா நாம பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி
புத்தி யோகம் தம யேன மாம் உபயாநதி
தே தேஷாம் ஏவ அனுகம பார்த்தம் அஹம் ஞானம் ஜமதம
நாசயாம யாதமாவசததோ ஜ்ஞான தீபேனபாசவதா என்றும் –
அசதயமப்ரதிஷ்டம் தே ஜகதா ஹூர நீச்வரம் -என்று தொடங்கி
மாமாதமபரதேஹேஷூ பரதவிஷன தோபய ஸூ யகா என்னும் அது அளவாக
அவர்கள் யுடைய பிராதி கூல்ய அதிசயத்தை சொல்லி
தானஹமத விஷத கரூரான சம்சாரேஷூ நாரத மான ஷிபாமயஜசரமசுபா

நா ஸூ ரிஷி வேவ யோ நிஷூ -என்றும் அருளிச் செய்கையாலே
ஆகையால் அநுமத தருதவமே சர்வ சாதாரணம் பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும்
கருத பிரயதாநா பேஷூ சது -என்கிற ஸூ தரத்திலே
இது எல்லாம் ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம் -என்று அருளிச் செய்தது –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை-என்று
பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி
ஜ்ஞானம் மாதரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஜ்ஞாத்ருவ கதன அநந்தரம்
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே
அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வரும் என்னும் இடத்தை தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து
அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப பிரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு யுண்டான கர்த்ருத்வம் தான்
சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீநமாய் இருக்கும் என்று
நிகமித்தார் ஆயிற்று
இது எல்லாம் ஆத்மாவினுடைய ஞான ஆஸ்ரயம் அடியாக வந்தது இ றே-

———————————————————————————-

சூர்ணிகை -36-

அவதாரிகை –
இப்படி ஆத்மா ஞான ஆஸ்ரயமாக இருக்குமாகில்
யோ விஞ்ஞானே திஷ்ட்டன –
விஞ்ஞானமய
விஞ்ஞானம் யஜ்ஞமதனுதே
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தாதா –
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏத புத்தய
விஞ்ஞானம் பரமார்த்ததோ ஹி தவைதி நோய தயதாசின-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாஸ்த்ரங்களில் இவனை ஞானம் என்று
சொல்லுவான் என் என்கிற
ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார்

ஞான
ஆச்ரயமாகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஞானவான் என்று
சொல்லுவான்
என் என்னில்

—————————————————————————————–

சூர்ணிகை -37

இப்படி சாஸ்திரங்கள் சொல்லுகைக்கு மூலம்
இன்னது
என்கிறார் –

ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிகையாலும்
ஜ்ஞானம்
சாரபூத குணமாய்
நிரூபக தர்மமே
இருக்கையாலும் -சொல்லிற்று

அதாவது
ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் பிரகாசகமாய் இருக்குமோபாதி
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும்
ஞானம் இவனுக்கு சாரபூத குணம் ஆகையாலே
ஸ்வரூப அனுபநதிதவேன
ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
சொல்லிற்று என்கை –
இது தான்
தத குண சார தவாதது ததவயபதேச பராஜ்ஞத்வ யாவதாத்மபாவித வசச ந தோஷச ததாத ச நாத -என்கிற
ஸூத்ரத்த்வத்தாலும் சொல்லப் பட்டது –
ஞான மாத்திர வ்யபேதேசஸ்து ஜ்ஞானசய
பிரதான குணத்வாத் ஸ்வரூப அனுப நதி தவேன
ஸ்வரூப நிரூபக குணதவாத ஆத்மா ச்வரூபச்ய ஞானவத
ஸ்வ பிரகாசத்வா வோபபதாயதே -என்று இறே
தீபத்திலும் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –

————————————————————————————-

சூர்ணிகை -38-

நியாமகமாகை
ஆவது
ஈஸ்வர புத்திய
அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
யுண்டாம்படி
இருக்கை —

அதாவது
ஆத்மனி திஷ்ட்டட ந நாத மநோ ந்த ரோயமாதமா
ந வேத யச்யாத்மா சரீரம் அயம் ஆத்மானம் அநதரோ யமயதி
சத ஆத்மா நதாயாமயமா ருத -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அந்தராத்மாதயா நின்று நியமிக்கை-
ஈஸ்வரனுக்கு சர்வ காலீனம் ஆகையாலே
இவ்வாத்மா வஸ்து அவனுக்கு நியாமகை யாவது
சரீரத்தின் யுடைய சகல பிரவ்ருதிகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாமா போலே
சரீரபூதமான இவ்வாதம வஸ்துவினுடைய சகல வியாபாரங்களும்
சரீரியான பரமாத்வானுடைய புத்யா அதீநம் படி யுண்டாய் இருக்கை என்றபடி-

இப்படி
தச் சரீரதயா தத் அதீன சகல பிரவர்திகன் ஆனாலும்
அசேதனமான சரீரம் போலே
தானாக ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாத படி இருக்கை அன்றிக்கே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை
ஸ்வா பாவிக தர்மங்களாக யுடையவன் ஆகையாலே
ஜ்ஞான சிகிரிஷா பிரயத்ன பூர்வக பரவ்ருதி ஷமனாய் இருக்கையாலும்
சகல பிரவ்ருதிகளும் இவனுடைய பிரதம பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலும்
விதி நிஷேத சாஸ்திர வையர்தயம் இல்லை-

இவனுடைய பிரவ்ருத்தி மூலமாக ஈஸ்வரன் பண்ணும்
நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கும்
தத் அனுகுணமான
பல பிரதானத்துக்கும் விரோதம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது –

—————————————————————————————

சூர்ணிகை -39-

தார்யம் ஆகையாவது
அவனுடைய
ஸ்வரூப
சங்கல்பங்களை
ஒழிந்த போது
தன சத்தை இல்லையாம்படி
இருக்கை –

அதாவது
ஏஷ சேதோ விதாரண –
ஏதத் சர்வம் பரஜ்ஞ்ஞாதே பிரதிஷ்ட்டிதம்
ஏவ மேவ சாஸ்மி நனாதமநி சர்வாணி பூதானி சர்வ ஏவா தமானஸ் சமாபித-
ஏதச்யவா அஷரச்ய பிரசாசதே கார்கி ஸூ ர்யா சந்திர மசௌ விதருதௌதிஷ்டத -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் சகல சேதன அசேதனங்களையும் பற்றி நியமேன தாரகன் ஆகையாலே
இவ்வாத்மவஸ்து தாரயமாகை யாவது
தனக்கு நியமேன தாரகமாய்க் கொண்டு
தன் சத்தா ஹேதுவாய் இருக்கிற
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்தையும்
இந்த ஸ்வரூபாசரீரத்வத்துக்கும் சதா அனுவர்த்திரூபையான ஸ்திதிக்கும்
ஹேதுவாய் இருந்துள்ள அவனுடைய நித்ய இச்சா கார்ய
சங்கல்பத்தையும் ஒழிந்த போது
தன் சத்தா ஹாநி பிறக்கும்படி இருக்கை
என்றபடி-

இப்படி
தார்யா வஸ்துக்களை ஸ்வரூப சங்கல்பங்கள் இரண்டாலும் தரிக்கும் என்னும் இடமும்
அபியுக்தராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது -எங்கனே என்னில்
ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவயவஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாய் இருக்கும்
அவ்வவோ தரவ்யங்களை ஆசரித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வவோ த்ரவ்யத்வாரா ஆதாரமாய் இருக்கும்
ஜீவர்களாலே தரிகாப் படும் சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று
சிலர் சொல்லுவார்கள்
ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாம் என்று சில ஆச்சார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஆச்ரயதைப் பற்ற
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே
இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள்-

சர்வ வஸ்துக்களின் யுடையவும் சத்தை சங்கல்ப அதீநம் ஆகையாவது
அநிதயங்கள் அநித இச்சையாலே உதபனநன்களாயும்
நிதயங்கள் நித்யா ஆச்ச்சாசிதங்களாயும்-இருக்கை
இவ்வர்த்தத்தை
இச்சாத ஏவ தவ விசவ பதார்த்தத சத்தா -என்கிற ஸ்லோகத்தாலே அபியுக்தர் விவேகித்தார்-

இத்தாலே
சர்வத்தினுடைய சத்தா அனுவர்த்தி ரூபையான ஸ்திதியும்
ஈஸ்வர இச்சாதீன படியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்பாசரிதம் என்று சொல்கிறது
குரு த்ரவ்யங்கள் சங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுமது
தயௌ ச சசனதராகக நஷத்ராகம திசோ பூர் மகோததி வாசூதேவச்ய வீர்யேண விக்ருதானி மகாத்மான
என்கிறபடியே ஒரோ தேச விசேஷங்களில் விழாதபடி நிறுத்துகைப் பற்ற
இப்படி இச்சாதீன சததாச்திதி பிரவ்ருதிகளான வஸ்துகளுக்கு
பரமாத்மா ஸ்வரூபம் என் செய்கிறது -என்னில்
பரமாத்வானுடைய இச்சை இவ்வஸ்துக்களை பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும்
இப்படி சர்வ வஸ்துவையும் ஈஸ்வர ஸ்வரூப அதீனமாய்
ஈஸ்வர சசாதீனமுமாய்
லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூப ஆச்ரயமாய் சங்கல்ப ஆச்ரயமாய் இருக்கக் காணா நின்றோம்
இவன் இருந்த காலம் இருந்து
இவன் விட்ட போது ஒழிகையாலே
ஸ்வரூப ஆஸ்ரிதம்
இவ்வாதம சங்கல்பம் இல்லாத
ஸூ ஷூ பதாயதய அவஸ்தைகளில் தெளிவது
ஜாகராதி தசைகளிலே சங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும் போது
சங்கல்பாஸ்ரிதம் என்னக் கடவது
என்று இப்படி ரகஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே-

———————————————————————————————-

சூர்ணிகை -40-

சேஷமாகை யாவது
சந்தன
குஸூம
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு
இஷ்ட விநியோக
அர்ஹயமாய் இருக்கை-

அதாவது –
சந்தன குஸூமாதி பதார்த்தங்கள் -தனக்கு என இருப்பதோர் ஆகாரம் இன்றிக்கே
பூசுமவனுக்கும்
சூடுமவனுக்கும்
உறுப்பாக
விநியோகம் கொள்ளுமவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு
தான் உகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்குமா போலே –
சேதன வஸ்துவாய் இருக்க
ஸ்வபிரயோஜன கந்தம் இன்றிக்கே
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ வைலஷண்யம் எல்லாவற்றாலும்
சேஷிக்கு அதிசயகரமாய்
விநியோக தசையில் அவனுக்கு தானும் விநியோகம் கொண்டு
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே
தான் உகந்தவர்களுக்கு எல்லாம் உறுபபாகலாம் படி
வேண்டிய விநியோகத்துக்கு யோக்யமாய் இருக்கை -என்றபடி –

சித் த்ரவ்யத்துக்கு அசித் த்ரவ்யங்களை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று
பாரதந்த்ர்ய அதிசயம் சொல்லுகைக்காக இறே
ஆத்மா ஸ்வரூபம் யாதாத்மயம் இது வாகையாலே இறே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று ஆழ்வார் அருளிச் செய்தது –

பரகத அதிசய ஆதான இச்சயா
உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பரச சேஷீ
என்று சேஷி சேஷத்வ லஷணம்
ஸ்ரீ பாஷ்யகாரராலே அருளிச் செய்யப் பட்டது –
இந்த லஷண வாக்யார்த்தத்தை அனுசரித்துக் கொண்டு
இச்சயா யது பாதேயம் யஸ்யாதி சயசிதயயே உபய அனுபயைகை கஜூ ஷா தௌ சேஷ சேஷி நௌ-என்று
சேஷ சேஷித்வ லஷணத்தை
அபியுக்தர் ஆனவர்களும் சொல்லி வைத்தார்கள்-

யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சபதேன கததயதே ஈஸ்வரேண ஜகத் சர்வம்
யதேஷ்டம் விநியுஜயதே -என்று சொல்லுகையாலே
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹத்வம்-எனபது சாஸ்திர சித்தம் –

இப்படி ஈஸ்வர விஷயத்தில் ஆத்மாவுக்கு யுண்டான சேஷத்வம் தான்
யச்யாச்யயாமி ந தமனதரேமி-என்றும்
பரவாநச்மி காகுத்சதத தவயி வாஷசதமி சதிதே-என்றும்
தாஸ பூதாஸ சவதச சர்வே ஹா தமான பரமாத்மன நாதயதா லஷணம்
தேஷாம் பந்தே மோஷ ததைவ ச -என்றும்
சவோஜ ஜீவ நேச்சா யதி தே ஆத்மதாச்யம் ஹரேச
ஸ்வா மயம் ஸ்வ பாவஞ்ச சதா சமர -என்றும்
சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் படா நின்றது-

—————————————————————————————-

சூர்ணிகை -41-

அவதாரிகை –

ஒருவனுக்கு க்ருஹ ஷேத்ராதிகளும் சேஷமாய்
ஸ்வ சரீரமும் சேஷமாய் இருக்கச் செய்தே
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் சித்த்யாதிகளுக்கு அர்ஹமாய்
சரீரம் அவற்றுக்கு அனர்ஹமாய் இருக்கக் காண்கையாலே
இவ்வாதம வஸ்து ஈஸ்வரனுக்கு சேஷமாம் இடத்தில்
இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இதுதான் –
க்ருஹ ஷேத்திர
புத்ர களத்ராதிகளைப் போலே
ப்ருதக் சித்யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே
சரீரம் போலே
அவற்றுக்கு
அயோக்யமாய் இருக்கை –

இது தான் என்கிறது –
இப்படி ஈஸ்வர சேஷமாகச் சொல்லப் பட்ட ஆத்மவஸ்து தான் -என்றபடி –
க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே -என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தாலே
தன தான்ய ஆராம தாஸ தாசி வர்கங்களைச் சொல்லுகிறது –
ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே -என்கிற இடத்தில்
ப்ருதக் சித்தி யாவது சஹோபலம்ப நியமம் இன்றிக்கே சேஷியானவனை ஒழியவும் தான் சித்திக்கை
ஆதி சப்தத்தாலே அநேக சாதாரணத்வத்தைச் சொல்லுகிறது
கிருஹ ஷேத்திர தாஸ தாசே பரப்ருதிகள் பித்ரு புத்ர ஜ்யேஷ்டக நிஷ்டாதிகளுக்கு சாதாரண சேஷமாய் இருக்கும்
களதரமும்-சோம பரதமோ விவிதே கநதாவோ விவித உத்தர தருதீயோக நிஷ்டே பதி சதுரீ யாசதே மனுஷயஜா -என்று
பாணிக்ரஹண அனந்தரம் ஷேமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே
அநேக சாதாரணமாய் இருக்கும்
இப்படி அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை -யாவது
அப்ருதுக் சித்தமாய் அநந்ய சாதாரணமான சரீரம் போலே
ப்ருதுக் சித்தி யாதிகள் ஆனவற்றுக்கு தான் அநர்ஹமாய் இருக்கை
ப்ருதுக் சித்தி யாதிகளுக்கு -என்று பாடம் ஆகில்
ஆதி சப்தத்தால்
பருதகுபலபதியை சொல்லுகிறது
அப்போதைக்கு இதுதான் க்ருஹ ஷேத்திர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே
பிரிந்து நிற்கைக்கும்
பிரிந்து தோற்றுகைக்கும்
அர்ஹமாம்படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே தத் உபாயா நாஹமாய் இருக்கும் என்று பொருளாகக் கடவது –
அயமேவாதம சரீரபாவ
ப்ருதக் சித்திய நாஹாதார தேய பாவ
நியந்த்ரு நியாமய பாவ
சேஷ சேஷி பாவ ச -என்றும்
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாதமனா
ச்வார்த்தே நியந்தும்
தாரயிதும் ச சகயம்
தத் சேஷை தைக ஸ்வரூபம் ச ததச்ய சரீரம் -என்றும்
வேதார்த்த சங்க்ரஹத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும்

ஆத்மா சரீர பாவ லஷணமாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்த
நியந்த்ரு நியாமாக பாவம்
ஆதார ஆதேய பாவம்
சேஷ சேஷி பாவம்
ஆகிற மூன்றும் இவ்விடத்திலே சொல்லப் படுகையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷரம் சரீரம் -என்று இத்யாதி
சுருதி சித்தமான
ஆத்மாவினுடைய பரமாத்மா சரீரதவம் அர்த்ததா சித்தமாயிற்று –

ஆக கீழே ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய சோதனம் பண்ணப் பட்டது-

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: